
இடிஎஃப்-கள், பங்குகள் அடங்கிய ஒரு முழுமையான போர்ட்ஃபோலியோவை தனியொரு செக்யூரிட்டியில் வாங்கக்கூடிய அல்லது விற்கக்கூடிய வாய்ப்பை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது. பங்குகளைப் போன்றே இவற்றையும் எளிமையாக வாங்கவோ அல்லது விற்கவோ முடியும். இவற்றின் மூலாதாரமான செக்யூரிட்டிகள் பங்குகளாகவோ, பயனுள்ள பொருட்களாகவோ அல்லது கடன் பத்திரங்களாகவோ இருக்கலாம்.
இடிஎஃப்-கள், குறுகிய காலத்தியவையாகவோ அல்லது கால வரையற்றவையாகவோ இருக்கலாம். இவை பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுவதால் முதலீட்டாளர்களுக்கும், ஃபண்ட் நிறுவனத்துக்கும் இடையே குறைந்தபட்ச தகவல் பரிமாற்றமே இருக்கும்.
இந்தியாவில் இடிஎஃப்-கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளிலும், விலை உயர்ந்த உலோகங்களிலும், கரன்சிகளிலும் முதலீடு செய்கின்றன. இந்த இடிஎஃப்-கள் பல்வேறு இந்திய பங்குச் சந்தைகளிலும் பட்டியலிடப்பட்டு இந்திய பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளையும் குறி வைத்து செயல்படுகின்றன.
விஸ்டம் ட்ரீ இந்தியா எர்னிங்க்ஸ் ஃபண்ட், ஐபாத் எம்எஸ்சிஐ இந்தியா இடிஎன், மார்க்கெட் வெக்டார்ஸ் இந்தியா ஸ்மால் கேப் இன்டெக்ஸ் இடிஎஃப் ஆகியன இந்தியாவில் பரபரப்பாக விற்கப்படும் சில இடிஎஃப்-கள் ஆகும்.
இடிஎஃப் எவ்வாறு இயங்குகிறது?
வழக்கமான மியூச்சுவல் ஃபண்ட் போலில்லாமல் ஃபண்ட் நிறுவனத்தில் இருந்து யாரும் இடிஎஃப்-ஐ வாங்கி, விற்க முடியாது. அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி (ஏஎம்சி) சில அனுமதியளிக்கப்பட்ட பங்கேற்பாளர்களை நியமிக்கின்றது. இவர்கள் முதலில் அனைத்து மூலாதார செக்யூரிட்டிகளையும் (பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம் போன்ற பயனுள்ள பொருள்கள்) ஏஎம்சியில் டெபாசிட் செய்து, ஏஎம்சியிலிருந்து ‘க்ரியேஷன் யூனிட்டுகளை' பெற்றுக் கொள்கின்றனர். இந்த க்ரியேஷன் யூனிட்டுகள் ஒவ்வொன்றும் பல்வேறு சின்ன யூனிட்டுகளைக் கொண்ட பெரிய ப்ளாக்குகளாகத் திகழ்கின்றன. இவை சிறு சிறு யூனிட்டுகளாக பகுக்கப்பட்டு அவற்றின் தன்மைக்கேற்ப அங்கீகரிக்கப்பட்ட திறந்த பங்குச் சந்தைகளில், அனுமதியளிக்கப்பட்ட பங்கேற்பாளர்களால் வாங்கவோ, விற்கவோ படுகின்றன. இந்த க்ரியேஷன் யூனிட்டுகள் அதிக அளவிலான எண்ணிக்கையில்சிறு யூனிட்டுகளைக் கொண்டிருப்பதனால் பணக்கார முதலீட்டாளர்களால் மட்டுமே ஏஎம்சியுடன் நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபட இயலும்.
சில்லறை முதலீட்டாளர்கள், ஏதேனும் ஒரு ப்ரோக்கரேஜ் நிறுவனத்தில் அகௌண்ட் வைத்துக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
இடிஎஃப்-ன் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றது?
இடிஎஃப், பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுகிறதனால் மட்டுமே அதன் விலை மூலாதார போர்ட்ஃபோலியோவின் என்ஏவி-யின் விலையை ஒத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக இடிஎஃப் பங்குகளின் விநியோகம் மற்றும் கிராக்கி ஆகியவையே இடிஎஃப்-ன் விலையை நிர்ணயிக்கின்றன. இடிஎஃப்-களின் சந்தை விலையை பாதிக்கக்கூடிய காரணிகள் பல இருந்தாலும் அவற்றின் மதிப்பு பெரும்பாலும் மூலாதார செக்யூரிட்டிகளின் விநியோகம் மற்றும் கிராக்கி ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கும்.


Click it and Unblock the Notifications