சீனா-வை கட்டம் கட்டி அடிக்கும் அமெரிக்கா.. 13 நிறுவனங்களுக்குத் தடை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனா மீதும் சீன நிறுவனங்கள் மீதும் அமெரிக்காவுக்கு எப்போதுமே ஒரு கண் இருக்கத்தான் செய்கிறது.

டொனால்டு டிரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில் அமெரிக்க அரசு சீனா நிறுவனங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள், நெருக்கடிகள் கொடுக்கப்பட்ட நிலையில், ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பின்பு பல சீன நிறுவனங்கள் மீதான தடையும், பல்வேறு கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டது.

இந்த நிலையில் சீனா - தைவான் பிரச்சனைக்குப் பின்பு மீண்டும் அமெரிக்கா சீனா மீதான நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது, இதேபோல் உக்ரைன் உடனான போரில் ரஷ்யாவுக்குச் சீனா உதவியதும் அமெரிக்காவிற்கு எதிராக அமைந்தது.

இதன் எதிரொலியாகச் சுமார் 13 சீன நிறுவனங்களுக்குத் தற்போது அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.. எதற்காக இந்தத் தடை..?

அடடே இது நல்ல விஷயமாச்சே.. பிஎஸ்இ கொடுத்த சூப்பர் அப்டேட்..! அடடே இது நல்ல விஷயமாச்சே.. பிஎஸ்இ கொடுத்த சூப்பர் அப்டேட்..!

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமெரிக்காவில் முதலீடு செய்யவும், திரட்டவும் ஏற்கனவே பல்வேறு சீன நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ள நிலையில், தற்போது புதிதாக 13 நிறுவனங்களைச் சேர்த்துள்ளது. இதனால் சீன நிறுவனங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளது.

பிளாக்லிஸ்ட்

பிளாக்லிஸ்ட்

அமெரிக்கப் பாதுகாப்புத் துறையை பொறுத்த வரையில் தனது பிளாக்லிஸ்ட்-ல் உள்ள சீன நிறுவனங்கள் அமெரிக்கச் சந்தையில் முதலீட்டை ஈர்த்து சீனா ராணுவத்திற்கு அளிப்பதாகவும் அல்லது சீன ராணுவத்துடன் தொடர்புடையதாகவும் கருதுகிறது. இந்தப் பிளாக்லிஸ்ட்-க்கு டெனால்டு டிரம்ப் காலத்தில் இருந்தே இதே நிலைப்பாடு தான்.

DJI, BGI Genomics மீது தடை
 

DJI, BGI Genomics மீது தடை

தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள பிளாக்லிஸ்ட் பட்டியலில் டிரான் நிறுவனமான DJI, கண்காணிப்பு கருவிகளைத் தயாரிக்கும் Zhejiang Dahua Technology, ஜீன் டேட்டாபேங்க் நிறுவனமான BGI Genomics, ரெயில் டிரான்ஸ்சிட் கருவிகளைத் தயாரிக்கும் CRRC Crop ஆகியவை இந்த 13 நிறுவனங்கள் கொண்ட பட்டியலில் அடக்கம்.

BGI Genomics நிறுவனம்

BGI Genomics நிறுவனம்

கடந்த வருடம் BGI Genomics நிறுவனம் சீன ராணுவத்துடன் இணைந்து மக்கள்தொகையின் பண்புகள் குறித்து ஆய்வு செய்ய ஜெனட்டிக் டேட்டா சேகரிக்கும் பணிகளைச் செய்ததாக ரெயூட்டரஸ் தெரிவித்துள்ளது.

 

ஜோ பைடன்

ஜோ பைடன்

இப்படிக் கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் ஹூவாய் உட்படச் சுமார் 50 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பல்வேறு தடைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பின்பு தடை செய்யப்பட்ட சீன நிறுவனங்கள் மீது எவ்விதமான முதலீடுகளும் செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

USA Joe Biden Govt issues investment ban order on China's BGI Genomics, DJI among the 13 companies

USA Joe Biden Govt issues investment ban order on China's BGI Genomics, DJI among the 13 companies
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X