லாபம் அளிக்கும் வகையில் மியூச்சுவல்ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடானது 2014ம் ஆண்டு முதல் கணிசமாக அதிகரித்து வருகின்றது. அதிலும் பண மதிப்பிழப்பு முயற்சிக்குப் பின்னர் சில்லறை முதலீட்டாளர்கள் பல்வேறு முதலீடு திட்டங்களில் இருத்த தங்களுடைய சேமிப்பைப் பரஸ்பர நிதிகளுக்கு மடை மாற்றி விட்டுள்ளனர்.

முதலீட்டாளர்கள் பண மற்றும் நிரந்தர வைப்புகளில் உள்ள தங்களுடைய சேமிப்புகளை முறையான முதலீட்டுத் திட்டங்களின் மூலம் பரஸ்பர நிதிகளில் மிக அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல், மொத்தமாகவும் முதலீடு செய்து வருகின்றனர். பரஸ்பர நிதி அமைப்புகள் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களின் மேற்கொள்ளப்படும் முதலீடு, 2014ம் ஆண்டிற்குப் பிறகு சுமார் 40 சதவீத அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. எங்கே ஈக்விட்டிஸ் ரிசர்ச்சின் ஆய்வானது, பரஸ்பர நிதியில் மேற்கொள்ளப்படும் அதிக முதலீட்டுச் சுழற்சி என்பது மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று வரலாற்றுச் சுழற்சிகளை மேற்கோள் காட்டி சுட்டிக்காட்டுகின்றது. அவர்களின் கூற்று தற்பொழுது நிலவும் முதலீட்டுக் காலத்திற்கு சமமானதாகும். ஆனால், தற்பொழுது நிலவும் சுழற்சியானது முந்தைய சுழற்சிகளுக்கு மாறாக, பொருளாதாரத்தின் அடிப்படைத் தன்மையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத பொழுது ஏற்பட்டுள்ளது என அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களுக்கு எதனால் பாதிப்பு?
 

மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களுக்கு எதனால் பாதிப்பு?

முந்தைய 1992-1996 ஆண்டு சுழற்சி என்பது டாட் காம குமிழியால் ஏற்பட்டது மற்றும் 2004-2008 ம் ஆண்டு ஏற்பட்ட கீழ் நோக்கிய சுழற்சியானது உலகப் பொருளாதாரத்தினால் ஏற்பட்ட மந்த நிலையினால் தூண்டப்பட்டது. உயர் அதிர்வெண் தரவுகள், பன்னாட்டு முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு நிகர விற்பனையாளர்களாக இருக்கும்பட்சத்தில், அது தற்பொழுது உள்ள உயர்ந்த மதிப்புடைய சந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக மிட் கோப் பங்குகளின் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தி, பரஸ்பர நிதிச் சந்தையின் முதலீட்டைக் கடுமையாக பாதிக்கும் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

எனவே, அத்தகைய நிலைமை ஏற்படும் பட்சத்தில், பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்ய நீங்கள் என்னென்ன உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும்?

 உங்கள் இலக்குகளுக்கு ஏற்ப முதலீடு செய்யுங்கள்

உங்கள் இலக்குகளுக்கு ஏற்ப முதலீடு செய்யுங்கள்

எந்த நிதிச் சந்தையில் முதலீடு செய்யும் முன்னர், உங்களுடைய இலக்கு மற்றும் முதலீட்டுக் காலத்தை வரையறுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய நோக்கம் குறுகிய கால முதலீடு எனில், கடன் சார்ந்த நிதியில் முதலீடு செய்யுங்கள். உங்களுக்கு ஒரு பெரிய தொகை தேவைப்பட்டால், குறிப்பாக ஓய்வூதியத்திற்காக அல்லது வீட்டை வாங்குவதற்கு எனில், ​​பங்கு சார்ந்த நிதிகளில் பெரிய பகுதியை முதலீடு செய்யுங்கள். அதிலும் குறிப்பாக நீண்ட காலத்திற்கு பல்வகைப்பட்ட நிதிகளில் முதலீடு செய்ய மறவாதீர்கள்.

 திட்டங்களின் வரலாற்றைப் பாருங்கள்

திட்டங்களின் வரலாற்றைப் பாருங்கள்

முதலீட்டாளர்கள் குறைந்த விலை நிகர மதிப்புடைய சொத்து மதிப்புகளால் ஈர்க்கப்படக்கூடாது. ஏனெனில் அவை மலிவானவை என்று அர்த்தமில்லை. ஒரு குறிப்பிட்ட பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதற்கு முன் அந்தத் திட்டத்தின் கடந்த கால வருவாய், செலவு விகிதங்கள், நிதிகளின் துறை சார்ந்த வெளிப்பாடு, நிதி மேலாளரின் கடந்த கால செயல்பாடு ஆகியவற்றை ஒப்பிடுங்கள். அதனுடன் அந்த நிதியின் குறுகிய கால லாபத்தைக் கவனிக்காதீர்கள். ஏனெனில் குறுகிய கால வருவாய் உங்களுக்கு ஒரு தவறான மாயப் பிம்பத்தை கொடுக்கலாம்.

அதிகபட்சமாக 4-5 திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இந்தத் திட்டங்களை மிக எளிதாகக் கண்காணிக்க முடியும். பல திட்டங்களுக்கு இடையிலான வருவாயை மிகக் குறைந்த அளவே மாறுபடுவதினால் அந்தத் திட்டங்களின், குறிப்பாகக் கடன், குறியீட்டு மற்றும் செயலற்ற நிதி ஆகியவற்றின் வருமானத்தைக் கண்டிப்பாக ஒப்பிடவும்.

எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யுங்கள்
 

எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யுங்கள்

உயர் சந்தை மதிப்பீடுகளின் பிடியில் சந்தைகள் இருந்தாலும் சந்தை எப்பொழுதும் காலத்திற்கு கட்டுப்பட்டது கிடையாது. பங்குச் சந்தையில் ஏற்படக் கூடிய எந்த ஒரு பெரிய வீழ்ச்சியும் லாபங்களை அகற்றலாம் அல்லது ஆரம்ப முதலீட்டின் மதிப்பைக் குறைக்கக்கூடும் என்பதால், பங்குச் சந்தைக்குள் எப்பொழுது நுழைந்து எப்பொழுது வெளியேறுவது என்பதை எந்தவொரு நிபுணரும் அறிவதில்லை. முறையான முதலீட்டுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பெரிய செல்வத்தை உருவாக்க முடியும். ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வதன் மூலம், சந்தையின் உச்சம் அல்லது தாழ்வு நிலைகளில் நாம் முதலீடு செய்வது உறுதி செய்யப்படுகிறது.

முதலீட்டாளரைப் பொறுத்தவரை, அவருடைய சிறிய வயதில் இருந்தே முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் உங்களுடைய ஆரம்பக் காலத்தில் ஆரம்பித்திருந்தால், உங்களுடைய சொத்தின் மதிப்பு நீண்ட காலத்திற்கு மேலாக வளர்ந்து மிகப் பெரிய தொகையாக இருக்கும். உங்களுடைய முதலீட்டில் குறைந்தது 80 சதவீதம் பங்குச் சந்தை சார்ந்த முதலீடாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய சொத்து மதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.

முதலீடுகளைப் பரவலாக்குங்கள்

முதலீடுகளைப் பரவலாக்குங்கள்

முதலீடுகளைப் பரவலாக்குவது, சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் பொழுது உங்களைப் பாதுகாக்க உதவும். பங்கு, கடன் மற்றும் தங்கம் போன்ற பரந்து பட்ட சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள். மேற்கூறியவற்றில் பரஸ்பர நிதிகள் செலவு குறைந்த முதலீட்டுத் திட்டங்களாக விளங்குகின்றது. ஒருவரின் ஆபத்து மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் முதலீட்டு நிதியை ஒதுக்க வேண்டும். முதலீட்டாளர்கள் தங்களுடைய நேரம் மற்றும் பணத்தை சேமிக்கும் பொருட்டு ஆன்லைன் மூலம் ​​முதலீடு செய்யும் வசதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

முதலீடுகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும்

முதலீடுகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும்

சில்லறை முதலீட்டாளர்கள் வழக்கமான இடைவெளியில் தங்களுடைய முதலீடுகளைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் குறுகிய கால ஏற்ற இறக்கங்களைப் பற்றி கவலைப்படக் கூடாது. பங்கு சார்ந்த பரஸ்பர நிதி மீதான முதலீடு என்பது நீண்ட கால முதலீடாக இருக்க வேண்டும். ஏனெனில் பங்குச் சந்தை குறுகிய காலத்தில் கண்டிப்பாக ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும். இது கண்டிப்பாக முதலீட்டாளர்களின் பொறுமையை சோதிக்கலாம். எனவே, ஒரு நீண்ட கால முதலீட்டாளர் தன்னுடைய வருவாயில் குறுகிய வாழ்வு ஏற்ற இறக்கங்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பரஸ்பர நிதி முதலீடுகள் நிபுணர்களால் மேற்கொள்ளப்படுவதால் சில்லறை முதலீட்டாளர்கள் அவற்றைத் தினசரி கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் ஃபோலியோவை ஒவ்வொரு காலாண்டிற்கும் கண்காணித்து அவற்றின் செயல்திறனை சரிபார்க்கவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to invest in mutual funds profitably?

How to invest in mutual funds profitably?
Story first published: Monday, November 13, 2017, 17:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X