‘முதலீடு’ மற்றும் ‘சேமிப்பு’ இடையில் உள்ள வித்தியாசம் என்ன?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

நிதியியல் திட்டமீட்டாளர்கள், நிதி ஆலோசகர்கள் மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் 'சேமிப்பு' மற்றும் 'முதலீடு' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை நாம் அடிக்கடிக் கேட்கிறோம்.

ஆனால் சேமிப்பும் முதலீடும் இரண்டு முற்றிலும் வேறுபட்ட கருத்துக்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

சம்பளம் அல்லது வருவாய்

ஒவ்வொரு மாதமும் நம்மில் பெரும்பாலானவர்கள் ஒரு வருமானத்தை ஈட்டுகிறோம். இது சம்பளம் அல்லது வியாபார வருவாய் என்று இரண்டில் ஏதேனும் ஒரு வடிவத்தில் இருக்கும். அதன் பிறகு, மேலும் நாம், உணவு, உடை, வாடகை, மின்சார மற்றும் தொலைப்பேசிக் கட்டணங்கள் போன்ற நமது செலவுகளைக் கொண்டிருக்கிறோம்.

சேமிப்பு

ஒருமுறை நமது வருமானத்திலிருந்து செலவுகளுக்குப் பணம் செலுத்தி விட்டால், மீதமிருக்கும் தொகையைத் தான் வழக்கமாகச் சேமிப்பு என்று அழைக்கிறோம். நிச்சயமாக, நாம் எந்த அளவுக்கு அதிகமாகச் சேமிக்கிறோமோ அவ்வளவு நல்லது.

செலவு

மேலும் நாம் எப்பொழுதும் நமது செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆனாலும், வாடகை செலுத்தல் அல்லது கடன் தவணை போன்ற சில செலவுகளை நம்மால் எப்பொழுதும் தவிர்க்கவே முடியாது. உங்கள் நோக்கம் செல்வத்தை உருவாக்க வேண்டும் என்பதாக இருந்தால், சேமிப்பு மட்டுமே போதுமானதல்ல. நாம் நமது சேமிப்பைக் கொண்டு மேலும் அதை அதிகரிக்க ஏதாவது செய்ய வேண்டும்.

முதலீடு

இங்கே தான் முதலீடுகள் நம்முன் வருகின்றன. அவை காலப்போக்கில் நமது பணத்தை அதிகரிக்கச் செய்ய உதவும் நிதி திட்டங்கள் ஆகும்.

பணவீக்கம்

நாம் முதலீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம், ஏனென்றால் நாம் வாழ்வதற்கான செலவுகள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அது தான் பணவீக்கம் என்றழைக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், பணத்தின் மதிப்பு குறைந்து விடுகிறது.

மதிப்பிழக்கும் பணம்

நீங்கள் தற்போது ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000 சேமிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் இந்த 10,000 ரூபாயை அப்படியே விட்டுவிட்டால், சில வருடங்கள் கடந்த பின்பு அதைக் கொண்டு மிக மிகக் குறைந்த அளவு பொருட்களையே நம்மால் வாங்க முடியும். இது ஏனென்றால், காலப்போக்கில் பணம் அதன் மதிப்பை இழக்கிறது. மேலும், சரக்குகள் மற்றும் சேவைகளின் விலை உயர்கிறது. அதனால் தான் உங்கள் பணமும் வளர்ச்சியடைய வேண்டியது அவசியமாகிறது.

முதலீடு ஏன் முக்கியம்

பணவீக்கத்தின் வேகத்தை விட விரைவாக வளர வேண்டும். அப்போது தான் குறைந்தபட்சம் முன்பொரு காலத்தில் நீங்கள் வாங்கிய அதே பொருட்களை வாங்கவாவது உங்களால் முடியும். இங்கே தான் நமக்கு முதலீடுகள் உதவுகின்றன.

மியூச்சுவல் ஃபண்டு

மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டிற்கான உன்னதமான உதாரணம். இதிலுள்ள தற்போதைய சலுகைகள் சமபங்கு நிதிகள் மற்றும் கடன் நிதிகளாகும். ஆனால் உங்களால் எந்தளவுக்குத் துணிந்து அபாயத்தை எடுக்க முடியும் என்று மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மிக விரைவான வேகத்தில் வளரும் முதலீடுகளும் உள்ளன. மேலும் மெதுவான வேகத்தில் வளரும் முதலீடுகளும் இருக்கின்றன. ஆனால் அவை பணவீக்கத்தை விட அதிகமான வருமானத்தைக் கொடுக்கின்றன.

 

பிகசட் டெபாசிட் மற்றும் பிபிஎப்

நிலையான வைப்பு நிதிகள் மற்றும் பொது வருங்காலச் சேமிப்பு நிதி போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களும் கூடச் சேமிப்பின் வடிவங்களேயாகும். அனைத்து முதலீட்டுத் திட்டங்களும் அனைவருக்கும் பொருந்தாது. நீங்கள் மிக அதிக வரிவிதிப்பு வரம்பிற்குள் இருந்தால் நிலையான வைப்பு நிதித் திட்டம் பணவீக்கத்தை மீறிய வருவாயை உங்களுக்குத் தராது.

உங்கள் பணம் ஒரு அர்த்தமுள்ள வேகத்தில் வளருவதில்லை, எனவே அது பொதுவாக ஒரு நல்ல முதலீடு உங்கள் பணப் பெட்டிக்கு அவசியம் செய்ய வேண்டியதைச் செய்வதில்லை. ஆனால் நீங்கள் மிகக் குறைந்த வரி விதிப்பு வரம்பிற்குள் இருந்து, அபாயங்களை வெறுப்பவராக இருந்தால், அப்போது நிலையான வைப்பு நிதிகள் உங்களுக்கு நன்கு வேலை செய்யும்.

 

சேமிப்பு கணக்கு

பணத்தை வங்கியில் சேமிப்புக் கணக்கில் வைத்தல் ‘சேமிப்பு' என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்படுமே அன்றி ‘முதலீடு' என்று கருதப்படாது. ஏனென்றால் வங்கி சேமிப்புக் கணக்கில் உங்கள் பணம் செயலற்று இருக்கிறது. அளவுக்கதிகமான சேமித்தாலும் மிகக் குறைந்த முதலீடு செல்வத்தை உருவாக்காது.

லிக்விட் ஃபண்டுகள்

உண்மையில், லிக்விட் ஃபண்டுகள் பல்கி பெருகும் தன்மையால் உடனடி பண மீட்பு வசதியை அவர்களில் பலர் அளிக்கத் தொடங்கியுள்ளனர். உங்கள் அதிகப்படியான சேமிப்புப் பணத்தை லிக்விட் டண்டு கணக்கிற்கு மாற்றி மேலும் உங்கள் வங்கிக் கணக்கில் மிகக் குறைந்தபட்ச நிலுவைத் தொகையாவது பராமரித்தால் உங்கள் சேமிப்பும் கூட உயரும்.

ஆனால் லிக்விட் ஃபண்டுகள் பணத்தை நிறுத்தி வைக்கும் வாகனம்; ஒரு சேமிப்பு வாகனம், அவ்வளவு தான். செல்வத்தை உருவாக்குவதற்கான முதலீடுகளில், அபாயங்களை எடுக்கத் துணியும் உங்கள் பசியைப் பொறுத்து, உங்களுக்கு ஒரு கூடை நிறைய மியூச்சுவல் ஃபண்டு கடன் நிதித் திட்டங்களும் தேவைப்படும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What is the difference between ‘investment’ and ‘savings’?

What is the difference between ‘investment’ and ‘savings’?
Story first published: Tuesday, October 24, 2017, 11:30 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns