அடிப்படை சேவைகள் கொண்ட டீமேட் கணக்கு பற்றித் தெரியுமா..?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: அடிப்படை சேவை டீமேட் கணக்கு (BSDA) என்பது வரையறுக்கப்பட்ட சேவைகள் மற்றும் குறைந்த செலவுகளில் பெறப்படும் சேவைகள் கொண்ட கணக்கைத் தான் BSDA கணக்கு என அழைக்கப்படுகிறது.

 

Basic Services Demat Account என்பதன் சுருக்கமே BSDA.

யாரால் பி.எஸ்.டி.ஏ. கணக்கைத் திறக்க முடியும்?

ஒரே ஒரு டீமேட் கணக்கை மட்டும் வைத்துக் கொண்டு, அந்தக் கணக்கிற்குத் தனித்த அல்லது முதல் உடைமையாளராக இருக்க விருப்பப்படும் எந்த ஒரு தனிப்பட்ட நபரும் பி.எஸ்.டி.ஏ. கணக்கைத் தொடங்கலாம். ஆனால் எந்த ஒரு தருணத்திலும் டீமேட் கணக்கில் அவர் கொண்டிருக்கும் பங்குகளின் மதிப்பு இரண்டு லட்ச ரூபாயைத் தாண்டக்கூடாது.

அனைத்துக் களஞ்சியத்தையும் சேர்த்து, ஒரு தனிப்பட்ட நபர் தன் பெயரில் ஒரே ஒரு கணக்கை மட்டுமே கொண்டிருக்க முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதற்கான கட்டணங்கள் என்ன?

பி.எஸ்.டி.ஏ.-வின் வருடாந்திர பராமரிப்பு கட்டண (ஆனுவல் மெயிண்டனன்ஸ் சார்ஜஸ் - ஏ.எம்.சி) அமைப்புக் கீழ்வருமாறு:

கட்டணங்கள்

கட்டணங்கள்

1) வைத்திருக்கும் பங்கின் மதிப்பு 50,000 ரூபாய் வரைக்கும் இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு கட்டணமும் கிடையாது.

2) வைத்திருக்கும் பங்கின் மதிப்பு ரூ.50,001-க்கும் ரூ.2,00,000-க்கு இடையே இருந்தால், ஏ.எம்.சி. கட்டணமாக ரூ.100 வரை வசூலிக்கப்படும்.

கணக்கீடு

கணக்கீடு

தினசரி நிறைவு விலை அல்லது பங்குகளின் என்.ஏ.வி அல்லது மியூச்சுவல் ஃபண்ட்களின் எண்ணிக்கை அடிப்படையில் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பை டெபாசிட்டரி பார்ட்டிசிபண்ட்கள் தீர்மானிப்பார்கள்.

கூடுதல் கட்டணம்

கூடுதல் கட்டணம்

ஏதேனும் ஒரு நாளில், வைத்திருக்கும் பங்குகளின் மதிப்புப் பரிந்துரைக்கப்பட்ட வரம்பை மீறினால், சாதாரணக் கணக்கின் (பி.எஸ்.டி.ஏ அல்லாத) மீது பொருந்தக்கூடிய கட்டணத்தை அந்தத் தேதியிலிருந்து டெபாசிட்டரி பார்ட்டிசிபண்ட்கள் வசூலிக்கத் தொடங்குவார்கள்.

டெபாசிட்டரி பார்ட்டிசிபண்ட்கள்
 

டெபாசிட்டரி பார்ட்டிசிபண்ட்கள்

முதலீட்டாளர்களுக்கும் டெபாசிட்டரிகளுக்கும் பொது நபராக இருப்பவர்கள் தான் டெபாசிட்டரி பார்ட்டிசிபண்ட்கள். டெபாசிட்டரியிடம் இருந்து எந்தவொரு சேவைகளைப் பெறவும் முதலீட்டாளருக்கு டெபாசிட்டரி பார்ட்டிசிபண்ட் தேவை.

பரிவர்த்தனை அறிக்கைகள்

பரிவர்த்தனை அறிக்கைகள்

ஒவ்வொரு காலிறுதி ஆண்டிலும் பி.ஓ-விற்கு (பெனிஃபிஷியல் ஓனர்) பரிவர்த்தனை அறிக்கைகள் அனுப்பி வைக்கப்படும். ஏதேனும் காலிறுதி ஆண்டில் எந்தவொரு பரிவர்த்தனையும் நடக்கவில்லை என்றால், அந்தக் காலிறுதி ஆண்டில் பரிவர்த்தனை அறிக்கை அனுப்பி வைக்கப்பட மாட்டாது.

வைப்பு அறிக்கை

வைப்பு அறிக்கை

பரிவர்த்தனையே இல்லாத அல்லது இருப்பே அல்லாத கணக்காக இருந்தால், பங்குகள் வைப்பைப் பற்றிய பௌதீக வடிவிலான வருடாந்திர அறிக்கை ஒன்று, முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள பி.ஓ.-விற்கு அனுப்பி வைக்கப்படும். மீதமுள்ள கணக்குகளுக்கு, பி.ஓ.-வின் தேர்வு படி, பௌதீக வடிவில் அல்லது மின்னணு வடிவில், பங்குகள் வைப்பைப் பற்றிய வருடாந்திர அறிக்கை ஒன்று ஒரு அனுப்பி வைக்கப்படும்.

அறிக்கைகளுக்கான கட்டணங்கள்

அறிக்கைகளுக்கான கட்டணங்கள்

மின்னணு வடிவிலான கட்டணங்களை இலவசமாகப் பெறலாம். இதுவே பௌதீக வடிவிலான அறிக்கைகள் என்றால், பில் சுழற்சியின் போது, குறைந்தது இரண்டு அறிக்கைகளையாவது டி.பி. இலவசமாக அனுப்பி வைக்கும். கூடுதல் அறிக்கைகளுக்கு, ஒரு அறிக்கைக்கு ரூ.25/-க்கு அதிகரிக்காமல் கட்டணம் வசூலிக்கப்படும்.

சேவைகளை மறுசீரமைப்பு செய்தல்: டி.பி.-க்களின் இணக்கச் செலவுகளைக் குறைக்க, வழக்கமான சாதாரணக் கணக்குகளின் மீது கீழ்கூறிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது:

பரிவர்த்தனைகள் இல்லாத கணக்குகள்

பரிவர்த்தனைகள் இல்லாத கணக்குகள்

வருடம் முழுவதும் இருப்பு இல்லாத மற்றும் பரிவர்த்தனைகள் நடக்காத கணக்குகளின் பி.ஓ.-களுக்குத் தாங்கள் வைத்திருக்கும் பங்குகளைப் பற்றிய பௌதீக வடிவிலான வருடாந்திர அறிக்கை ஒன்றினை டி.பி. அவர்களுக்கு அனுப்பி வைக்கும். அந்தக் கணக்குகளில் பரிவர்த்தனை நடக்கத் தொடங்கினால், பரிவர்த்தனை அறிக்கை அனுப்பி வைப்பது தொடரப்படும்.

இருப்பு இல்லாத கணக்குகள்

இருப்பு இல்லாத கணக்குகள்

வருடம் முழுவதும் இருப்பு இல்லாத கணக்குகளுக்கு, அதன் இருப்புப் பூஜ்யமாக இருக்கும் காலம் வரை, பரிவர்த்தனை அறிக்கை அனுப்பி வைக்கப்பட மாட்டாது. இருப்பினும், தாங்கள் வைத்திருக்கும் பங்குகளைப் பற்றிய வருடாந்திர அறிக்கை ஒன்றினை பி.ஓ. அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கடன் நிலுவையைக் கொண்டிருக்கும் கணக்குகள்

கடன் நிலுவையைக் கொண்டிருக்கும் கணக்குகள்

வருடத்தில், பரிவர்த்தனைகள் இல்லாமல் கடன் நிலுவையைக் கொண்டிருக்கும் கணக்குகளுக்கு, அந்த வருடத்திற்கான பங்கு உடைமைகள் பற்றிப் பி.ஓ.-க்களுக்கு ஒரு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What Is Basic Services Demat Account (BSDA)?

"Basic Services Demat Account" (BSDA) is a demat account with limited services and reduced costs for small investors.
Story first published: Wednesday, November 25, 2015, 16:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X