'ஆதார் கார்டு' மூலம் மக்களுக்கும் அரசுக்கும் என்ன லாபம்..?

Written By: Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil

சென்னை: ஆதாருடன் இணைக்கப்பட்ட திட்டங்களில் அரசின் நிர்வாகச் செலவுகளை அதிகளவில் குறைவதுடன், ரேஷன் அட்டைகள், கல்வி உதவி தொகை, ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி கணக்குகள் போன்றவற்றையும் வேகமாக மற்றும் அதிக நம்பகமான வழியில் அணுக வழி வகைச் செய்கின்றது.

(இ-ஆதார் அட்டையை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்வது எப்படி..?)

வங்கிக்கு வருடா வருடம் சென்று ஓய்வூதியதாரர்கள், தங்களின் ஓய்வூதியத்திற்கான இருப்பை உறுதிப்படுத்துதல், சாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ் பெறுவது, வரி செலுத்துவது, மற்றும் சந்தையில் நிதி பொருட்கள் வாங்குவது போன்றவை, ஆதார் அடையாளத்தின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்திவிட்டால் மிக எளிதாக முடிந்து விடும்.

'ஆதார் கார்டு' மூலம் மக்களுக்கும் அரசுக்கும் என்ன லாபம்..?

தனிப்பட்ட அடையாள எண் (ஆதார் அட்டை) ஒரு எளிய மற்றும் ஒப்பீட்டளவில் தங்குதடையற்ற முறையில் ஒருவருக்கான அடையாளத்தை வழங்குகிறது. இது சில தனியார் வர்த்தகச் செயல்பாட்டு முறைகளில் ஒருவருக்கான அடையாள அட்டையாகவும் செயல்படுகின்றது.

ஏனெனில் இதில் ஒருவருக்கான அடையாளத்தை உறுதிப்படுத்துவது என்பது மிகவும் எளிதானது மற்றும் பாதுகாப்பானது.

(ஆதார் அட்டையில் அப்படி என்னதான் இருக்கு??)

ஆதார் அடையாள எண் இது வரை சுமார் நூறு கோடி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள எண் ஒவ்வொரு சாதாரண மனிதனின் வாழ்விலும் உபயோகப்படுத்தப்படுகின்றது. ஏனெனில் இந்திய அரசு ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகள் மூலமே மானியங்கள் மற்றும் உரிமங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டையானது ஓட்டுநர் உரிமம் அல்லது ரேஷன் கார்டுகளை விட எளிதாக எடுத்துச் செல்லும்படி இருப்பதுதடன் மிகவும் நம்பகமாக உள்ளது. ஓட்டுநர் உரிமம் அல்லது ரேஷன் கார்டுகளை எளிதில் பிரதி எடுத்து விட முடியும் மற்றும் இவை இரண்டும் மோசடியால் பாதிக்கப்படலாம்.

(ஆதார் அட்டை தொலைந்து போனதா? அப்ப இத படிங்க..)

அரசு முகவர், ஒருவரின் ஆதார் அட்டை இல்லாமல் அதன் தகவல்களை, மத்திய தகவல் தொகுப்பில் இருந்து நேரடியாக நிகழ் காலத்தில் பெற்று ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தை மிக எளிதாகச் சரிபார்க்க முடியும்.

இது போன்றே மொபைல் போன் சிம் கார்டு வழங்கல், வங்கிக் கணக்கில் ஒருவரின் சம்பளத்தை டெபாசிட் செய்வது போன்ற தனியார் வர்த்தக நடைமுறைகளும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பின் மிக எளிதாக முடியும். ஏனெனில் ஆதார் எண்ணின் அடிப்படையில் ஒருவரின் அடையாளத்தைச் சரிபார்ப்பது மிகவும் எளிதாகி விட்டது.

(ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி?)

வங்கி மேலாளர்கள், ஒருவருடைய ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு மிகுந்த நம்பிக்கையுடன் கடன் வழங்கலாம். மேலும் அரசின் மானிய உதவிகளும் ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகளுக்கே வழங்கப்படுகின்றது. ஒருவருடைய வங்கி லாக்கர்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டால், அது ஆள் மாறாட்டத்தைத் தடுக்கும்.

ஆதார் அரசாங்கத்தின் நலத் திட்டத்தில், முறைகேட்டைத் தடுத்துப் பணத்தைச் சேமிக்க உதவும். அதோடு மட்டுமல்லாமல், ஒருவர் எந்தத் திட்டங்களுக்காக அரசாங்கத்தை நாடுகின்றார் என்பதைச் சேமிக்காமல், ஆதார் ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஒரு நடுநிலையான திட்டமாகவே பயன்படும்.

ஆதார் பயன்படுத்தித் தற்போது அரசாங்கம் வழங்கிவரும் மிக முக்கியமான திட்டம் என்னெவெனில், ஒருவருடைய வங்கிக் கணக்கிற்கு அவருக்கான எல்பிஜி கேஸ் மானியத்தை நேரடியாக வழங்குவதுதான். இதன் மூலம் ஒருவருடைய எரிவாயு மானியம் எந்தவிதமான தடங்களும் இல்லாமல் அவரை நேரடியாகச் சென்று சேருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Don't underestimate the power of aadhaar card

Aadhaar-linked schemes are expected to reduce the government's administrative costs while also making issuance of ration cards, access to scholarships, pensions and provident fund accounts faster and more reliable.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns