பங்கு சந்தையில் உள்ள மர்மங்களை தாண்டி லாபம் ஈட்டுவது எப்படி..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பங்கு சந்தையில் நேரடியாக முதலீடு செய்து நீண்ட கால லாபத்தை ஈட்டலாம் - இதைக்கேட்டால் இது ஏதோ ஏமாற்று வேலையாக தோன்றுகிறதே என்றுதான் நமக்கு முதலில் தோன்றும். நாள் தோறும் ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் பங்குச்சந்தையில் ‘பழம் தின்று கொட்டை போட்டவர்களே' திணறுகின்றனர். இதில் நாமே சொந்தமாக முதலீடு செய்து லாபம் பார்ப்பது என்பது நடக்கிற கதையா?! இப்படி ஒரு பளீர் அவநம்பிக்கை உடனே தோன்றுவதில் வியப்பில்லை.

ஆனால், ஒரு கசப்பான அதே சமயம் நிதர்சனமான உண்மை என்னவென்றால் நாம் எந்த ‘திறமைசாலிகளை' சார்பாக முதலீடு செய்கிறோமோ அவர்களால் நமக்கு எது நல்லது என்ற கண்ணோட்டத்திலிருந்து ஒரு நாளும் பார்க்க முடியாது. அதிர்ச்சியாக இருக்கிறது இல்லையா?, ஆனால் அதுதான் உண்மை. இந்தியாவின் முன்னணி கிரடிட் ரேட்டிங் நிறுவனமான கிரிசில் இது தொடர்பாக சில ஆய்வுகளை மேற்கொண்டு தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படும் முதலீட்டு நிதிகளைவிட பெஞ்ச்மார்க் புள்ளிகள் அடிப்படையில் செயல்படுபவைதான் மிகுந்த பலனைத் தருவதாக கண்டறிந்துள்ளனர்.

ஏற்கனவே தமது பணத்தை தொழில்ரீதியான ‘முதலிட்டு நிர்வாகிகளிடம்' நம்பிக்கை வைத்து ஒப்படைத்திருப்பவர்களுக்கு இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கக்கூடும். சந்தை நிலவரம் இந்த நிபுணர்களுக்கு நன்கு தெரியும் என்றும், அவர் நமது நிதியை பெருக்கித்தருவார், நன்கு நிர்வகிப்பார் என்றும்தானே அந்த பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து அதற்கான கட்டணத்தையும் நீங்கள் அளிக்கிறீர்கள்.

சரி, என்னதான் செய்வது? நமது முதலீட்டு நிதியின் பாதுகாப்பு மற்றும் நீண்டகால லாபம் போன்றவற்றை எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது? இதற்கு சில அடிப்படையான விஷயங்களை நாமே தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

பங்கு சந்தையில் உள்ள மர்மங்களை தாண்டி லாபம் ஈட்டுவது எப்படி..

மார்க்கெட் ‘நிபுணர்கள்' பற்றிய சில அடிப்படை உண்மைகள்:

நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்திருப்பீர்கள். உங்களது நிதி ஆலோசகர் எப்போதுமே பங்குகளை வாங்குவது பற்றி மட்டுமே அதிகம் உங்களிடம் பேசியிருப்பார். "இப்போது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது - எனவே இப்போது நிறைய வாங்கலாம்!" " இப்போது மார்க்கெட் சரிவில் இருக்கிறது, குறைந்த விலையில் நிறைய வாங்கலாம்!" இப்படி ‘வாங்குவதை' பற்றியே அதிகம் உங்களிடம் பேசுவார். சரி, எப்போதுதான் விற்பதாம்!!? அதைப்பற்றி அதிகம் பேசமாட்டார்!!

அது மட்டுமல்லாமல் சில சமயம் எந்த குறிப்பிட்ட காரணங்களும் இல்லாமல் உங்களது நிதி ஆலோசகர் உங்களது பங்குகளை விற்கவும், புதிதாய் வாங்கவும் செய்வார். அதற்கான துல்லியமான அடிப்படைகள் ஏதும் உங்களுக்கு ஏதும் தெரியாது., ‘நமக்கு ஏதும் தெரியாது - அவரை நம்பலாம்' என்ற ஒரு நம்பிக்கைதான் காரணம். ஆனால் நடப்பதென்ன.

அப்பட்டமான ஒரு உண்மை என்னவென்றால் நிதி ஆலோசகர்கள் அனைவருமே தங்களது வாடிக்கையாளர்களை அதிகமாக பங்குகளில் முதலீடு செய்ய வைத்து தங்களது பொறுப்பில் உள்ள ‘பங்குகளின் எண்ணிக்கை'யை (AUM - assets under management) பெருக்கி வைத்துக்கொள்ளவே முயலுகின்றனர். இன்னொருபக்கம் பங்குத்தரகர்கள் உங்களை அதிகம் விற்பதற்கு ஊக்குவிக்கின்றனர். ஏனெனில் அதில்தான் அவர்களுக்கான லாபம் கிடைக்கிறது. எனவே தரகர்கள் உங்களை விற்க வைப்பதற்கான ‘டிப்ஸ்'களை சரமாரியாக அள்ளிவிடுகின்றனர். விஷயம் இதுதான் - நீங்கள் நம்பும் ‘நிதி ஆலோசகர்களோ' அல்லது ‘தரகர்களோ' உங்கள் கண்ணோட்டத்தில் உங்கள் நலனுக்காக யோசிப்பார்கள் என்பதற்கு எந்த ‘கியாரண்டி'யும் இல்லை.

மிகச்சிறப்பான தொழில் நேர்மை மற்றும் சுயவிதிகளை பின்பற்றும் ஒரு நிதி ஆலோசகர் அல்லது மேனேஜர் மட்டுமே உங்களது முதலீட்டுக்கு எந்த நட்டமும் ஏற்படாதபடி வாங்கியும் விற்றும், சூழ்நிலை சரியில்லாத நிதியை தேக்கி பாதுகாத்து வைத்தும் செயல்படுவார். உங்களது லாபம் என்பது முதலீட்டுச்சந்தையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சார்ந்தே அமைகிறது. இதில் உங்கள் சார்பாக நிதி ஆலோசகர்கள் மற்றும் தரகர்கள் வியாபாரம் செய்யும்போது அவர்களுக்கு தேவையான வருவாய் கிடைத்துவிடுகிறது. ஆனால் பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டு பங்குகளின் மதிப்பு குறையும்போது நட்டம் என்பது உங்களுக்கு மட்டும்தான், அவர்களுக்கு இல்லை. அப்படியிருக்கும்போது ‘உங்களது நிதி மற்றும் உங்களது லாபம்' என்ற கண்ணோட்டத்தில் சிந்தித்தால்தான் நட்டத்தை தவிர்த்து லாபத்தை ஈட்ட முடியும்.

அதற்காக நாங்கள் ஏதோ எல்லா நிதி ஆலோசகர்களுமே இப்படித்தான் என்று கூறவில்லை. ஆனால் இதுதான் சூழ்நிலை, இதுதான் நிதர்சனம் என்று கூறுகிறோம். கடந்த காலத்தில் உங்களது நிதி மற்றும் பங்குகளின் மேலாண்மையை புரட்டிப்பார்த்தால் உங்களுக்கே புரியும் அது எந்த அளவுக்கு சிறப்பாக நிர்வகிக்கப்பட்டிருக்கிறது என்று. நட்டம் மட்டுமே ஏற்பட்டு ஏமாற்றப்பட்டதுபோல் ஒரு உணர்வு தோன்றினால் கண்டிப்பாக உங்கள் முதலீடு நிர்வாகத்தில் மாற்றங்கள் தேவை.

பங்கு சந்தையில் உள்ள மர்மங்களை தாண்டி லாபம் ஈட்டுவது எப்படி..

ரிஸ்க் எடுக்க ரெடியா பாஸ்...

நிதி ஆலோசகர்களை நம்பி அவர்களின் கைப்பாவையாக இருக்க வேண்டிய சூழல் நிச்சயம் உங்களுக்கு பிடித்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் திறமை மூலமாகத்தான் உங்களிடம் உள்ள பணத்தை சேர்த்துள்ளீர்கள். அப்படியிருக்க அந்த பணத்தை நிர்வகிக்கும் அபாயகரமான சுதந்திரத்தை மற்றவர்களுக்கு முழுமனதோடு வழங்க நிச்சயம் நீங்கள் யோசிப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் ‘ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' எனும் நிழல் உலகின் சிக்கலான செயல்பாடுகள் உங்களுக்கு தெளிவாக புலப்படாத சூழலில் இப்படி இரண்டாம், மூன்றாம் மனிதர்கள் மீது நம்பிக்கை வைப்பது நிச்சயமாக மன உளைச்சலையும் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. லாபம் வருவது பற்றி எந்த உறுதியும் இல்லாமல் ‘நிதி ஆலோசகர்களுக்கான' கட்டணம் மட்டும் உறுதிப்படுத்தப்படுவது கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கிறது இல்லையா?

தெருவோர காய்கறி வண்டிக்காரரிடம் கூட ஒரு ரூபாய்க்கு பேரம் பேசும் நாம் ‘உழைத்த சம்பாதித்த' பெரும் தொகையை ‘கோட் சூட்' போட்ட ‘நிதி நிபுணர்களிடம்' ஒப்படைத்தால் எங்கோ எதுவோ பிழை என்றுதானே அர்த்தம்?! பொதுவாகவே நிபுணர்கள் என்ற பெயரில் பிரகாசமான தோற்றத்துடன் வருபவர்களை நம்பி அவர்களிடம் ஆலோசனைகளை தேடி ஓடும் வழக்கம் நம்மிடையே உள்ளது. ஆனால், எந்த மனோபாவமும் ஒரு நாள் மாறத்தானே வேண்டும்.

சரி, என்னதான் தீர்வு?!

தீர்வு இல்லாமல் இல்லை. சூழ்நிலையை புரியவைக்கத்தான் மேலே உள்ள விளக்கங்கள் அனைத்தும். உழைத்த சம்பாதித்த உங்களது பணத்திற்கு உரிய மரியாதையை, அக்கறையை உங்களைத்தவிர வேறு யாரால் கொடுக்கமுடியும்?! கொஞ்சம் நேரம் மற்றும் சிந்தனையை செலவழித்தால் போதுமே!!

உங்கள் நிதியை சரிவர பாதுகாத்து லாபத்தை மட்டுமே உறுதிப்படுத்திக்கொள்வதற்கு ஒரே வழி - நீங்களே உங்களது பங்குகளை நேரடியாக நிர்வகிப்பதுதான். எந்த அளவுக்கு ‘ரிஸ்க்' எடுக்கலாம் என்று நீங்களே தீர்மானியுங்களேன். எதில் முதலீடு செய்யலாம் என்று நீங்களே முடிவு செய்யலாமே. எந்த அளவிற்கு ஒரு பங்கு முதலீடு வளரும், வளரவேண்டும் என்பதை நீங்களே யூகியுங்கள். உங்கள் எதிர்பார்ப்பிற்கேற்ப எந்த மாதிரியான முதலீடுகள் உங்களுக்கு பொருந்தும் என்று வரையறுத்துக்கொள்ளுங்கள்.

முதலில் மலைப்பாக இருந்தாலும் போகப்போக உங்களது நிதியும், முதலீடும், பங்கு வர்த்தகமும் உங்கள் கைகளுக்கு வந்துசேரும்போது பெருமிதமாகவும் பாதுகாப்பாகவும் உணர்வீர்கள்!!. நீண்டகால முதலீடுகளில் கவனம் செலுத்துவது உங்களது நிதியை பாதுகாப்பதோடு அவ்வப்போது நிகழும் பணவீக்கத்தின் தாக்கங்களிலிருந்தும் காப்பாற்றும். ஆக நேரடி சுய நிர்வாகத்தின் மூலம் உங்களது முதலீடுகள் வளர்வதையும் பாதுகாப்பதையும் கண்கூடாக நீங்கள் உணரலாம். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நீங்கள் மலர்ச்சி அடைவீர்கள்!

பங்கு சந்தையில் உள்ள மர்மங்களை தாண்டி லாபம் ஈட்டுவது எப்படி..

சுயமாக பங்குகளில் முதலீடு செய்வதென்பது ஒரு சிரமமான காரியம் இல்லையா?

நிச்சயம் இல்லை!! பொதுவாக பங்கு மார்க்கெட் பற்றி இப்படி ஒரு தவறான கருத்து நம்மிடையே உள்ளது. அதாவது பங்கு சந்தையில் சமாச்சாரங்கள் என்பது ‘ஐன்ஸ்டீன்' கணித சூத்திரங்கள் அளவுக்கு சிக்கலானவை என்றும் அதிபுத்திசாலிகள் மட்டும்தான் அவற்றை புரிந்துகொள்ளமுடியும் என்ற கருத்து நிலவி வருகிறது!! இது உண்மையல்ல. பங்கு வர்த்தகம் என்பது நிச்சயம் ராக்கெட் அறிவியல் இல்லை. நாம் அனைவருமே எளிதாக கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சில நடைமுறை அடிப்படைகள் தான் இந்த துறையிலும் உள்ளன. ஒரு சராசரி முதலீட்டாளர் பாதுகாப்பான முதலீடுகள் மூலம் தமது பணத்தை வெகு சிறப்பாக கையாண்டு லாபமீட்ட முடியும். தள்ளுபடியில் சில பலமான பங்குகளில் முதலீடு செய்யும்போது இழப்புகளை தவிர்க்கலாம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ளும்போது நீங்கள் நாளடைவில் ‘மியூச்சுவல் ஃபண்டுகளையே' மிஞ்சும் அளவுக்கு பங்கு முதலீட்டு சமாச்சாரங்களில் நிபுணராகிவிடுவீர்கள்.

எனவே, உங்கள் பணத்திற்கு ‘ரூபாய்க்கு ரூபாய் லாபம்' பார்க்கவேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி - ‘நீங்களே இறங்கி கலக்குவதுதான். கற்றுக்கொள்ள கொஞ்சம் காலம் பிடிக்கும் என்பது உண்மைதான். ஆனால் பணம் சேர்ப்பதும் லாபம் ஈட்டுவதும் சுலபம் இல்லை!

தொடர்ந்து ‘குட்ரிட்டன்ஸ்' பக்கங்களை படித்துவாருங்கள்!!! புரியாததெல்லாம் புரிய ஆரம்பிக்கும்!!!

MoneyWorks4me.com இந்த பிரத்யேக இணையதளம் பணவீக்கத்தை எதிர்த்து சில்லறை முதலீட்டாளர்களை வலுவூட்டவும், பங்குகள் செல்வத்தை அதிகரிக்கவும் உதவுகிறது எனவே இதை உபயோகித்து பயன்பெறவும். மேலும் இந்த கட்டுரையை எழுதியது MoneyWorks4me இணையத்தள குழு, மொழியாக்கம் செய்தது நமது ஒன்இந்தியா!!! இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Invest on your own for best long term returns

Invest on your own for Best Long Term Returns - On the face of it, this statement seems scandalous. Invest? On my own? Nonsense!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X