கவனிக்க வேண்டிய முக்கிய பங்குகள்.. முக்கிய முதலீட்டாளர்களின் அதிரடி மாற்றங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில வாரங்களாகவே சந்தையானது தொடர்ந்து பெரியளவிலான ஏற்றத்தினை கண்டு வருகின்றது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் இனியும் சந்தையானது ஏற்றம் காணுமா? என்ற கேள்வி இருந்து வருகின்றது.

 

இதற்கு மத்தியில் பங்கு சந்தையில் முதலீடு செய்யும் மிகப்பெரிய முதலீட்டாளர்களான, ராகேஷ் ஜூன் ஜூன்வாலா, விஜய் கேடியா, அசிஷ் கச்சோலியா, அனில் குமார் கோயல், ராதாகிஷன் தமனி உள்ளிட்ட பலரும் தங்களது முதலீடுகளை சில பங்குகளில் அதிகரித்து வருகின்றனர். சில பங்குகளில் முதலீடுகளை குறைத்து வருகின்றனர்.

முதலீடு அதிகரிப்பு

முதலீடு அதிகரிப்பு

பங்கு சந்தையில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டினை செய்த மிகப்பெரிய தனி நபர் முதலீட்டாளர் ராதாகிஷன் தமனி ஆவார். செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கினை 32.30% ஆக அதிகரித்துள்ளார். இது கடந்த ஜூன் காலாண்டில் 30.20% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலீடு குறைப்பு

முதலீடு குறைப்பு

அதோடு மங்களம் ஆர்கானிக்ஸ்-ல் பங்குகளை 2.2%ல் இருந்து 4.3% ஆக உயர்த்தியுள்ளார். இதே ப்ளூ டார்ட் எக்ஸ்பிரஸில் தன்னிடம் இருந்த பங்குகளை 1.70%ல் இருந்து 1.50% ஆக குறைத்துள்ளார். இதே மெட்ரோபொலிஸ் நிறுவனத்தில் இருந்த, 1.6%ல் இருந்து, 1.4% ஆக தமனி குறைத்துள்ளார்.

ராகேஷ் ஜூன் ஜூன்வாலா நிலவரம்?
 

ராகேஷ் ஜூன் ஜூன்வாலா நிலவரம்?

ராகேஷ் ஜூன் ஜூன்வாலா செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்தில், நேஷனல் அலுமினியம் மற்றும் கனரா வங்கியில் 1% பங்குகளை வைத்திருந்தார். முந்தைய காலாண்டில் அவர் முக்கிய பங்குதாரராக இந்த நிறுவனங்களில் ராகேஷ் ஜூன் ஜூன்வாலா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா மோட்டார்ஸ் & ஃபெடரல் வங்கி

டாடா மோட்டார்ஸ் & ஃபெடரல் வங்கி

சுமார் 24,000 கோடி ரூபாய் முதலீட்டில் நாட்டின் இரண்டாவது பெரிய முதலீட்டாளராக இருந்து வருகின்றார். டாடா மோட்டார்ஸ் டிவிஆரில் கடந்த ஜூன் காலாண்டில் 1.97% ஆக இருந்த பங்குகளின் விகிதமானது, செப்டம்பர் காலாண்டில் 3.93% ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஃபெடரல் ரிசர்வ் வங்கியிலும் முதலீட்டினை அதிகரித்துள்ளார். இதிலும் 2.8% இருந்து, 3.7% ஆக அதிகரித்துள்ளது.

பல பங்குகளிலும் முதலீடு குறைப்பு

பல பங்குகளிலும் முதலீடு குறைப்பு

எம்சிஎக்ஸ், தி மந்தன ரீடெயில் வென்சர்ஸ், ஜீபிலண்ட் இங்க்ரேவியா, ரலிஸ் இந்தியா, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், லூபின் உள்ளிட்ட பல பங்குகளிலும் தனது முதலீட்டினை குறைத்துள்ளார் ஜூன் ஜூன்வாலா. சமீபத்தில் ஆங்கில மீடியா நடத்திய மா நாட்டில் கலந்து கொண்ட ஜூன் ஜூன்வாலா, சந்தை தொடர்ந்து வரும் போக்கானது விரைவில் முடிவடையும் என்ற யூகத்தினையும் மறுத்தது குறிப்பிடத்தக்க்து.

பெரிய மாற்றம் இருக்காது?

பெரிய மாற்றம் இருக்காது?

மேலும் சந்தையில் பெரியளவில் மாற்றம் இருக்காது. சில பங்குகள் குறையலாம். எனினும் மற்றவை அதிகரிக்கலாம். ஒட்டுமொத்த பங்குசந்தையில் எந்த திருத்தமும் இல்லை என ஜூன்ஜூன்வாலா கூறியிருந்தார்.

உண்மையில் சந்தையானது சமீபத்திய காலத்தில் சற்று குறைந்தாலும், மீண்டும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது.

விஜய் கேடியா பங்கு முதலீடு

விஜய் கேடியா பங்கு முதலீடு

இதே மும்பையை சேர்ந்த பங்கு முதலீட்டாளரான விஜய் கேடியா செப்டம்பர் 30 நிலவரப்படி, செப்டம்பர் 30 நிலவரப்படி, Affordable Robotic and Automation நிறுவனத்தில் 15% பங்குகளை வைத்துள்ளார். இது கடந்த மார்ச் 31 நிலவரப்படி 14.40% ஆக இருந்தது. இதே செவியாட் நிறுவனத்தில்(Cheviot Company) 1.3%ல் இருந்து, 1% ஆக குறைத்துள்ளார். இதே லிகிஸில் (Lykis) 10%ல் இருந்து, 9.3% ஆக குறைத்துள்ளார்.

இதில் கவனமாக இருங்கள்

இதில் கவனமாக இருங்கள்

இவ்வாறு மிகபெரிய முதலீட்டாளர்களின் போக்கினை சிறிய முதலீட்டாளர்கள் கடைபிடிக்க வேண்டுமா? என்ற கேள்வி இந்த சமயத்தில் பலருக்கும் வரலாம். நிபுணர்கள் இதனை கண்டிப்பாக சிறு முதலீட்டாளர்கள் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. சந்தையினை புரிந்து கொள்ள இது மிக அவசியமானதாக இருக்கும். இது உங்களது முதலீடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடாது, எதிர்கால வர்த்தகம் எப்படியிருக்கும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என கூறுகின்றனர்.

ஆஷிஷ் கச்சோலியா நிலவரம்

ஆஷிஷ் கச்சோலியா நிலவரம்

ஆஷிஷ் கச்சோலியா மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பிரிவில் இருந்து முதலீடு செய்பவர்களில் அதிகம். குறிப்பாக அதிகம் அறியப்படாத பங்குகளில் முதலீடு செய்பவர். ஏப்ரல் - செப்டம்பர் காலாண்டில் 10 புதிய பங்குகளை வாங்கியுள்ளார். குவாலிட்டி பார்மாசூட்டிகல்ஸ், சோமனி ஹோம் இன்னோவேஷன், விஆர்எல் லாகிஸ்டிக்ஸ், ஆமி ஆர்கானிக்ஸ், கேட்வே டிஸ்ட்ரிபாக்ஸ், ஃபேஸ் த்ரீ, வீஅனஸ் ரெமிடிஸ், சாஸ்தாசுந்தர், வென்சர்ஸ், டிஏஆர்சி, எக்ஸ்ப்ரோ இந்தியா உள்ளிட்ட பங்குகளில் 1% பங்குகளை வைத்துள்ளார். முந்தைய காலாண்டுகளில் இந்த நிறுவனங்களில் முக்கிய பங்குதாரர்களில் அவர் இல்லை.

கச்சோலியாவின் பங்கு குறைப்பு

கச்சோலியாவின் பங்கு குறைப்பு

அடோர் வெல்டிங்கில் தனது பங்கினை 1.1%ல் இருந்து, 3.2%ல் இருந்து அதிகரித்துள்ளார். பீட்டா மருந்துகள் 4.9%ல் இருந்து 5.6% ஆக அதிகரித்துள்ளது. கார்வேர் ஹைடெக் பிலிம்ஸ் 2.6%ல் இருந்து 3.3% ஆகவும், ஐஓஎல் கெமிக்கல்ஸ் நிருவனத்தில் 1.7%ள் இருந்து 2% ஆகவும் பங்குகளை உயர்த்தியுள்ளார். எனினும் டிஎஃபெம் ஃபுட்ஸ், அப்பலோ, பைப்ஸ், அப்பல்லோ ட்ரைகோட், கேப்ளின் பாயின்ட் லேபரேட்டரிஸ் மற்றும் பிர்லாசாப்ட் உள்ளிட்ட பங்குகளில் 1% கீழாக பங்கினை குறைத்துள்ளார்.

அனில் குமார் கோயல்

அனில் குமார் கோயல்

சாம்டெக்ஸ் பேஷன்ஸ், இண்ட்சில் ஹைட்ரோ பவர் மற்றும் மாங்கனீஸ், நஹர் ஸ்பின்னிங் மில்ஸ், அமர்ஜோதி ஸ்பின்னிங்க், டிசிஎம் நோவெல்லே, சவுத் இந்தியா பேப்பர் மில்ஸ், துவாரிகேஷ் சர்க்கரை இண்டஸ்ட்ரீஸ், தம்பூர் சுகர் மில்ஸ், வர்த்தமான் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றில் பங்குகளை அதிகரித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jhunjhunwala, Damani and other big investors increased stakes

stock market investment updates.. Jhunjhunwala, Damani and other big investors increased stakes
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X