வைப்பு நிதிக்கு அதிக வட்டி தரும் 6 நிதி நிறுவனங்கள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது சமீபத்தில் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கையால் வட்டி விகிதங்கள் ஏறுமுகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. வங்கிகளுடன் ஒப்பிடுகையில் சில நிறுவனங்கள் வைப்பு நிதிகளுக்கு அதிக வட்டி அளிக்கின்றன.

 

இருப்பினும் நிறுவனங்களின் வைப்பு நிதிகளில் அதிக பாதுகாப்பு இல்லாததால் அதில் இடர்பாடு அதிகம் என்பதையும் மறந்து விடக் கூடாது. நாம் கடினமாக உழைத்து சேர்த்த பணத்தை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய வேண்டும். எனவே இங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் 6 வங்கிளின் வைப்பு நிதிகளில் அதிக வட்டியிலும் பாதுகாப்பான முறையிலும் முதலீடு செய்யலாம்.

எச்.டி.எப்.சி லிமிடெட் (HDFC) - பிளாட்டினம் வைப்புநிதிகள்:

எச்.டி.எப்.சி லிமிடெட் (HDFC) - பிளாட்டினம் வைப்புநிதிகள்:

CRISIL நிறுவனம் இந்த நிறுவனத்திற்கு FAAA அளவீடு கொடுத்துள்ளது. அதனால் நிறுவனங்களின் வைப்பு நிதி வகைகளிலேயே முதலீட்டாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான முதலீடாக விளங்குகிறது எச்.டி.எப்.சி வங்கியின் பிளாட்டினம் வைப்புநிதிகள். அதற்கு காரணம் இந்த நிறுவனம் அசல் மற்றும் வட்டி தொகையை திருப்பி கொடுக்காமல் போக வாய்ப்புகள் மிகவும் குறைவே. இந்திய பிரஜைகள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் அறக்கட்டளைகள் இந்த வைப்புத் தொகையில் முதலீடு செய்யலாம்.

இதில் முதலீடு செய்ய குறைந்த பட்ச தொகையாக 20,00 ரூபாய். இந்த திட்டம் 9.4% விகிதத்தில் வட்டி அளிக்கிறது. இதன் முதிர்வு காலம் 15 முதல் 33 மாதங்களுக்குள் இருக்கலாம். மூத்த குடிமகன்களுக்கு 0.25% கூடுதல் வட்டி அளிக்கப்படும்.

 

 

எல்.ஐ.சி. ஹௌசிங் பினான்ஸ் லிமிடெட் (LIC Housing Finance Ltd):

எல்.ஐ.சி. ஹௌசிங் பினான்ஸ் லிமிடெட் (LIC Housing Finance Ltd):

குறைந்தபட்ச முதலீடாக 10,000 ரூபாயுடன் முதலீட்டார்கள் இந்த நிறுவனத்தில் வைப்பு நிதியில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் 1, 2 மற்றும் 3 ஆண்டுகள் முதிர்வு காலத்திற்கு முறையே 8.75%, 9.0% மற்றும் 9.25% விகிதத்தில் வட்டி அளிக்கப்படுகிறது.

CRISIL நிறுவனம் இந்த நிறுவனத்திற்கு FAAA அளவீடு கொடுத்துள்ளதால் வட்டி மற்றும் அசலை திருப்பி செலுத்தும் அளவிற்கு இந்த நிறுவனமும் நல்ல நிலையில் உள்ளது.

 

 

மஹிந்திரா பினான்ஸ் - சம்ருத்தி:
 

மஹிந்திரா பினான்ஸ் - சம்ருத்தி:

குறைந்தபட்ச முதலீடாக 10,000 ரூபாயுடன் வங்கியல்லாத நிதி நிறுவனமான மகிந்திரா பினான்சில் வைப்புத் தொகையாக முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் 1, 2 மற்றும் 3 ஆண்டுகள் முதிர்வு காலத்திற்கு முறையே 9.25%, 10.0% மற்றும் 10.25% விகிதத்தில் வட்டி அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன்களுக்கு 0.25% கூடுதல் வட்டி அளிக்கப்படுகிறது.
CRISIL நிறுவனம் இந்த நிறுவனத்திற்கு FAAA அளவீடு கொடுத்துள்ளதால் இது பாதுகாப்பான நிறுவனமாக கருதப்படுகிறது.

 

 

பிஎன்பி (PNB) ஹௌசிங்க் பினான்ஸ் லிமிடெட்:

பிஎன்பி (PNB) ஹௌசிங்க் பினான்ஸ் லிமிடெட்:

இந்த நிறுவனத்திற்கு CRISIL நிறுவனம் FAA+ அளவீடு கொடுத்துள்ளது. இது 9.3% என கவர்சிகரமான வட்டி விகிதத்தை அளிக்கிறது. மேலும் மூத்த குடிமகன்களுக்கு 0.25% கூடுதல் வட்டி அளிக்கிறது. முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்சமாக 20,000 ரூபாய் தேவைப்படும். இந்த திட்டதின் கீழ் கிடைக்கும் வட்டி பணத்திற்கு அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் - உன்னட்டி :

ஸ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் - உன்னட்டி :

வணிக வாகன நிதி நிறுவனமான இதன் வைப்புத் தொகை திட்டதின் கீழ் 1, 2 மற்றும் 3 ஆண்டுகள் முதிர்வு காலத்திற்கு முறையே 9.25%, 9.75% மற்றும் 10.75% விகிதத்தில் வட்டி அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்சமாக 25,000 ரூபாய் தேவைப்படும். இந்த திட்டமும் மூத்த குடிமகன்களுக்கு 0.25% கூடுதல் வட்டி அளிக்கிறது.

இந்த நிறுவனத்திற்கு CRISIL நிறுவனம் FAA+ அளவீடு கொடுத்துள்ளதால் இது பாதுகாப்பான நிறுவனமாக கருதப்படுகிறது.

 

 

சுந்தரம் ஹோம் பினான்ஸ் லிமிடெட்:

சுந்தரம் ஹோம் பினான்ஸ் லிமிடெட்:

குறைந்தபட்ச முதலீட்டு தொகையான 10,000 ரூபாய்க்கு சுந்தரம் ஹோம் பினான்ஸ் 1 வருட முதிர்வு காலத்திற்கு 9.25% வட்டி விகிதத்தை அளிக்கிறது. 2 மற்றும் 3 வருட முதிர்வு காலத்திற்கு 9.5% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. இந்த திட்டமும் மூத்த குடிமகன்களுக்கு 0.25% கூடுதல் வட்டி அளிக்கிறது.

இந்த திட்டத்திற்கு CRISIL நிறுவனம் MAA+ நிலையான (ICRA)அளவீடை அளித்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6 company fixed deposits (FDs) to consider for investment

After raising expectations that interest rates would fall, recent measures by the RBI hint at interest rates trending upwards.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X