பிக்ஸட் டெபாசிட் மூலம் எவ்வாறு அதிக பணம் ஈட்டலாம்?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

பிக்ஸட் டெபாசிட் மூலம் எவ்வாறு அதிக பணம் ஈட்டலாம்?
சென்னை: நீங்கள் வைப்புத் தொகைகளில் முதலீடு செய்ய முடிவெடுத்திருக்கிறீர்களா? உங்களுக்காக சில யோசனைகள்.

(5 high return company fixed deposits with an element of risk)

சரியான வைப்புத் தொகைகளைத் தேர்ந்தெடுத்தல்

நீங்கள் முழுவதுமாக வங்கிகளின் வைப்புத் தொகைகளில் முதலீடு செய்ய முடிவெடுத்தால் அதை மாற்றிக் கொள்வது நல்லது. வங்கிகளுடன் சேர்த்து நிதி நிறுவனங்களின் வைப்புத் தொகையில் முதலீடு செய்யலாம்.
நிதி நிறுவனங்கள் நல்ல வட்டி கொடுக்கின்றன. அதற்காக அனைத்து நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்துவிடக் கூடாது. எது பாதுகாப்பானது என்பதை அறிந்து முதலீடு செய்ய வேண்டும்.


சரியான வைப்புத் தொகைகளை தேர்ந்தெடுத்தால் அதிக லாபத்தை ஈட்ட முடியும். எனினும் அந்த வைப்புத் தொகைகள் பாதுகாப்பாக இருக்குமா என்பதையும் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் 2 முதல் 5 ஆண்டுகள் வரையான வைப்புத் தொகைகளுக்கு 9.25 சதவீத வட்டி வழங்குகின்றன. அதே நேரத்தில் கேரள அரசு நிதி நிறுவனங்களான எஃப்டி, கேரளா ரோட் ட்ரான்ஸ்போர்ட் பைனான்ஸ் ஆகியவை 10.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றன. அதுபோல் மஹிந்திரா பைனான்ஸ் நிறுவனம் 10 சதவீத வட்டியை வழங்குகிறது. அதே நேரத்தில் இது வழங்கும் வைப்புத் தொகைகளில் முதலீடு செய்யப்படும் பணம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

புரோக்கர் கமிஷனில் பங்கு

ஒரு நிறுவனத்தில் நீங்கள் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்தால், உங்கள் புரோக்கரிடம் அவரது கமிஷனில் ஒரு பங்கை உங்களுக்கு அளிக்குமாறு கேட்க வேண்டும்.

15ஜி/18ஹெச் பார்மை மறக்க வேண்டாம்

நீங்கள் செய்திருக்கும் முதலீட்டின் மூலம் ரூ.10,000க்கு அதிகமாக வட்டி பெற்றால் நீங்கள் பார்ம் 15ஜி/18ஹெச் ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் உங்கள் வட்டி ரூ.2 லட்சத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது.

ஆன்லைனில் வட்டியை ஒப்பிட்டு பார்த்தல்

ஒரு வங்கியின் வைப்புத் தொகையில் முதலீடு செய்ய முடிவு செய்துவிட்டால் ஆன்லைனில் சென்று மற்ற வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதன் மூலம் அதிக வட்டி விகிதத்தை வழங்கும் வங்கிகளில் முதலீடு செய்ய முடியும்.

நீண்ட கால திட்டத்தில் முதலீடு செய்தல்

தற்போது இருக்கும் சூழலில் நீண்ட கால வைப்புத் தொகையில் முதலீடு செய்வது நல்லது. ஏனெனில் இந்த ஆண்டு வட்டி விகிதம் குறையலாம் என்று தெரிகிறது. எனவே அதற்கு முன்பாக அதிக வட்டி விகிதம் கிடைக்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to make more money from fixed deposits? | பிக்ஸட் டெபாசிட் மூலம் எவ்வாறு அதிக பணம் ஈட்டலாம்?

If you are one that is risk averse and decides to park money in fixed deposits, above are ways you can maximize your returns from these instruments.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns