ஆபத்து குறைவு.. லாபம் அதிகம்.. அசத்தலான முதலீட்டுத் திட்டம் கில்ட் ஃபண்ட்ஸ்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் தனிநபர் முதலீட்டாளர்களிடம் அதிகம் பிரபலமாகாத ஒரு தளமாக இருப்பது கடன் சந்தைகள் (Debt Market) என்ற சந்தை முறையாகும்.

இந்த சந்தைகளில் மிகவும் பாதுகாப்பான முறையில் நடக்கும் வர்த்தகங்களில் ஒன்றாக இருப்பவை அரசு ஆதரவுடன் கிடைக்கக் கூடிய முதலீட்டுப் பத்திரங்களும், பல்வேறு முதிர்வு காலங்கள் கொண்ட கருவூல உறுதிச்சீட்டுகளும் தான்.

இந்த முதலீட்டுப் பத்திரங்களை நாம் செக்யூரிட்டிகள் எனவும் அழைக்கப்படுவது வழக்கம். இத்தகைய செக்யூரிட்டிகளில் முழுமையான கியாராண்டி கிடைப்பதுடன் மற்றும் கடன் அபாயங்கள் இல்லாத இலாபத் தொகை உருவாக்கப்படுகிறது.

முதலீட்டின் அளவு

முதலீட்டின் அளவு

கடன் சந்தையில் குறைந்தபட்ச முதலீட்டின் அளவு (கில்ட் ஃபண்ட்களுக்கு 5 கோடிகள் வரையில்) மிகவும் அதிகமாக இருப்பதால் முக்கியமான முதலீட்டாளர்களாகப் பெரிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவை உள்ளன.

கில்ட் ஃபண்ட்ஸ்

கில்ட் ஃபண்ட்ஸ்

தனிநபர்களைப் பொறுத்த வரையில் பல்வேறு பரஸ்பர நிதி நிறுவனங்கள் நடத்தக்கூடிய கில்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்து இந்தச் செக்யூரிட்டிகளைப் பெற முடியும்.

இந்தக் கட்டுரையின் மூலம் கில்ட் ஃபண்ட்களை எப்படி ஒரு முதலீட்டு வழிமுறையாகப் பயன்படுத்த முடியும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

கில்ட் ஃபண்ட் என்றால் என்ன?

கில்ட் ஃபண்ட் என்றால் என்ன?

இந்திய ரிசர்வ் வங்கியினால் மத்திய மாநில அரசுகளைப் போல வழங்கக் கூடிய தேதியிட்ட பத்திரங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களே கில்ட் ஃபண்ட்கள் ஆகும்.

இவை அரசு பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் கடன் மீயூச்சுவல் ஃபண்டுகளாகும். இந்த முதலீடுகளுக்கான துறைகள் அரசு செக்யூரிட்டிகளாக (G-Secs) இருப்பது தான், இந்தக் கில்ட் ஃபண்ட்களை மற்ற கடன் பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.

 

இதில் அபாயம் (ரிஸ்க்) உள்ளதா?

இதில் அபாயம் (ரிஸ்க்) உள்ளதா?

இந்தச் செக்யூரிட்டிகள் தனிப்பட்ட முறையில் உறுதிவழங்குவதால், ரிஸ்க் என்பதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். சாதாரணச் சூழ்நிலைகளில் இவை கிரெடிட் அபாயங்கள் இல்லாதவையாக உள்ளன, ஆனால் போர் போன்ற காலகட்டங்களில் இவற்றின் அபாயங்களைக் கணிக்க முடிவதில்லை.

அரசு செக்யூரிட்டிகள் கிரெடிட் ரிஸ்க் ப்ரீ என்ற நிலையில் இருந்தாலும், இவற்றில் தொடர்புள்ள பிற வகையிலான அபாயங்களையும் (ரிஸ்க்) கணக்கில் கொள்ள வேண்டும்.

 

ஆபத்துக் காரணிகள்

ஆபத்துக் காரணிகள்

இலாபம் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது - வங்கிகள் மற்றும் கார்ப்பரேட் வைப்பு நிதிகளைப் போன்ற நிலையான இலாபம் இல்லாதவையாக இவை உள்ளன.

லிக்விடிட்டி

லிக்விடிட்டி

லிக்விடிட்டி ரிஸ்க் (Liquidity risk) - இந்த நிதிகள் மிகவும் குறைவாகவே வர்த்தகம் செய்யப்படுபவர், முதலீடு செய்பவர் என முதலீடு செய்த காலத்தில் லிக்விடிட்டி தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

வட்டி விகித பாதிப்பு..

வட்டி விகித பாதிப்பு..

வட்டி விகித ரிஸ்க் - அரசு செக்யூரிட்டிகள் வட்டி விகித மாற்றங்களால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவையாகும் மற்றும் இந்தப் பாதிப்பு முதிர்வடையும் போது அதிகரிக்கக் கூடும். வட்டி விகிதம் சாதகமாக இல்லையென்றால், இலாபத்தை எதிர்பார்க்க முடியாது.

போர்

போர்

போர், நிலையற்ற அரசியல் நிலை மற்றும் இயற்கை பேரழிவகள் - அரசு தன்னுடைய வார்த்தைகளில் இருந்து பிறழ்வதற்கான சூழல்களாக மேற்கண்ட சூழல்கள் உள்ளன. இது போன்ற சூழல்களில், முதலீடானது பயனற்றதாகி விடுகிறது.

இது மிகவும் அரிதான சூழலாக இருப்பதால், இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. ஏனெனில், இது போன்ற சூழல்களில் எல்லா வகையான முதலீடுகளுமே பயனற்றதாகவே இருக்கும்.

 

மேலும் என்னென்ன செலவினங்கள் உள்ளன?

மேலும் என்னென்ன செலவினங்கள் உள்ளன?

உங்களுடைய இலாபத்தைக் குறைக்கக் கூடிய வகையில் இரண்டு வகையான செலவினங்கள் உள்ளன.

முதலாவதாக வருவது வெளியேறும் செலவினம் (1% ), ஒரு ஆண்டுக்கும் முன்னதாக நீங்கள் உங்களுடைய முதலீட்டை திரும்பப் பெறும் போது நிதி நிறுவனங்கள் இந்தச் செலவினத்தை உங்களிடம் கேட்கின்றன.

 

வரி மதிப்பிடுதல்

வரி மதிப்பிடுதல்

இரண்டாவதாக வருவது வரி மதிப்பிடுதல் - இது குறைந்த காலம் மற்றும் நீண்ட காலம் ஆகிய இரண்டுக்குமே பொருந்தக் கூடியதாகும். குறைந்த கால முதலீட்டு இலாபங்கள் உங்களுடைய வரி செலுத்தும் அடுக்கைப் பொறுத்ததாகவும், நீண்ட கால முதலீட்டு இலாபங்கள் அட்டவணையிடாமல் 10% ஆகவும், அட்டவணையுடன் 20% ஆகவும் செலுத்த வேண்டியிருக்கும்.

கடந்த காலச் செயல்பாடுகள்

கடந்த காலச் செயல்பாடுகள்

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கில்ட் ஃபண்ட்களின் செயல்பாடு சற்றே நன்றாக இருந்தாலும் (10% முதல் 14% வரை), கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகளின் வைப்பு நிதி அளவிற்கே (8% முதல் 9% வரை) இலாபத்தைக் கொடுத்துள்ளன.

ஆனால், முதலீடுகளின் இலாபமானது நீங்கள் எவ்வளவு காலம் முதலீடு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததே என்பதை மனதில் கொள்ள வேண்டும். வட்டி விகிதம் சரியான சுழற்சியில் செல்வதை நீங்கள் புரிந்து கொண்டால், கால அளவைப் பொறுத்து உங்களால் நிறைய இலாபத்தை ஈட்ட முடியும்.

 

கில்ட் ஃபண்ட்களில் யார் முதலீடு செய்யலாம்

கில்ட் ஃபண்ட்களில் யார் முதலீடு செய்யலாம்

6 மாதத்திற்கு ஒருமுறை வட்டியின் மூலம் வருமானம் கிடைத்தால் போதும் என்ற, ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்குக் கில்ட் ஃபண்ட்கள் மிகவும் ஏற்புடையவையாகும்.

வட்டி விகித சுழற்சி

வட்டி விகித சுழற்சி

மற்றொரு இலாபத்தை ஈட்டும் வழியான வட்டி விகித சுழற்சியை நீங்கள் புரிந்து கொண்டால், கில்ட் ஃபண்ட்கள் சாதாரணமாகத் தோற்றமளிப்பதைப் போல ஒன்றும் அவ்வளவு மோசமானவை அல்ல என்று உங்களுக்குப் தெரியும்.

ஆலோசனை..

ஆலோசனை..

இந்த நிதிகளின் விலையானது நடைமுறையில் இருக்கும் வட்டி விகிதங்களுக்கு ஏற்ப இருக்கும், எனவே முதலீட்டு உயர்வு என்ற வகையிலும் உங்களுக்கு இலாபம் இருக்கும். வட்டி விகிதம் குறைவாக இருக்கும் போது அவற்றை விற்கவும் மற்றும் அதிகமாக இருக்கும் போது வாங்கவும் செய்யுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are Gilt Funds?

Gilt funds are debt mutual funds which invest in government securities issued by the Reserve Bank of India like central and state government dated securities and treasury bills.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X