தபால் துறையின் மகத்தான முதலிட்டுத் திட்டங்கள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி), பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட்கள்(பிபிஎஃப்), போஸ்ட் ஆஃபீஸ்களில் பெறக்கூடிய மாத வருமானம் போன்றவையே. இவை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களுக்குப் பின் மிகப் பிரபலமாக விளங்கும் முதலீட்டுத் திட்டங்களாகும். ஆனால், இவற்றுள் பெரும்பாலானவை வரித் தள்ளுபடிகள் எதுவும் வழங்குவதில்லை. அதனால் இத்திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன் கவனமாக தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.

பிபிஎஃப்விற்கு  வரி 0%

பிபிஎஃப்விற்கு வரி 0%

பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் மூலம் கிடைக்கக்கூடிய வட்டித்தொகை பூரண வரி விலக்கு பெற்றதாகும். பிபிஎஃப் -இன் மற்றொரு பயன் யாதெனில் பிபிஎஃப் -இன் கீழ் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை, வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு பெறக்கூடிய தகுதியைப் பெறுகிறது. இதனாலேயே இது மிகவும் புகழ் பெற்ற திட்டங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. முதலிடு செய்த, 6-வது நிதியாண்டில் இருந்து பிபிஎஃப் திட்டத்திலிருந்து விலகிக் கொள்ள விரும்பினால், அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.

என்எஸ்சி(NSC)

என்எஸ்சி(NSC)

போஸ்ட் ஆஃபீஸ், பல்வேறு வகையான மாத வருமான திட்டங்களை வழங்குவதோடு தேசிய சேமிப்புச் சான்றிதழ் போன்ற திட்டங்கள் மூலம் முதலீடு செய்யவும் வாய்ப்பளிக்கின்றது. எனினும், என்எஸ்சியோடு, மாத வருமானத் திட்டங்களும் வரித் தள்ளுபடிக்கு தகுதி பெற்றவை அல்ல.

வருமான வரி கணக்கிடு

வருமான வரி கணக்கிடு

வருமான வரி கணக்கீட்டின் போது இத்திட்டங்களின் மூலம் பெறக்கூடிய வட்டித்தொகை மொத்த வருமானத்தோடு சேர்த்து மதிப்பிடப்படும். எனினும், என்எஸ்சி டெபாசிட்கள், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரித் தள்ளுபடி பெறக்கூடிய தகுதியை பெறுகின்றன.

என்எஸ்சியின் 5 ஆண்டுத் திட்டம்

என்எஸ்சியின் 5 ஆண்டுத் திட்டம்

தற்சமயம், ஐந்தாண்டு தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம், முதலிடு தொகைக்கு பெறப்படும் வட்டித் தொகை ஆறு மாதங்களுக்கொரு முறை டெபாசிட் தொகையோடு கூட்டப்பட்டு, தவணை முடிவில் மட்டுமே வழங்கப்படும், சுமார் 8.5% வட்டித் தொகையைக் கொண்டுள்ளது. 100 ரூபாய், 5 ஆண்டுகளுக்குப் பின் சுமார் 151.62 இந்திய ரூபாயாக வளர்ச்சியடைகிறது.

என்எஸ்சியின் 10 ஆண்டுத் திட்டம்

என்எஸ்சியின் 10 ஆண்டுத் திட்டம்

இன்னொரு புறம், பத்தாண்டு என்எஸ்சி திட்டம், ஆறு மாதங்களுக்கொரு முறை டெபாசிட் தொகையோடு கூட்டப்பட்டு, தவணை முடிவில் மட்டுமே வழங்கப்படும், சுமார் 8.80 சதவீத வட்டித் தொகையைக் கொண்டுள்ளது. 100 இந்திய ரூபாய், 10 ஆண்டுகளுக்குப் பின் சுமார் 236.60 இந்திய ரூபாயாக வளர்ச்சியடைகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Taxes on PPFs, NSC and post office schemes

Post office schemes like National Savings Certificate (NSC), Public Provident Funds, Monthly Income at post post offices are perhaps the most popular form of investments, after bank fixed deposits.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X