பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கான சூப்பரான 5 முதலீட்டு திட்டங்கள்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

ஓய்வு பெற்றவர்களுக்கு தங்கள் ஓய்வூதிய நிதிகளை சிறந்த முறையில் பயன்படுத்தி வரி செலுத்த வேண்டிய பொறுப்புகளை கரையிலேயே நிறுத்துவதும், மேலும் ஒரு வழக்கமான வருமான வருவாயை வழங்குவதும் முதன்மையான முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.

ஒரு நிலையான வருமானத்துடன் சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீட்டுக் கலவையில் ஒரு ஓய்வூதிய நிதித் திட்டத்தை கட்டுமானிப்பது பணியிலிருந்து ஓய்வு பெற்ற பலருக்கும் மிகப் பெரிய சவாலாக விளங்குகின்றது.

இந்த சவால் ஓய்வூதிய நிதிகளை மீறியதல்ல - ஒருவர் 58 அல்லது 60 வயதில் ஓய்வு பெறுகிறார், ஆனால் அதே சமயம் அவருடைய ஆயுள் மதிப்பின் எதிர்ப்பார்ப்பு 80 வயது வரை கூட இருக்கலாம்.

பணி ஓய்வு பெற்றவர்கள் அவர்களுடைய மாதாந்திர வீட்டுச் செலவுகளுக்கு வருமான ஆதாரத்தை வழங்கும் சில முதலீட்டுத் தேர்வுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் திட்டங்களின் கலவையைக் கொண்டு ஒரு ஓய்வுப் பெற்றவர்களுக்கான நிதி திட்டத்தை உருவாக்குவதே இதன் யோசனையாகும்.

1. எஸ்சிஎஸ்எஸ் (மூத்தக் குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்)

பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்களின் முதல் தேர்வு ‘மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்' (எஸ்சிஎஸ்எஸ்) எனும் இந்தத் திட்டம் அவர்களுடைய முதலீட்டு திட்டங்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய ஒரு திட்டமாகும். பெயருக்கேற்றாற் போல இந்தத் திட்டம் மூத்த குடிமக்கள் அல்லது சமீபத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் எஸ்சிஎஸ்எஸ் திட்டத்தை அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கியில் பெறலாம்.

சமீபத்தில் ஓய்வு பெற்றவர்கள் இந்த எஸ்சிஎஸ்எஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அவர்கள் தங்கள் ஓய்வூதிய நிதிகள் கிடைக்கப்பெற்ற மூன்று மாதங்களுக்குள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் வசதிகள் வழங்கப்படுகின்றன. எஸ்சிஎஸ்எஸ் ஒரு ஐந்து வருட கால வரையறையைக் கொண்ட திட்டமாகும். இந்தத் திட்டம் முதிர்வடைந்த பிறகு மேலும் மூன்று வருடங்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.

 

வட்டி விகிதம்

தற்போது எஸ்சிஎஸ்எஸ் திட்டத்தில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.6 சதவிகிதம் ஆகும். காலாண்டுக்கு ஒருமுறை வட்டி செலுத்தப்படும் இந்தத் திட்டம் முழுமையான வரிவிதிப்புக்கு உட்பட்டது. இந்த வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை அமைக்கப்படுகின்றன.

மேலும் 100 அடிப்படைப் புள்ளிகளுடன் விரிவுப்படுத்தப்பட்டு ஜி-பிரிவு விகிதங்களுடன் இணைக்கப்படுகிறது. ஒருமுறை முதலீடு செய்து விட்டால் ஒட்டுமொத்த கால வரையறை வரையிலும் இந்த வட்டி விகிதங்கள் நிலையாக நிர்ணயிக்கப்படும். தற்சமயம், அனைத்து நிலையான வருவாய் வரிவிதிப்புத் திட்டங்களுக்கு மத்தியில் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது எஸ்சிஎஸ்எஸ் திட்டம், மிக உயர்ந்த வரிவிதிப்புக்கு பிறகான வருவாயை வழங்குகிறது.

 

15 லட்ச ரூபாய்

இதில் மேல் முதலீட்டு வரம்பு 15 இலட்சங்களாகும் மேலும் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளைத் துவங்கலாம். முதலீடு செய்யப்பட்ட மூலதனத்திற்கும் மற்றும் அதற்கு செலுத்தப்படும் உறுதி செய்யப்பட்ட வட்டிக்கும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ உத்திரவாதம் உள்ளது.

சிறப்பம்சம்

மேலும் இதிலுள்ள சிறப்பம்சங்கள் என்னவென்றால், எஸ்சிஎஸ்எஸ் இல் செய்யப்படும் முதலீடுகள் பிரிவு 80சி இன் கீழ் வரிச்சலுகைகளுக்குத் தகுதியுடையது. மேலும் இந்தத் திட்டத்தில் முதிர்வு காலத்திற்கும் முன்கூட்டியே பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கிறது.

2. பிஓஎம்ஐஎஸ் (அஞ்சல் அலுவலக மாதாந்திர வருவாய்த் திட்டம்)

பிஓஎம்ஐஎஸ் எனப்படும் அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் அதிகபட்சமாகக் கூட்டு உரிமையின் கீழ் ரூ. 9 இலட்சமும் மற்றும் தனி நபர் உரிமையின் கீழ் ரூ. 4.5 இலட்சம் வரையும் மூலதன முதலீட்டைக் கொண்ட ஒரு ஐந்து வருட முதலீட்டுத் திட்டமாகும். வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது.

மேலும் தற்போதைய நிலவரப்படி ஆண்டுக்கு 7.8 சதவிகித வட்டி விகிதத்தில் மாதந்தோறும் வட்டிப் பணம் செலுத்தப்படுகிறது. பிஓஎம்ஐஎஸ் இல் செய்யப்படும் முதலீடுகள் எந்த விதமான வரிச் சலுகைகளுக்கும் தகுதி பெறாது. மேலும் இதிலிருந்து பெறும் வட்டி முழுமையான வரிவிதிப்புக்குட்டபட்டது.

ஒவ்வொரு மாதமும் தபால் அலுவலகத்திற்கு செல்வதற்கு பதிலாக வட்டி நேரடியாக அதே தபால் அலுவலகத்தின் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், ஒருவர் பெறும் வட்டியை தன் சேமிப்புக் கணக்கிலிருந்து அதே அஞ்சல் அலுவலகத்தின் தொடர்வைப்புத் தொகைக்கு பணப்பரிமாற்றம் ஆகும் படி கட்டளை பிறப்பிக்கலாம்.

 

3. வங்கி வைப்புநிதிகள் (எஃப்டி க்கள்)

வங்கி வைப்பு நிதிகள் (எஃப்டி) ஓய்வுப் பெற்றவர்களிடம் பிரசித்தி பெற்று விளங்கும் மற்றொரு தேர்வாகும். பாதுகாப்பான மற்றும் நிலையாக நிர்ணயிக்கப்பட்ட வருவாய், பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களை சிறப்பாகச் சென்றடைகிறது, மேலும், இதன் எளிமையான இயக்கம் இதை நம்பகமான வருவாயாக ஆக்குகிறது. இருப்பினும், கடந்த சில வருடங்களாகவே வங்கி வைப்பு நிதிகளின் வட்டி விகிதம் சரிந்து வருகிறது.

தற்சமயம், இது 1 முதல் 10 ஆண்டுகள் கால வரையறை கொண்ட வைப்புத் தொகைகளுக்கு ஆண்டுக்கு சுமார் 7.5 சதவிகித வட்டி விகிதத்தில் நிலைபெற்றுள்ளது. வங்கியைப் பொறுத்து மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 0.25 முதல் 0.5 சதவிகிதம் வரை கூடுதல் வட்டி விகிதத்தை பெறுகின்றனர். வெகு சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு நீண்ட கால வரையறை கொண்ட வைப்பு நிதிகளுக்கு சுமார் 7.75 சதவிகிதம் வரை வட்டியை வழங்குகின்றன.

 

நெகிழ்வுத்தன்மை

எஸ்சிஎஸ்எஸ் மற்றும் பிஓஎம்ஐஎஸ் திட்டங்களைப் போலல்லாமல், கால வரம்பைப் பொறுத்த வரையில் வங்கி வைப்பு நிதிகள் நெகிழ்வுத்தன்மையை அளிக்கின்றன. எனவே, ஒரு குறிப்பிட்ட காலம் வரை நிதித் திட்டத்தைப் பூட்டுவதற்கு பதிலாக, ஒரு முதலீட்டாளர் வெவ்வேறு முதிர்வுத் திட்டங்களில் அந்தப் பணத்தை பரப்பலாம்.

இது நிதிகளுக்கு எளிதாகப் பணமாகும் தன்மையை வழங்குவதோடல்லாமல், மேலும் ‘மறு-முதலீட்டு அபாயத்தையும்' கையாள்கிறது. குறுகிய கால வைப்புநிதி முதிர்ச்சியடையும் போது, அதை நீண்ட கால வரையறைக்குப் புதுப்பித்துக் கொள்ளுங்கள் மேலும் உங்கள் வங்கியிலுள்ள பல்வேறு வைப்புநிதிகள் முதிர்வடையும் போதும் இதே செயல்முறையைத் தொடருங்கள்.
அவ்வாறு செய்யும் போது, உங்கள் வழக்கமான வருமானத் தேவை எதிர்கெ்கொள்ளப்படுகிறதா மற்றும் பல்வேறு முதிர்வுத் தொகைத் திட்டங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகை பரப்பப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.

 

வரி சேமிப்பு

வரியை சேமிக்க நினைப்பவர்களுக்கு ஐந்து வருட வங்கி சேமிப்பு வைப்பு நிதித் திட்டங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் செய்யப்படும் முதலீடுகள் பிரிவு 80சி யின் படி வரிச் சலுகைகளுக்கு தகுதியுடையதாகிறது. இருந்தாலும், அத்தகைய வைப்புத் தொகைகள் ஐந்து வருடங்களுக்கு பூட்டுக் காலத்தைக் கொண்டிருக்கும் என்பதால், முதிர்வு காலத்திற்கு முன்பாக இடையிலேயே சீக்கிரமாகப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு சாத்தியமில்லை.

இதில் கிடைக்கும் வட்டி வருமானம் வரிவிதிப்புக்கு உட்பட்டதாக இருந்தாலும், குறைந்தபட்சம் முதலீடு செய்யப்பட்ட வருடத்திலாவது ஈடுசெய்யும் வகையில் வரி சேமிப்புத் தொகை ஒதுக்கப்படுகிறது. பெரும்பாலான வங்கிகள் வரி சேமிப்பற்ற வைப்புத் தொகை வட்டி விகிதங்களை விட சற்று குறைவான வட்டி விகிதங்களை வழங்குகிறது. எனவே, நீங்கள் இந்த வங்கிகளில் முதலீடு செய்ய விரும்புவதாக இருந்தால் மிகுந்த கவனமாகத் தேர்ந்தெடுங்கள்.

 

4. பரஸ்பர நிதிகள் (எம்எஃப்-க்கள்)

ஒருவர் ஓய்வு பெறும் போது அடுத்த இருபது ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட காலத்திற்கு வருமானம் ஈட்டாமல் இருக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனவே ஓய்வூதிய நிதிகளின் ஒரு பகுதியை பங்குச்சந்தை ஆதரவைப் பெற்ற நிதித் திட்டங்களில் முதலீடு செய்வது முக்கியத்துவம் பெறுகின்றது. ஓய்வு பெற்ற ஆண்டுகளில் கூட ஓய்வூதிய வருமானம் (வட்டி, பங்காதாயம் ஆகியவற்றின் வழியாகப் பெற்றது) பணவீக்கத்திற்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்ற சொத்துக்களை விட பங்குச்சந்தைத் திட்டங்கள் அதிகளவு பணவீக்க சரிசெய்யப்பட்ட வருவாயை வழங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அபாயம் (ரிஸ்க்)

அபாய வெளிப்பாட்டைப் பொறுத்து, ஒருவர் ஒரு குறிப்பிட்டத் தொகையை பங்குச் சந்தை பரஸ்பர நிதிகளிலும் (எம்எஃப் க்கள்) மேற்கொண்டு பணத்தை பன்முகப்படுத்துவதற்கு மிகப்பெரிய மூலதனங்களிலும் மற்றும் சமச்சீர் நிதிகளிலும், அதில் சிறிதளவு தொகையை மாதாந்திர வருமானத் திட்டங்களிலும் (எம்ஐபி க்கள்) கூட முதலீடு செய்யலாம். பணி ஓய்வு பெற்றவர்கள் நடுத்தர மற்றும் சிறு மூலதனங்கள் உள்ளிட்ட நிதி சார்ந்த கருப்பொருள் மற்றும் துறை சார்ந்த நிதித் திட்டங்களிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதிகமான ஆனால் நிலையற்ற வருவாயை விட நிலையான வருவாயை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

வரியும்.. வருமானமும்..

ஒரு ஓய்வு பெற்றவரின் நிதித் திட்டத்தில் கடன் பரஸ்பர நிதிகளும் ஒரு பகுதியாக இருக்கலாம். குறிப்பாக அதிக அளவு வரி அடைப்புக்குள் வருபவர்களுக்கு கடன் நிதிகளின் வரிவிதிப்பு முறை அவற்றை வங்கி வைப்பு நிதிகளை விட சிறந்த தேர்வாக ஆக்குகிறது. அதே சமயம், வரிவிதிப்பு அடைப்பின் படி, வங்கி வைப்பு நிதிகள் மீதான வட்டி முழுவதும் வரிக்கு உட்டபட்டதாக இருக்கும் போது, (அதிகபட்ச அடுக்கு 30.9 சதவிகிதம்) ஆனால், கடன் நிதிகளிலிருந்து தரப்படும் வருமானம் வரிவிதிப்பற்கு பொருந்தாமல் மூன்று வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கு வைத்திருந்தால், பொருளாதார சீரமைப்பிற்குப் பிறகு, 20 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது.

5. வரிகளற்ற பத்திரங்கள்

வரிகளற்ற பத்திரங்கள் தற்போதைய முதன்மை சந்தையில் கிடைக்கப் பெறுவதில்லை என்றாலும், அதை ஒரு பணி ஓய்வுப் பெற்றவரின் நிதித் திட்டத்தில் சேர்க்கலாம். இந்தப் பத்திரங்கள், இந்திய ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஆர்எஃப்சி), பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎஃப்சி), இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ), வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு மாநகராட்சி லிமிடெட் (ஹெச்யுடிசிஓ), கிராமிய மின்வசதி கார்ப்பரேஷன் லிமிடெட் (ஆர்ஈசி), என்டிபிசி லிமிடெட், மற்றும் இந்திய புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மிக உயர்ந்த பாதுகாப்பு மதிப்பெண்களைப் பெற்ற மற்றும் பல அரசாங்க ஆதரவு கொண்ட நிறுவனங்களால் முதன்மையாக வெளியிடப்படுகிறது. இருப்பினும், அவை முதலீட்டு காப்பாவணங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளதால், ஒருவர் அவற்றை வாங்கிப் பங்குப் பரிமாற்றகங்களில் விற்கலாம்.

கவனித்துக்கொள்ள வேண்டியவை

ஓய்வு பெற்றவர்கள் வரிகளற்ற பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு சில விஷயங்களை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று, அவை 10, 15, 20 வருடங்களுக்கு பிறகு முதிர்வடையும் நீண்ட கால வரையறைக் கொண்ட முதலீட்டு திட்டங்கள் ஆகும். அடுத்ததாக, நீண்ட காலத்திற்கு இந்த நிதிகள் உங்களுக்குத் தேவைப்படாது என்பதில் உறுதியாக இருந்தால் மட்டுமே அவற்றில் முதலீடு செய்யுங்கள்.

இரண்டாவதாக, இதிலிருந்து கிடைக்கும் வட்டிக்கு வரிவிதிப்பு கிடையாது. எனவே, வருமான ஆதாரத்திலிருந்து (டிடிஎஸ்) வரிப்பிடித்தம் கிடையாது. கடந்த இரண்டு முறைகளாக வரிகளற்ற பத்திர வெளியீடுகளில் கிடைத்த வருவாய் நற்பயன்கள், குறிப்பாக வரி அடைப்புக்குள் வரும் முதலீட்டாளர்களுக்கு அதே நேரத்தில் கிடைத்த வரி விதிப்புக்கு உட்பட்ட மாற்று முதலீடுகளிலிருந்து கிடைத்த வருவாயுடன் ஒப்பிடும் போது மிகுந்த சாதகமாக இருந்தது.

மூன்றாவதாக, இந்த வரிகளற்ற பத்திரங்களின் பணமாக்கும் தன்மை மிகவும் குறைவு. பொதுவாக முதலீட்டாளர்கள் வெளியேறும் வழியை வழங்க இவை பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுகின்றன. ஆனால் இதன் விலை மற்றும் அளவு (பங்கு சந்தைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள படி) அவற்றை வெளியிடும் போது வர்த்தக விளையாட்டைக் கெடுக்கலாம். கடைசியாக, அவை வழக்கமாக வருடாந்திர வட்டியை செலுத்துகின்றன, மாதாந்திர வட்டியை அல்ல. எனவே ஒரு ஓய்வு பெற்றவரின் வழக்கமான வருமானத் தேவையை எதிர்க்கொள்ள முடியாமல் போகலாம்.

 

உதாரணம்

வட்டி விகிதங்கள் சரியும் சந்தர்ப்பங்களில் பங்குச் சந்தையில் வரிகளற்ற வருவாய் கூப்பன் விகிதம் 8.3 சதவிகிதம், ரூ. 1217 க்கு கிடைக்கப்பெறும். 6.4 சதவிகிதம் வருவாயுடன் 2027 இல் முதிர்வடையும் ஒரு வரியற்ற பத்திரத்தை (முகப்பு மதிப்பு ரூ. 1000) முதலீட்டாளர் முதிர்வு காலத்தில் இறுதி வரை வைத்திருந்தால் கிடைக்கும் வட்டிச் செலுத்தல்கள், பத்திரத்தின் கூப்பன் விலையைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது, ஒரு முதலீட்டாளர் அவருடைய முதலீட்டின் மீது வரிகளற்ற வருமானமாக 8.3 சதவிகிதத்தை பெறுகிறார் மற்றும் பத்திரத்தை முதிர்வு காலம் வரை வைத்திருந்தால் உண்மையில் திரும்பப் பெறும் வருவாய் 6.4 சதவிகிதமாக இருக்கும்.

6. உடனடி வருடாந்திர வருவாய்

ஓய்வு பெற்றவர்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் உடனடி வருடாந்திர வருவாய்த் திட்டங்களையும் பரிசீலிக்கலாம். ஓய்வு ஊதியம் அல்லது ஆண்டு வருவாய் தற்சமயம் ஆண்டுக்கு சுமார் 5 முதல் 6 சதவிகிதமாக இருக்கின்றது. மேலும் இது முற்றிலும் வரிவிதிப்புக்கு உட்பட்டது. மேலும் இதில் முதலீட்டாளருக்கு மூலதனத்தை திருப்பித் தரும் வசதி இல்லை. அதாவது, இந்த வருடாந்திர வருவாய்த் திட்டத்தை வாங்குவதற்காக பயன்படுத்தப்பட்ட நிதிகள் அல்லது தொகை திரும்பப் பெறக்கூடியது அல்ல. இங்கே, 7 முதல் 10 வெவ்வேறு வித்தியாசமான ஓய்வூதியத் தேர்வுத் திட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் வாழ்நாள் முழுவதற்குமான சுய ஓய்வூதிய திட்டம், முதலீட்டாளர் இறந்த பிறகு அவரது வாழ்க்கைத் துணைவர் அல்லது வாரிசுதாரர்களுக்கு நிதியைத் திருப்பி அளிக்கும் திட்டம் ஆகியவையாகும்.

எந்த ஒரு ஓய்வூதியத் திட்டத்தின் கீழும் முதலீட்டாளர்களுக்கு தொகுக்கப்பட்ட நிதிகள் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. இந்த உடனடி ஆண்டு வருவாய்த் திட்டம் தனது சொந்த நிதித் திட்டத்தை தேர்ந்தெடுத்து கட்டுமானித்துக் கொள்ளக்கூடிய திறமை கொண்ட ஒரு முதலீட்டாளருக்குப் பொருந்தாது. எனவே, உங்கள் சொந்த நிதித் திட்டங்களை நிர்வகிக்கும் நிதி சாதனங்கள் உங்களிடம் இருந்தால், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதை விட பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் உங்கள் பணத்தை பன்முகப்படுத்துவது சிறந்ததாகும். மேலும் இந்த உடனடி ஆண்டு வருவாய் திட்டங்கள் தற்போது சரிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கின்றன என்பதும் அறிவுறுத்தப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

5 investment options for the retired

5 investment options for the retired
Story first published: Tuesday, September 19, 2017, 16:54 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns