சரியான பங்கு தரகர்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

Posted By: Yazhini
Subscribe to GoodReturns Tamil

சரியான பங்கு தரகர்களை தேர்ந்தெடுப்பது எப்படி?
பெங்களூர்: இதுவரை பங்கு சந்தையில் முதலீடு செய்யாத மற்றும் முதலீடு செய்ய திட்டம் உள்ளவர்கள் முதல் வேலையாக சரியான பங்கு தரகர்களை தேர்வு செய்வது அவசியம்.

பங்கு தரகர்களை தேர்ந்தெடுக்க பயன்படும் சில குறிப்புகள் வருமாறு,

பங்கு வணிகம்

முதலில், தரகு நிறுவனங்களின் தரகு கட்டண அமைப்புகளை சரியாக புரிந்து கொள்ளவும். வர்த்தகத்திற்கு 0.01 சதவீதமும், பங்குகளை விற்பனை செய்ய 0.10 சதவீதமும் என சில தரகர்கள் வழங்குகிறார்கள். சில இடைத்தரகர்கள் குறிப்பாக இன்னும் 10 மடங்கு வழங்குகிறார்கள். இதற்கு காரணம் அந்த நிறுவனம் மிகவும் புகழ்பெற்ற வங்கிகளால் நிறுவப்பட்டது. அதிக அளவில், தரகு கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் கொடுத்தாலும், அவர்களது சேவையில் எந்த அசாதாரணமும் இல்லை.

சேவை நிலை

வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் சேவையை பாருங்கள். சில இடைத்தரகர்களின் நிறுவனம் தனிச்சிறப்பு சேவை மற்றும் அழைப்பு மையங்கள் மூலம் அனைத்து உதவிகளையும் வழங்குகின்றது. ஜியோஜிட், ஷேர்கான் மற்றும் யூனிகான் போன்ற சில இடைத்தரகர்கள் இதில் அடங்குவர். வாடிக்கையாளர்களுக்கு, வர்த்தக கணக்கை தொடங்குவதற்கு இந்த நிறுவனங்கள் தங்கள் பிரதிநிதிகளை வாடிக்கையாளர்களின் இடத்திற்கே அனுப்பி, தேவையான விஷயங்களை நிறைவு செய்கின்றனர். வாடிக்கையாளர்கள் பிரதிநிதிகள் கொண்டு வரும் விண்ணப்பங்களில் கையெழுத்து போடுவதுடன் அதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

ஆய்வுகளின் சிறப்புத்தன்மை

பெரும்பாலான தரகு நிறுவனங்கள் ஆய்வு வசதிகளை வழங்குகின்றன. எனினும் சில நிறுவனங்கள், பல ஆய்வு வசதிகளை கொண்டிருக்கவில்லை. நீங்கள் முதலீடு செய்ய ஆரம்பிப்பவராக இருந்தால் பங்கு ஆலோசனைகளை பற்றி ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து பங்கு ஆய்வு அறிக்கைகளை வழங்கும் தரகர்களை தேர்ந்தெடுப்பது, மிகவும் சிறப்பானது மற்றும் எளிமையானது. இதன் மூலம் சரியான முடிவுகளை எடுக்க இயலும்.

வர்த்தக மென்பொருள் மற்றும் இயங்குதளம் சரிபார்த்தல்

பல வர்த்தக நிறுவனங்கள் ஆன்லைனில் முதலீடு செய்ய அல்லது வர்த்தகம் செய்ய சிறப்பான மென்பொருட்களை கொண்டுள்ளன. அதன் மென்பொருட்களை நன்றாக கற்றுக் கொண்டு, அதன் மூலம் சிறந்த முதலீட்டை தேர்வு செய்வதே சிறந்ததாகும். உங்கள் தரகு பரிமாற்றங்களை மின்னணு முறையில் செய்தால், வீட்டிற்கு அருகில் தரகு நிறுவனம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, சேவை, தரகு மற்றும் நிபுணத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் தரகு நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How to choose the right stock broker? | சரியான பங்கு தரகர்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

For individuals who have never invested in the stock markets and are planning to do so, the first step would be to choose the right stock broker. Above are a few tips that would be helpful when choosing your broker.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns