பங்கு சந்தையில் முதலீடு செய்வதை விட, எப்படி சரியான பங்கினை தேர்வு செய்வது என்பது தான் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்று. ஏனெனில் ஒரு பங்கினை சரியாக தேர்வு செய்யாவிடில் அதுவே உங்கள் இழப்புக்கு காரணமாக அமையலாம்.
ஆக பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் உங்களுக்கு சரியான அனுபவம் இருப்பின் பங்குகளை நீங்களே தேர்வு செய்யலாம்.
அப்படி இல்லாதபட்சத்தில் நிபுணர்களின் ஆலோசனையுடன், நீங்களூம் பரிசீலித்து வாங்குவது நல்லது?

மெகா டிவிடெண்ட்
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் பங்கு மாருதி சுசுகி இந்தியா தான். இப்பங்கானது 1200 டிவிடெண்ட் கொடுக்கவும் அறிவிப்பினை கொடுத்துள்ளது. ரூபாயில் ஒரு பங்குக்கு 60 ரூபாய் டிவிடெண்டாக அறிவித்துள்ளது. இதன் முகமதிப்பு ஒரு பங்குக்கு 5 ரூபாயாகவும் உள்ளது. இது முடிந்த மார்ச் 2022ம் நிதியாண்டிற்காக டிவிடெண்டினை அறிவித்துள்ளது.

இலக்கு விலை
மாருதி சுசுகியின் இந்த டிவிடெண்டானது செப்டம்பர் 8, 2022 அன்று கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்தான இறுதி முடிவானது வரவிருக்கும் வருடாந்திர கூட்டத்தில் இறுதி செய்யப்படவுள்ளது. இந்த நிறுவனத்தின் காலாண்டு அறிவிப்பினையும் தொடர்ந்து, ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் இப்பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையானது ஒரு பங்குக்கு 9800 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளது.

சாதகமான காரணிகள்
மாருதி சுசுகி இந்தியாவின் மார்ஜின் எதிர்பார்ப்பினை விட முன்னோக்கியே உள்ளது, இது குறைந்த தள்ளுபடிகள் , விலை அதிகரிப்பு, அன்னிய செலவாணி உள்ளிட்ட பலவற்றால் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது சராசரியான 12% வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.

லாப நிலவரம்
மார்ச் 2022வுடன் முடிவடைந்த 4வது காலாண்டில் வருவாய் 26,740 கோடி ரூபாயாகவும் (எதிர்பார்ப்பு - ரூ.26840 கோடி) , இதே எபிடா விகிதம் 2427 கோடி ரூபாயாகவும் உள்ளது(எதிர்பார்ப்பு - ரூ.2198 கோடி) . எப்படியிருப்பினும் கடந்த ஆண்டினை காட்டிலும் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே எபிடா மார்ஜி9.1% ஆக விடிவடைந்துள்ளது.

தேவை அதிகம்
வாகனங்களின் இருப்பு குறைவாக உள்ள அதே நேரத்தில் தேவையானது அதிகமாக உள்ளது. இதற்கிடையில் இனி வரும் காலாண்டுகளிலும் மாருதி சுசுகி வலுவான வளர்ச்சியினை காணலாம். எனினும் சிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சனைகளையும் எதிர்கொள்ளலாம். இது உற்பத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தினால், தேவையானது வலுவாக மீண்டு வந்து கொண்டுள்ளது.

கொரோனாவுக்கு பின்
குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு மக்களின் வாழ்க்கை முறையையே மாறியுள்ளது. இதுவும் வாகனங்களின் தேவையினை ஊக்குவிக்கலாம். மேலும் மூலதன பொருட்களின் விலையானது அதிகரித்து வரும் நிலையில், இது இன்னும் விலையேற்றத்திற்கு வழிவகுக்கலாம். மொத்தத்தில் அதன் மார்ஜின் விகிதமானது இன்னும் அதிகரிக்கலாம். இது பங்கு விலையினையும் தூண்டலாம்.

இன்று என்ன நிலவரம்?
இன்று மாருதி சுசுகி இந்தியா விலையானது, என்.எஸ்.இ-யில் சற்று அதிகரித்து, 7664.10 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை இதுவரையில் 7747 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 7640 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 9050 ரூபாயாகும். இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 6400 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது சற்று அதிகரித்து, 7685.45 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை இதுவரையில் 7744.95 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 7641.55 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 9022 ரூபாயாகும். இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 6400 ரூபாயாகவும் உள்ளது.