வால்யூ இன்வெஸ்ட்டிங் என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெஞ்சமின் கிரஹாமின் மூளையில் உதித்த வால்யூ இன்வெஸ்ட்டிங் கொள்கை ஒரு புதுமையான முதலீட்டு அணுகுமுறை, இதனை அவர் கொலம்பியா பிஸினஸ் ஸ்கூலில் கற்றுத்தந்த காலத்திலிருந்து தொடங்கியுள்ளது. இந்த முதலீட்டு மேற்கோள் காலப்போக்கில் பல்வேறு விதங்களில் பரிமாண வளர்ச்சிக்கு உட்பட்டிருந்தாலும் இதன் அடிப்படையான கோட்பாடுகள் அனைத்தும் அப்படியே வைக்கப்பட்டுள்ளன.

 

எளிமையாக சொல்ல வேண்டுமானால், வால்யூ இன்வெஸ்ட்டிங் கொள்கை என்பது ஒரு வித அடிப்படையான ஆய்வின் மூலம் குறைவான மதிப்புடையவையாகக் கருதப்படும் பங்குகளை வாங்குவதாகும். ஆனால், இப்பங்குகளின் தற்போதைய மதிப்பீடு இந்நிறுவனத்தின் நீண்டகால அடிப்படைகளை பிரதிப்பலிப்பதாகாது; மிகக் குறைந்த அவகாசத்தில் இந்நிலைமை சீராக்கப்படக்கூடும். இவற்றை கருத்தில் கொண்டு, வால்யூ இன்வெஸ்டர்கள் தள்ளுபடி விலையில் பங்குகள் வழங்கப்படும்போது அவற்றை வாங்கி வைத்து லாபம் ஈட்ட முற்படுகின்றனர்.

வால்யூ இன்வெஸ்டிங் அணுகுமுறையை முன்னெடுத்துச் சென்ற வெற்றிகரமான முதலீட்டாளரான வாரன் பஃப்ஃபட், பங்குகளை அவற்றின் அடக்க விலையைக் காட்டிலும் குறைவான விலைக்கு வாங்குவதில் தான் வால்யூ இன்வெஸ்டிங்கின் சூட்சுமம் அடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். பொதுவாக ஒரு நிறுவனத்துக்கான அல்லது அதன் பங்குக்கான அடக்க விலை, அதன் தற்போதைய சந்தை விலையை கணக்கில் எடுத்துக் கொள்ளாது, மேற்கொள்ளப்படும் ஒரு அடிப்படை ஆய்வை முகாந்திரமாகக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. எனினும் அடக்க விலையை தீர்மானிப்பதென்பது மிகக் கடினமான ஒன்றாகும், ஏனெனில் சரியான அடக்க விலை என்று எதுவும் கிடையாது.

வால்யூ இன்வெஸ்டிங்கின் கொள்கை

வால்யூ இன்வெஸ்டிங்கின் கொள்கை

வால்யூ இன்வெஸ்டிங் நடைமுறைப்படுத்தப்படும் போது பல்வேறு அளவுகோல்கள் அல்லது அடிப்படைக்கூறுகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இவற்றுள் சில பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன. நடைமுறையில், வால்யூ இன்வெஸ்டர்கள் (முதலீட்டாளர்கள்) அதிக டிவிடென்ட் ஈட்டித்தரக்கூடிய பங்குகள் அல்லது சராசரிக்கும்-குறைவான விலை-வருமான விகிதமோ அல்லது விலை-பதிவு விகிதமோ கொண்ட பங்குகளையே நாடுகின்றனர்.

குறைவான விலை-வருமான விகிதம் (P/E விகிதம் )

குறைவான விலை-வருமான விகிதம் (P/E விகிதம் )

குறைவான விலை-வருமான விகிதம் கொண்ட பங்குகள் எப்பொழுதும் நன்றாக செயல்படும் வரலாற்றைக் கொண்டிருப்பதனால், இத்தகைய பங்குகள் முதலீட்டாளர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. மேலும், குறைவான பி/இ பங்குகளை கைக்கொண்டிருப்பதனால், அடிமட்ட அபாயங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதுவும் ஒரு காரணமாகும். ஆனால், இத்துறையின் எதிர்கால வளர்ச்சி தொடர்பான தொல்லைகளை கழித்துக் கட்டும் நோக்கிலும் விலை-வருமான விகிதம் குறைவாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கான சிறந்த உதாரணமாக, தற்போது பிஎஸ்யூ வங்கி நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் தரம் குறைந்து விடுமோ என்ற பயத்தில் அவற்றுக்கு மிகக் குறைந்த விலை-வருமான விகிதங்கள் அளிக்கப்பட்டுள்ளதைக் கூறலாம்.

குறைவான விலை-பதிவு மதிப்பு விகிதம் (பி/பி விகிதம்)
 

குறைவான விலை-பதிவு மதிப்பு விகிதம் (பி/பி விகிதம்)

ஒரு பங்கின் பதிவு மதிப்பு, அதாவது அந்நிறுவனத்தின் நிகர சொத்துக்களின் மதிப்போடு ஒப்பிடுகையில் அதன் விலை மதிப்பு குறைவாக இருப்பின், அது அத்துறை அல்லது அந்த பங்கைப் பற்றி சந்தையில் நிலவும் ஆர்வமற்ற தன்மையின் குறியீடாக இருக்கலாம். எனவே, பங்கு விலை மேலும் குறையாமல் பாதுகாக்கப்படும் பட்சத்தில், அப்பங்குகள் வால்யூ இன்வெஸ்டர்களை ஈர்க்கும்.

பணப்பாய்வை ஒப்பிடுகையில் குறைவாக இருக்கும் பங்கின் விலைகள்

பணப்பாய்வை ஒப்பிடுகையில் குறைவாக இருக்கும் பங்கின் விலைகள்

வலுவான பண ஓட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பங்கு விலையை உயர்த்தும் என்று வால்யூ இன்வெஸ்டர்கள் நினைப்பதால், பண ஓட்டத்தோடு ஒப்பிடுகையில் மிகக் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்படும் பங்குகள் அவர்களால் அதிக அளவில் விரும்பப்படுகின்றன.

நிச்சயமான வருமான வாய்ப்பு

நிச்சயமான வருமான வாய்ப்பு

மேம்பட்ட வருமானங்கள் ஈட்டியதாகவும், மேன்மேலும் உயரக்கூடிய வாய்ப்பு உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிறுவனங்களின் பங்குகள், வால்யூ இன்வெஸ்டர்களால் துரத்தி துரத்தி வாங்கப்படுகின்றன. ஏனெனில், வலுவான வருமானம், பங்குகளுக்கு தூண்டுதலாக இருந்து, அவற்றை மேலே உயரச் செய்யக்கூடியதாகும்.

தெளிவான தொழில்நுட்ப ஆய்வு

தெளிவான தொழில்நுட்ப ஆய்வு

வர்த்தக சந்தை இறங்குமுகத்தில் இருக்கும் பொழுது குறுகிய விலை பட்டியலில் விற்கப்படும் பங்குகளை வாங்குவதற்கு வால்யூ இன்வெஸ்டர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பங்கின் வரலாறு மற்றும் நடப்பு விலை பாணிகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விலை மாற்றங்களை தீர்மானிக்க உதவுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is value investing?

value investing involves purchasing of stocks deemed as undervalued through some form of fundamental analysis.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X