பொருளாதாரத்தை மேம்படுத்த தொடர் வட்டிக் குறைப்பில் சீனா!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்: உலகப் பொருளாதார நாடுகளில் அமெரிக்காவிற்கு இணையாக வளர்ந்து வரும் சீனா, தற்போது அன்னிய முதலீட்டைக் கவர்வதில் தடுமாறுகிறது. இந்நிலையில் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த சீனா கடந்த 8 மாதத்தில் 4வது முறையாகத் தனது வட்டி வகிதத்தைக் குறைத்துள்ளது.

தற்போதைய நிலையில் சீன பொருளாதாரம் 25 வருட பின்னோக்கிய நிலையில் உள்ளதாகச் சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

திட்டங்கள் கைமாறியது..

திட்டங்கள் கைமாறியது..

சீனாவில் அன்னிய முதலீட்டு அளவு குறைந்ததன் மூலம் இந்நாட்டில் கிடைக்கப்பெறும் முக்கிய மற்றும் மிகப்பெரிய உற்பத்தி திட்டங்கள் அனைத்தும், இந்தியா போன்ற வளரும் நாடுகள் பெற்று வருகிறது.

உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு

சீனாவின் மோசமான உள்கட்டமைப்பின் காரணமாக அன்னிய முதலீடு குறைத்துள்ளது. இதனால் இந்நாட்டின் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிப்படைந்தது. இந்நிலையில் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகச் சீனா கடந்த 7 மாதத்தில் 3 முறை வட்டி விகிதம் குறைத்தது மந்தமான நிலையிலேயே உள்ளது.

முதலீட்டைக் கவர இப்படியொரு திட்டம்...

முதலீட்டைக் கவர இப்படியொரு திட்டம்...

கடந்த இரு வாரங்களாகச் சீன பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டு வருவதால், முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கலாம் என்று சர்வதேச சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறனர்.

வட்டி வகிதம்..

வட்டி வகிதம்..

கடனுக்கான (ஒரு வருட) வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்திருக்கிறது. இந்த நடவடிக்கை மூலம் கடனுக்கான வட்டி 4.85 சதவீதமாக இருக்கிறது. அதேபோல டெபாசிட்களுக்கான (ஒரு வருட) வட்டி விகிதமும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 2 சதவீதமாக உள்ளது.

3 முறை வட்டிக் குறைப்பு..

3 முறை வட்டிக் குறைப்பு..

7 மாதங்களுக்கு முன் நவம்பர் 22, மார்ச் 1 மற்றும் மே 11 ஆகிய தேதிகளில் சீனா தனது வட்டி குறைப்பை அறிவித்தது. நான்காவது முறையாகக் கடந்த சனிக்கிழமை வட்டி குறைப்புச் செய்யப்பட்டது. இது நேற்று (ஞாயிறு) முதல் அமலுக்கு வருவதாகச் சீன மத்திய வங்கி அறிவித்தது.

ஜிடிபி

ஜிடிபி


சீனாவின் இரண்டாம் காலாண்டு ஜிடிபி வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் 7 சதவீதத்துக்கும் கீழே வளர்ச்சி இருக்கும் என்று கணித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China central bank eases policy again to support economy

China's central bank cut lending rates for the fourth time since November and trimmed the amount of cash that some banks must hold as reserves.
Story first published: Monday, June 29, 2015, 12:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X