பங்கு வர்த்தகத்தில் மூலதன லாப வரியை கணக்கிடுவது எப்படி?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஈகுவிட்டி, பரஸ்பர நிதிகள், ரியல் எஸ்டேட் அலல்து தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்வதால் மூலதன இலாபம் அல்லது நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது அந்த சொத்தை வாங்கும் விலையை விட குறைவான அல்லது அதிகமான விலைக்கு விற்பதைப் பொறுத்ததாகும்.

எனவே, ஒரு ஆண்டுக்கும் குறைவான காலத்திற்கு வாங்கி வைத்திருந்த பங்குகளை, வாங்கிய விலையை விட அதிகமான விலைக்கு விற்றால் குறைந்த கால மூலதனத்தில் இலாபம் கிடைக்கும் மாறாக குறைவான விலைக்கு விற்றால் நட்டமே விளைவாக இருக்கும். ஆனால், பங்குகளை ஒரு ஆண்டுக்கும் மேலாக வைத்திருக்கும் போது, இயற்கையாகவே அவற்றில் நீண்ட கால அளவில் இலாபம் அல்லது நட்டம் ஏற்பட அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது.

 வரி

வரி

பிற மூலதனங்களைப் போலவே, சொத்த மூலதனங்களை விற்பதன் மூலம் கிடைத்த இலாபத்திற்கும் வரி செலுத்த வேண்டும். சொத்தின் வகைகள் மற்றும் எவ்வளவு காலத்திற்கு வைத்திருந்தோம் என்பதைப் பொறுத்து, இந்த மூலதனத்தின் மீதான இலாபத்திற்கான வரிவீதம் மாறுபடும்.

மூலதன வரிகள்

மூலதன வரிகள்

பொதுவாகவே, ஈகுவிட்டி, ரியல் எஸ்டேட் அல்லது தங்கம் ஆகிய வளரும் சொத்துக்கள் போன்றவற்றிற்கு குறைவான மூலதன இலாப வரிகள் விதிக்கப்படும். மேலும், குறைந்த கால மூலதன இலாப வரிகளை (Short Term Capital Gains) விட, நீண்ட கால மூலதன இலாப வரிகள் (Long Term Capital Gains) குறைவானதாகவே உள்ளன.

வரியை கணக்கிடுதல்
 

வரியை கணக்கிடுதல்

ஈகுவிட்டி பங்குகளின் செக்யூரிட்டி வர்த்தக வரிகளில் 15.45 சதவீத அளவிற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும் (வரி உட்பட). பங்குகளை விற்ற விலைக்கும், வாங்கிய விலைக்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிந்து, குறைந்த கால மூலதன இலாபம் கணக்கிடப்பட்டு, அந்த தொகைக்கு 15.45 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டு

ஒரு முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து ஒரு பங்கின் விலை ரூ.1000 என்று 100 பங்குகளை 01 ஜூலை 2013-ம் நாளில் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். இவர் 01 அக்டோபர் 2013-ல் அந்த 100 பங்குகளை ரூ.1250-க்கு விற்பதன் மூலம் ரூ.25,000 இலாபமாகப் பெறுகிறார். இது ஒரு ஆண்டுக்கும் குறைவான காலமே கையில் வைத்திருந்த, குறைந்த காலத்தில் கிடைத்த மூலதான இலாபமாக இருப்பதால், அந்த முதலீட்டாளர் 15.45% வரி செலுத்த வேண்டும்.

என்.ஆர்.ஐகளுக்கு லாபம்

என்.ஆர்.ஐகளுக்கு லாபம்

இது போன்ற குறைந்த-கால மூலதன இலாபத்தின் மீதான வரி சலுகைகள் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். எனினும், இது போன்ற வரிச்சலுகைகள் NRI-களுக்கு கிடையாது. அவர்கள் கண்டிப்பாக 15.45% வரியை செலுத்துவது அவசியமாகும். மேலும், மூலதனத்திலிருந்து கிடைத்த வருமானத்துடன், இந்தியாவிலிருந்து கிடைக்கும் வரி செலுத்த வேண்டிய பிற வருமானங்களையும் சேர்த்து NRI தனிநபர்கள் தங்களுடைய வரிகளை செலுத்த வேண்டும்.

நீண்ட கால முதலீடு

நீண்ட கால முதலீடு

குறைந்த கால வரியை முதலீட்டாளர் செலுத்திய பின்னர், ஓராண்டுக்கும் மேலாக வைத்திருந்த பங்குகளை விற்று கிடைக்கும் இலாபத்திற்கு, நீண்ட கால இலாபத்திற்கான வரி விதிக்கப்படுவதிலிருந்து சலுகை வழங்கப்படும். எனவே, ஒரு ஆண்டு அல்லது அதற்கும் மேலான காலத்திற்கு பங்குகளை ஒரு முதலீட்டாளர் வைத்திருந்தால், அவருக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to compute capital gains tax on shares?

Investment in capital assets such as equity, mutual funds, real estate or gold result in the accrual of capital gains or capital loss depending on whether the asset is sold at a lower or higher price in comparison to the purchase price.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X