குறுகிய கால கடன் நிதி என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறுகிய கால கடன் நிதி (டெப்ட் ஃபண்ட்ஸ்) என்பது ஒரு வகை முதலீட்டாகும். குறைந்த கால முதலீடை விரும்புபவர்கள் இதனை தேர்ந்தெடுக்கலாம். வருமான நிதி என்றும் அழைக்கப்படும் இந்த நிதி, ஒரு குறுகிய கால மியூசுவல் ஃபண்ட் திட்டமாகும். இதன் முதிர்வு காலம் மூன்று வருடங்களுக்கு குறைவாகவே இருக்கும். இவ்வகை நிதிகளை வங்கி பேப்பர் (வைப்பு சான்றிதழ்), கார்பரேட் பேப்பர் மற்றும் அரசாங்க பேப்பர் போன்ற கடன் பரிவர்த்தனைகளில் முதலீடு செய்யப்படும்.

 

குறுகிய கால கடன் நிதியில் முதலீடு செய்வதானால் ஏற்படும் பயன்களையும், குறைகளையும், இடர்பாடுகளையும் பார்போம்:

நிதியின் முதிர்வு காலம்

நிதியின் முதிர்வு காலம்

வட்டி விகிதம் கூடும் போது கடனின் சந்தை மதிப்பு குறையும். வட்டி விகிதம் குறையும் போது எதிர்மாறாக நடக்கும். இது தான் கடன் கோட்பாடாகும். ஆனால் சந்தை மதிப்பில் மாற்றம் வரும் போது, குறுகிய கால நிதி கடனை பொறுத்த வரை வட்டி விகித மாற்றம் குறைந்த அளவில் நடக்கவே வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் முதிர்வு காலம் குறைவாக இருப்பதால் வட்டி விகிதங்களில் பெரிய அளவில் மாறுதல்கள் ஏற்படாது

மேலும் சந்தையில் வட்டி விதிதம் குறையும் போது கூட இவ்வகை கடன் நிதி பாதிப்படையாது. இதனால் ஈட்டுதொகையில் எந்த விட இடர்பாடும் இருக்காது.

நெகிழ்வுத்தன்மை

நெகிழ்வுத்தன்மை

இவ்வகை முதலீடுகள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும். முதலீட்டாளர் தனக்கு பணம் தேவைபட்டால் எந்த நேரம் வேண்டுமானாலும் இந்த கடன் நிதியை விற்று விடலாம். இதற்கு கூடுதல் கட்டணங்கள் என்று எதுவும் கிடையாது. வைப்பு நிதி பணத்தை முன் கூட்டியே எடுத்தால் அதற்கென தனியாக கட்டணம் வசூலிக்கப்படுவதை போல் இதற்கு எதுவும் கிடையாது.

அதிகமான வரி கிடையாது
 

அதிகமான வரி கிடையாது

வைப்பு நிதியில் கிடைத்த வட்டி பணத்திற்கு வசூலிக்கப்படும் வரியை விட குறுகிய கால கடன் நிதியில் கிடைக்கும் வட்டி பணத்திற்கு குறைவான அளவே வரி வசூலிக்கப்படுகிறது.

வட்டி விகிதல் இடர்பாடு

வட்டி விகிதல் இடர்பாடு

பொருளாதாரத்தில் வட்டி விகித மாற்றங்கள் ஏற்படும் போது அது குறுகிய கால கடன் நிதியை பாதிக்கும். இருப்பினும் இது குறுகிய கால பரிவர்த்தனை என்பதால் சிறிய அளவிலேயே வட்டி மாறுதல்கள் நடைபெறும்.

கடன் இடர்பாடு

கடன் இடர்பாடு

ஒரு வேளை குறுகிய கால கடன் நிதியை பராமரிக்கும் நிறுவனம் கடனில் மூழ்கினாலும், அல்லது பணம் முதலீடு செய்யப்பட்ட நிறுவனங்கள் கடனில் மூழ்கினாலும் சரி, குறுகிய கால கடன் நிதியில் முதலீடு செய்த உங்களின் பணம் திவாலாகி விடும் அபாயம் உள்ளது. அதனால் முதலீடு செய்யும் முன் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இருப்பினும் முற்றிலும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளில் தான் பொதுவாக உங்கள் பணம் முதலீடு செய்யப்படும்.

வட்டி கூடும் இடர்பாடு

வட்டி கூடும் இடர்பாடு

குறுகிய கால கடன் நிதியில் முதலீட்டு காலம் சிறியதாக (2-3 வருடம்) இருந்தால் தான் நன்மை.இதனால் போதுமான ஈட்டுத்தொகையை அளிக்கும். ஒரு வேளை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டுமானால் பங்குகளில் முதலீடு செய்யலாம். அது நல்ல வருவாயை ஈட்டித் தரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are short term debt funds?

Short-term debt fund is an investment option for individuals interested to invest for a shorter duration.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X