2020ல் பட்டையை கிளப்பிய சிறந்த லாபம் கொடுத்த சில மியூச்சுவல் ஃபண்டுகள்...!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக மியூச்சுவல் ஃபண்டுகள் என்றாலே பாதுகாப்பான ஒன்றாக கருதப்படுகிறது. அதோடு நல்ல கணிசமான வருவாயினை தரும் நல்ல முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

 

இதனால் இந்தியாவில் நாளுக்கு நாள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுகள் அதிகரித்து வருவதனையும் பார்க்க முடிகிறது.

அதிலும் நீண்டகாலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது என்பது மிக நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்னும் 20 நாட்களே இந்த வருடம் முடியவுள்ள நிலையில், 2020ல் சிறந்த லாபம் கொடுத்த ஃபண்டுகளை பற்றித் தான் பார்க்க போகிறோம்.

கிடு கிடு ஏற்றத்தில் கச்சா எண்ணெய் விலை.. 9 மாதங்களுக்கு பிறகு தொட்ட விலை.. என்ன காரணம்..!

வருமானம் தரக்கூடிய ஃபண்டுகள்

வருமானம் தரக்கூடிய ஃபண்டுகள்

நாட்டில் பல்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. எனினும் மருத்துவ துறை சார்ந்த ஃபண்டுகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்புண்டு. ஏனெனில் மருத்துவம் சார்ந்த பங்குகளில் இந்த முதலீடுகள் செய்யப்படுவதால், நிலையான வருமானம் கொடுக்கும் பண்டுகளாக உள்ளன. இதனாலேயே முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த ஃபண்டுகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்புள்ளது.

டிஎஸ்பி ஹெல்த்கேர் ஃபண்ட்

டிஎஸ்பி ஹெல்த்கேர் ஃபண்ட்

அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் முதல் ஃபண்ட் டிஎஸ்பி ஹெல்த்கேர் ஃபண்ட்(DSP healthcare Fund). இந்த ஹெல்த்கேர் ஃபண்ட் டிசம்பர் 11, 2020 நிலவரப்படி, 80 சதவீதம் லாபம் கண்டுள்ளது. கிட்டதட்ட முதலீட்டாளர்களின் நிதியினை இரட்டிப்பாக்குவதற்கு அருகில் உள்ளது. இது ஒரு தீமேட்டிக் வகையினை சேர்ந்த ஃபண்ட் ஆகும். இந்த ஃபன்ட் போர்ட்போலியோவில் சிப்லா, டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், ஐபிசிஏ உள்ளிட்ட பங்குகள் உள்ளன.

Quant Small cap fundல் என்ன ரிட்டர்ன்?
 

Quant Small cap fundல் என்ன ரிட்டர்ன்?

ஸ்மால் கேப் வகையை சேர்ந்த Quant Small cap fund ஆனது 1 வருடத்தில் 76 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. இதே காலகட்டத்தில் நிஃப்டி 50 கூட 25 சதவீத லாபத்தினை தான் கொடுத்துள்ளது. இந்த ஃபண்டினை பொறுத்த வரையில் ரிஸ்கும் சற்று அதிகம். எனினும் கொரோனா நெருக்கடி காலத்தில் கூட நல்ல லாபத்தினை கொடுத்துள்ளன. இந்த ஃபண்டின் போர்ட்போலியோவில், மஜெஸ்கோ, சன் பார்மா, ஸ்டைலம், டாடா ஸ்டீல், பிடிசி இந்தியா உள்ளிட்ட பங்குகள் அடங்கும்.

மிரே அசெட் ஹெல்த்கேர் ஃபண்டின் நன்மைகள்

மிரே அசெட் ஹெல்த்கேர் ஃபண்டின் நன்மைகள்

2008 ஆண்டில், இந்த ஃபண்ட் துவங்கப்பட்டது. இந்த ஃபண்ட் கடந்த ஒரு வருடத்தில் 74% லாபம் கொடுத்துள்ளது. இதே பெஞ்ச் மார்க்கில் உள்ள மற்ற ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது நல்ல லாபம் கொடுத்துள்ளது. இந்த திட்டத்தின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு 1097 கோடி ரூபாயாகும்.

இந்த ஃபண்ட் போர்ட்போலியோவில் டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், சன் பார்மா, டிவிஸ் லேப், சிப்லா, ஐபிசிஏ உள்ளிட்ட பங்குகள் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Year end 2020: Highest return mutual funds for year 2020

Investment updates.. Year end 2020: Highest return mutual funds for year 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X