ரூ.13 கோடியா.. மாதம் 10 ஆயிரம் முதலீட்டில் இது சாத்தியமா.. அப்படி என்ன முதலீடு.. எவ்வளவு ஆண்டுகள்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதம் 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டின் மூலம் 13 கோடி ரூபாய் கார்ப்பஸினை உருவாக்க முடியுமா? இது எப்படி சாத்தியம். எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டியிருக்கும்? என்ன திட்டம்? வாருங்கள் பார்க்கலாம்

 

பொதுவாக கோடிக் கணக்கில் மிகப்பெரிய கார்ப்பஸ் இலக்கு எனில், அதற்கு மியூச்சுவல் பண்டுகள் தான் மிகச் சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

அதிலும் சாமானியர்களும் பலன் பெறும் விதமாக சிஸ்டமேட்டிக் இன்வென்ஸ்ட்மென்ட் பிளான் (SIP) சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்களில் காலாண்டுக்கு ஒரு முறையோ அல்லது மாதந்தோறும் முதலீடு செய்து கொள்ளலாம். இது நீண்டகால நோக்கில் பயனுள்ள ஒரு திட்டமாக இருக்கும்.

 மாதம் ரூ. 1000 முதலீட்டின் மூலம் கோடீஸ்வரர் ஆவது எப்படி.. எத்தனை ஆண்டுகள் முதலீடு! மாதம் ரூ. 1000 முதலீட்டின் மூலம் கோடீஸ்வரர் ஆவது எப்படி.. எத்தனை ஆண்டுகள் முதலீடு!

SIP எனும் மூன்றெழுத்து மந்திரம்

SIP எனும் மூன்றெழுத்து மந்திரம்

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த SIP திட்டத்தின் மூலம் மாதம் 500 ரூபாயில் இருந்து கூட முதலீடு செய்து கொள்ள முடியும். இந்த SIP என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் மூலமாக மட்டுமே கோடிக்கணக்கில் என கார்ப்பஸ் இலக்கினை எளிதில் அடைய முடியும். இது சாமானியர்களுக்கும் ஏற்றதொரு திட்டமாகவும் உள்ளது.

ஃபிராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட்

ஃபிராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட்

ஃபிராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட் இன்று இதன் கீழ் உள்ள சொத்து மேலாண்மை மதிப்பு (AUM), 7370.32 கோடி ரூபாயாகும். இதன் என்ஏவி விகிதம் 151.41 ரூபாயாகும். இந்த ஃபண்டானது அக்டோபர் 1993ல் தொடங்கப்பட்டது. கடந்த 1 வருடத்தில் இந்த ஃபண்ட் - 7.55% சரிவினைக் தான் கண்டுள்ளது.

பண்டு ஏற்றம்
 

பண்டு ஏற்றம்

இதே கடந்த மூன்று ஆண்டுகளில் 18.04% ஏற்றத்திற்கும், கடந்த 5 ஆண்டுகளில் 9.88% ஏற்றத்திலும், இந்த ஃபண்ட் தொடக்கப்பட்டதில் 18.94% ஏற்றத்திலும் காணப்படுகின்றது. இதே ஃபண்டின் செலவின விகிதம் 1.9% ஆகவும் உள்ளது. இந்த ஃபண்டில் மொத்தமாக முதலீடு செய்தால் குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். அதன் பிறகு கூடுதலாக 1000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே எஸ் ஐ பி எனில் மாதம் 500 ரூபாயில் இருந்து கூட முதலீடு செய்து கொள்ளலாம்.

ஹோல்டிங் நிறுவனங்கள்

ஹோல்டிங் நிறுவனங்கள்

இந்த ஃபண்டில் ஃபெடரல் பாங்க் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, தீபக் நைட்ரேட், சிட்டி யூனியன் வங்கி, அப்பல்லோ டயர்ஸ், டென்ட் லிமிடெட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், கொரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள், இந்த ஃபண்டில் சிறந்த ஹோல்டிங் நிறுவனங்களாக உள்ளன.

 நீண்டகால நோக்கில் பலன்

நீண்டகால நோக்கில் பலன்

இந்த ஃபண்ட் தொடர்ந்து 20 ஆண்டுகளாக டிவிடெண்டினை அறிவித்து வருகின்றது. இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஆக திருமணம், கல்வி, வீடு கட்ட அல்லது வாங்க இது சிறந்த ஆப்சனாகவும் பார்க்கப்படுகிறது.

 ஓராண்டு நிலவரம் எப்படி?

ஓராண்டு நிலவரம் எப்படி?

இந்த ஃபிராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்டில் மாத மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் 1.20 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இதன் மூலம் உங்களது கார்பஸ் 1.28 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும்.

இதே கடந்த 3 ஆண்டுகளில் முதலீடு செய்திருந்தால், 3.60 லட்சம் ரூபாயில் இருந்து, 4.92 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும். இந்த கால கட்டத்தில் 21.39% அதிகரித்துள்ளது.

7 ஆண்டு நிலவரம்?

7 ஆண்டு நிலவரம்?

கடந்த 5 ஆண்டுகளில் 15.56% அதிகரித்துள்ளது. இதன் மூலம் 5 ஆண்டுகளில் 6 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இதன் மூலம் 8.85 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும். இதே கடந்த 7 ஆண்டுகளில் 13.82% அதிகரித்து, வருடாந்திர வருவாய் விகிதம் அதிகரித்துள்ளது. இதில் 10,000 ரூபாயினை முதலீடு செய்திருந்தால் மாதம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து, 8.40 லட்சம் ரூபாயில் இருந்து, 13.74 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும்.

10 ஆண்டுகளில் எப்படி?

10 ஆண்டுகளில் எப்படி?

10 ஆண்டு நிலவரப்படி பார்க்கும்போது, 15.59% லாபத்தில் இருந்தது. இதில் எஸ்ஐபி மூலம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யும்பட்சத்தில், 12 லட்சம் ரூபாயில் இருந்து, 27.15 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த 15 ஆண்டுகளில் 16.57% வருமானம் கொடுத்துள்ளது. இதன் மூலம் 18 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்போம். உங்களது கார்ப்பஸ் இலக்கு 70.70 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும்.

கோடிக்கணக்கில் எப்படி?

கோடிக்கணக்கில் எப்படி?

இதே இந்த ஃபண்ட் தொடக்கப்பட்டத்தில் இருந்து மாதம் 10, 000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று இதன் மதிப்பு 13 கோடி ரூபாயாகும். இந்த ஃபண்டில் 34.70 லட்சம் ரூபாயாக முதலீடு செய்திருப்பீர்கள்.

ஆக மியூச்சுவல் ஃபண்டுகள் தான் நீண்டகால நோக்கில் சிறந்த முதலீட்டு ஆப்சனாகவே பார்க்கப்படுகின்றது. ஆக கோடிக்கணக்கில் கார்பஸ் இலக்கினை அடைய இதுவே சிறந்த ஆப்சனாகவும் பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SIP of Rs10,000 turns into Rs13 crore : How many years to invest?

Can I build a corpus of Rs 13 crore with an investment of Rs 10,000 per month? How is this possible? How many years should the investment be?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X