Bigbasket IPO:டாடா குழுமத்தின் பிக்பாஸ்கெட் ஐபிஓ.. எப்போது.. என்ன திட்டம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய காலமாக டாடா குழும நிறுவனங்கள் தொடர்ந்து புதிய பங்குகளை வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

அந்த வகையில் தற்போது டாடா குழுமத்தின் பிக்பாஸ்கெட் 2025-க்குள் தனது பங்கு வெளியீட்டினை செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

டாடா குழுமத்தின் ஆன்லைன் குரோசரி நிறுவனமான பிக்பாஸ்கெட் இன்னும் 3 ஆண்டுகளில் பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் என தெரிகிறது.

அடுத்தடுத்து ஐபிஓ.. டாடா குழுமம் வேற லெவல் திட்டம்..!அடுத்தடுத்து ஐபிஓ.. டாடா குழுமம் வேற லெவல் திட்டம்..!

எப்போது ஐபிஓ

எப்போது ஐபிஓ

இந்த ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் சமீபத்தில் நிதியினை திரட்டிய நிலையில், இதன் சந்தை மதிப்பானது 3.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது குறித்து பிக்பாஸ்கேட்டின் தலைமை நிதி செயல் அதிகாரி விபுல் பரேக், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இந்த இ-காமர்ஸ் அடுத்த 24 - 36 மாதங்களில் பொதுப் பங்கு வெளியீட்டினை செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

தனியாக நிதி திரட்டப்படும்

தனியாக நிதி திரட்டப்படும்

பொதுப் பங்கு வெளியீட்டுக்கு முன்னதாகவும் தனியாக நிதி திரட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 200 மில்லியன் டாலர் மதிப்பிலான பிக்பாஸ்கெட் இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வருகின்றது. அமேசான், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பிளிப்கார்ட், உள்ளிட்ட பலவும் இந்தியாவில் விரிவாக்கம் செய்து வரும் நிலையில், பிக்பாஸ்கெட்டின் இந்த அறிவிப்பும் வந்துள்ளது.

பிபி நவ் சேவை
 

பிபி நவ் சேவை

திரட்டப்படும் நிதியானது சமமாக பிரித்து முதலீடு செய்யப்படும், இது தொடர்ந்து விரிவாக்கம் மற்றும் சந்தைப்படுத்தலுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ்கெட் நிறுவனம் மிக வேகமாக டெலிவரி செய்யும், BB நவ் சேவையை வழங்க திட்டமிட்டு வருகின்றது. இதன் மூலம் இந்த நிறுவனம் 30 நிமிடங்களில் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது. மார்ச் 2023க்குள் 200 - 300 கடைகளில் அவுட்லெட்களை திட்டமிட்டுள்ளது.

விரிவாக்கம் செய்ய திட்டம்

விரிவாக்கம் செய்ய திட்டம்


தற்போதைய நிலவரப்படி பிக்பாஸ்கெட் 55 நகரங்களில் செயல்பட்டு வருகின்றது. இது மேற்கொண்டு 75 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வருகின்றது. நிறுவனம் சுமார் 450 டவுன்களில் உள்ளது. இது அடுத்த ஆண்டில் 80 - 100 வரை அதிகரிக்கக் கூடும் என்றும் பரேக் மேலும் கூறினார்.

டாடா பிளே

டாடா பிளே

முன்னதாக கடந்த வாரத்தில் டாடா ப்ளே நிறுவனத்தின் ஐபிஓ குறித்த தகவல்கள் வெளியானது. விரைவில் இது குறித்தான ஆவணத்தை டாடா குழுமம் செபியிடம் சமர்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா டெக்னாலஜிஸ் நிறுவனமும் அதன் பங்கினை வெளியிடலாம் என நீண்டகாலமாக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bigbasket IPO: Tata group owned bigbasket IPO plans to IPO by 2025

Tata Group's BigBasket may do its public share issue by 2025, reports have surfaced.
Story first published: Wednesday, December 21, 2022, 20:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X