இந்தியா மீது வரி விதிக்கும் முடிவில் அமெரிக்கா.. ஜோ பிடன் வந்ததும் இப்படியா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய அரசு வெளிநாட்டு இண்டர்நெட் நிறுவனங்கள் இந்தியாவில் செய்யும் வர்த்தகம் மற்றும் சேவை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதித்த நிலையில் அமெரிக்க அரசு இந்தியாவிற்கு எதிராக வரி விதிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் ஜோ பிடன் வெற்றி பெற்ற பின் அமெரிக்கா - இந்தியா இடையிலான நட்புறவு பெரிய அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்க அரசு இந்தியா மீது வரி விதிக்கத் திட்டமிட்டு வருகிறது.

இந்த டிஜிட்டல் வரி விதிப்பில் அமெரிக்காவுக்கு இந்தியா உடன் மட்டும் தான் பிரச்சனையா..?

3 நாடுகள்

3 நாடுகள்

வெளிநாட்டு இண்டர்நெட் நிறுவனங்கள் செய்யும் வர்த்தகம் மற்றும் சேவை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு உள்நாட்டு வரி விதித்தது இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகள் இதேபோன்று டிஜிட்டல் சேவை வரியை விதித்துள்ளது.

இந்த வகையில் ஆஸ்திரியா, இத்தாலி, இந்தியா ஆகிய 3 நாடுகள் மீதான முடிவை அமெரிக்க அரசு அடுத்த சில நாட்களில் எடுக்க உள்ளது.

 

டிஜிட்டல் சேவை வரி

டிஜிட்டல் சேவை வரி

ஆஸ்திரியா, இத்தாலி, இந்தியா ஆகிய 3 நாடுகளும் இந்த ஆண்டுப் பேஸ்புக், கூகிள் போன்ற பல இண்டர்நெட் நிறுவனங்களின் வர்த்தகத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு டிஜிட்டல் சேவை வரி வரியை விதித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க அரசு முதற்கட்டமாக இந்த 3 நாட்கள் மீது வரி விதிப்பு குறித்து முடிவு செய்ய உள்ளது.

இதேபோன்ற வரியை இந்தோனேசியா, பிரிட்டன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் விதித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

ஜூன்

ஜூன்

அமெரிக்க அரசு ஜூன் மாதம் சுமார் 10 நாட்கள் மீது இதுகுறித்த விசாரணையைத் துவங்கியது. அமெரிக்க வர்த்தகச் சட்டம் 1974 கீழ் 301 சட்ட பிரிவின் மூலம் தவறான வர்த்தக முறை பின்பற்றும் நாடுகள் மீது எதிர் நடவடிக்கையை எடுக்க இந்தச் சட்டத்தில் உரிமை உண்டு.

இந்தச் சட்டதிட்டத்தை வைத்துத் தான் டொனால்டு டிர்ம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு சீன பொருட்கள் மீது அறிவு திருட்டுக் குற்றச்சாட்டைச் சுமத்தியது.

 

10 நாடுகள்

10 நாடுகள்

ஆஸ்திரியா, இத்தாலி, இந்தியா உடன் பிரேசில், செக் குடியரசு, இந்தோனேசியா, பிரிட்டன், ஸ்பெயின், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மீது தற்போது அமெரிக்க அரசு வரி விதிக்க ஆலோசனை செய்து வருகிறது.

இதில் ஸ்பெயின் மற்றும் செக் குடியரசு ஜனவரி முதல் அமெரிக்க இண்டர்நெட் நிறுவனங்களிடம் இருந்து டிஜிட்டல் சேவை வரியை வசூலிக்கத் துவங்கியுள்ளது.

 

பிரான்ஸ்

பிரான்ஸ்

கடந்த பிரான்ஸ் விதித்த டிஜிட்டல் சேவை வரி மூலம் அமெரிக்கா பிரான்ஸ் நாட்டின் 2.4 பில்லியன் டாலர் மதிப்பிலான வைன், சீஸ், மற்றும் இதர இறக்குமதி பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பதில் நடவடிக்கையின் மூலம் இரு நாடுகளும் 2020 இறுதி வரையில் இந்தப் புதிய வரி விதிப்புகளை ஒத்திவைத்தது.

 

உலகம் முழுவதும்

உலகம் முழுவதும்

இதேபோல் இந்த டிஜிட்டல் சேவை வரி அனைத்து நாடுகளும் பொருந்தும் என்பதால் Organization for Economic Cooperation and Development OECD அமைப்பின் மூலம் அனைத்து நாடுகளுடன் ஆலோசனை செய்து உலகம் முழுவதும் ஒரே வரி விதிப்பாக அறிவிக்க முயற்சிகள் மேற்கொள்ள வரப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After Joe biden winning us elections US may impose tariffs on India after

After Joe biden winning us elections US may impose tariffs on India after
Story first published: Friday, November 20, 2020, 19:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X