LIC-யின் புதிய மியூச்சுவல் பண்ட் முதலீட்டு திட்டம்.. அக்டோபர் 6 அன்று தொடங்கவுள்ள NFO..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய காலமாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் ஆர்வமானது அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகளவில் லாபம் கிடைக்கும் முதலீடுகள் எது என ஆராய ஆரம்பித்துள்ளனர்.

 

அப்படி அதிகளவில் நீண்டகால நோக்கில் லாபம் பெற மியூச்சுவல் ஃபண்ட் சிறந்த ஆப்சனாக பார்க்கப்படுகிறது.

இந்த மியூச்சுவல் ஃபண்டில் NFO பற்றி தெரிந்து இருக்கலாம். இது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் சிறந்த சான்ஸ் ஆகும்.

தினமும் ரூ.333 முதலீடு.. 26 வருடங்களில் ரூ.9 கோடிக்கும் மேல்.. மியூச்சுவல் ஃபண்ட் ஆச்சரியம்! தினமும் ரூ.333 முதலீடு.. 26 வருடங்களில் ரூ.9 கோடிக்கும் மேல்.. மியூச்சுவல் ஃபண்ட் ஆச்சரியம்!

NFO அல்லது நியூ ஃபண்ட் ஆஃபர் என்றால் என்ன?

NFO அல்லது நியூ ஃபண்ட் ஆஃபர் என்றால் என்ன?

நியூ ஃபண்ட் ஆஃபர் என்பது அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் (AMC) மூலம் தொடங்கப்பட்ட புதிய திட்டமாகும். இது பங்கு சந்தையில் வெளியிடப்படும் ஐபிஓ போன்றது எனலாம். மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ்கள் தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகளை அதிகரிக்க, புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.

எல்ஐசி மியூச்சுவல் பண்ட் NFO

எல்ஐசி மியூச்சுவல் பண்ட் NFO

அந்த வகையில் எல்ஐசி மியூச்சுவல் பண்ட் அறிமுகப்படுத்த உள்ள திட்டம் தான் LICMF Multicap Fund அல்லது LICMF Multicap ஆகும். இந்த திட்டமானது அக்டோபர் 6 அன்று தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டம் அக்டோபர் 20 அன்று முடிவைடையவுள்ளது. இந்த நியூ ஃபண்ட் ஆஃபர் 15 நாட்கள் அமலில் இருக்கும். அதன் பிறகு இந்த திட்டம் நவம்பர் 2 அன்று மீண்டும் சந்தாதாரர்களுக்கு வாங்க தொடங்கப்படவுள்ளது.

எவ்வளவு குறைந்தபட்ச முதலீடு?
 

எவ்வளவு குறைந்தபட்ச முதலீடு?

இந்த LICMF Multicap Fundல் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். இந்த மல்டிகேப் ஃபண்ட் என்பது ஒரு திறந்த நிலை ஈக்விட்டி சார்ந்த ஃபண்டாகும். இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது சந்தையில் பரவலாக முதலீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது. அறிக்கையின் படி 25% முதலீடானது லார்ஜ் மற்றும் மிட் கேப் ஃபண்டுகள் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும். மீதமுள்ள 25% , நிதி மேலாளரின் விருப்பப்படி சந்தையில் முதலீடு செயப்படும் என அறிவித்துள்ளது.

 கட்டணம் எவ்வளவு?

கட்டணம் எவ்வளவு?

தற்போது தொடக்கம் என்ற நிலையில் இந்த ஃபண்டினை வாங்க நுழைவு கட்டணம் இல்லை. இதே வெளியேறும் கட்டணம் என்பது 12 மாதங்களுக்குள் வெளியேறினால் 12% இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற விருப்பமா?

மாற விருப்பமா?


இந்த NFO -வில் எல்ஐசி மியூச்சுவல் ஃபண்டின் தற்போதைய திட்டங்களிலிருந்து (லாக்-இன் காலம் முடிந்திருந்தால்) முதலீட்டாளர்கள், இந்த திட்டத்திற்கு மாற விரும்பினால், குறைந்தபட்சத் தொகை ரூ. 5,000 செலுத்த வேண்டும். எல்ஐசி மியூச்சுவல் ஃபண்டின் தற்போதைய திட்டங்களில் இருந்து அனைத்து யூனிட்களையும், இந்த திட்டத்திற்கு மாற்ற முதலீட்டாளர்கள் தேர்வு செய்தால், குறைந்தபட்ச தொகை தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC Mutual Fund plans to launch NFO for subscription on October 6, 2022

LIC mutual fund announced the launch of LICMF Multicap Fund or LICMF Multicap NFO will open October 6, it would end on October 20,2022
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X