பணத்தை சேமிப்பது, முதலீடு செய்வது.. இரண்டில் எது நல்லது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொருவரும் தங்களது எதிர்கால நன்மைக்காக பணத்தை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டு வருவார்கள் என்பது தெரிந்ததே.

ஆனால் அதே நேரத்தில் பணத்தை சேமிப்பதற்கு பதிலாக பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்தால் ஏற்படும் வித்தியாசம் மிகவும் அபாரமானது.

பணத்தை சேமித்தால் நாம் சேமித்த பணம் மட்டுமே இருக்கும் என்பதும் முதலீடு செய்தால் அந்த பணம் குட்டி போட்டு வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் அல்லது கோல்ட் ஃபண்ட்: எதில் முதலீடு செய்வது சிறந்தது?தங்கம் அல்லது கோல்ட் ஃபண்ட்: எதில் முதலீடு செய்வது சிறந்தது?

சேமிப்பு - முதலீடு

சேமிப்பு - முதலீடு

நமது முன்னோர்கள் பணத்தை சேமித்து வைக்கவேண்டும் என்றும் அப்போது தான் ஓய்வு பெறும் காலங்களில் நிம்மதியாக வாழ முடியும் என்றும் நமக்கு அறிவுரை கூறி இருப்பார்கள் என்பதை பார்த்து இருக்கிறோம். ஆனால் அந்த காலத்தில் முதலீடு செய்வதற்கு பெரிய அளவில் வழிமுறைகள் இல்லை என்பதால் முன்னோர்கள் அவ்வாறு சொல்லி இருக்கிறார்கள். ஆனால் தற்போது பணத்தை சேமிப்பதற்கு பதிலாக முதலீடு செய்தால் அந்த பணம் சில மடங்கு முதல் பல மடங்கு பெருகி நமக்கு மிகப்பெரிய லாபத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்டியல் சேமிப்பு

உண்டியல் சேமிப்பு

நாம் தினமும் அல்லது ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை உண்டியலில் போட்டு சேமித்தால் நாம் எவ்வளவு பணம் போட்டு வைத்தோமோ அவ்வளவுதான் கிடைக்கும். அதே போல் ஒவ்வொரு மாதமும் நாம் நமது வங்கி சேமிப்பு கணக்கில் பணம் சேமித்து வந்தாலும் கிட்டத்தட்ட நாம் சேமித்த பணம் தான் இருக்கும்.

சேமிப்புக்கு பதில் முதலீடு

சேமிப்புக்கு பதில் முதலீடு

ஆனால் அதே நேரத்தில் உண்டியலில் பணத்தை போடுவதற்கு பதிலாக அல்லது வங்கி சேமிப்பு கணக்கில் சேமிப்பதற்கு பதிலாக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தால் அந்த முதலீடு நமது ஓய்வு காலத்தில் பல மடங்கு பெருகி நமக்கு மிகப்பெரிய லாபத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஸ்க்

ரிஸ்க்

ஒரு கிரிக்கெட் வீரர் தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே குறியாக இருக்க கூடாது. அவர் சில ரிஸ்க்குகளை எடுத்து ரன்களையும் அடிக்க வேண்டும். அவ்வாறு ரன்களை அடித்தால் மட்டுமே வெற்றி இலக்கை அடைய முடியும். அதே போல் தான் நமது பணத்தை நாம் காப்பாற்றிக் கொண்டால் மட்டும் போதாது. அந்த பணத்தை பெருக்கிக் கொள்வதற்கான வழியையும் கண்டுபிடிக்க வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்ப்பதற்கு பதிலாக அதே தொகையை ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட முதலீட்டில் நாம் முதலீடு செய்தால் அந்த முதலீடு நமக்கு 10 வருடம் அல்லது 20 வருடம் கழித்து நாம் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும். இவ்வாறான முதலீட்டில் நாம் சில ரிஸ்குகளை சந்திக்க வேண்டியிருந்தாலும் நீண்டகால முதலீடு செய்பவர்கள் ரிஸ்குகள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is the difference between Savings and Investment?

It is known that everyone is advised to save money for their future benefit.But at the same time, instead of saving money, investing little by little can make a huge difference. It is important to note that if we save money, we only have the money we have saved and if we invest, that money keeps growing.
Story first published: Wednesday, October 19, 2022, 6:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X