நாளை தொடங்கவுள்ள எல்ஐசி ஐபிஓ..கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகபெரிய அளவிலான பொதுப் பங்கு வெளியீடாக இருக்கும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ, நாளை தொடங்கவுள்ளது.

இதற்கிடையில் முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட அதன் பங்கு வெளியீட்டின் மதிப்பினை விட குறைக்கப்பட்டிருந்தாலும், தற்போது வரையில் மிகபெரிய பங்கு வெளியீடாகவே உள்ளது. இதற்கிடையில் சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் இது முக்கிய வெளியீடாக பார்க்கப்படுகிறது.

இதனால் மிகப்பெரிய அளவில் விண்ணப்பங்கள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது தொடக்கம்

எப்போது தொடக்கம்

குறிப்பாக பாலிசிதாரர்கள், ஊழியர்கள், சில்லறை முதலீட்டாளர்கள் மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மே 4 அன்று தொடங்கவுள்ள எல்ஐசி ஐபிஓ-ஆனது, மே 9 அன்று முடிவடையவுள்ளது. இதன் ஐபிஓ மதிப்பு 21,000 கோடி ரூபாயாகும். இது முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட அதன் பங்கு வெளியீட்டின் மதிப்பினை விட குறைக்கப்பட்டிருந்தாலும், தற்போது வரையில் நாட்டில் மிகப்பெரிய பங்கு வெளியீடாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியீட்டு விலை

வெளியீட்டு விலை

இந்த பங்கு வெளியீட்டில் விலை பங்குக்கு 902 - 949 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பாலிசி ஹோல்டர்களுக்கு ஒரு பங்குக்கு 60 ரூபாய் தள்ளுபடி கிடைக்கலாம் என்ற நிலையில், பங்கு விலை நிர்ணயத்தில் அதிகபட்ச விலையில் இருந்து ஒப்பிட்டு பார்க்கும்போது பாலிசி ஹோல்டர்களுக்கு ஒரு பங்குக்கு 889 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். பாலிசி ஹோல்டர்கள் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் முதலீட்டினை செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிசிஹோல்டர்கள் பான் இணைப்பு
 

பாலிசிஹோல்டர்கள் பான் இணைப்பு

எல்ஐசி பாலிசி ஹோல்டர்கள் தங்களது பாலிசியுடன் கட்டாயம், பான் நம்பரை பிப்ரவரி 28, 2022க்குள் இணைத்திருக்க வேண்டும். அப்படி பான் நம்பருடன் இணைக்காத பாலிசி ஹோல்டர்களுக்கு, 60 ரூபாய் தள்ளுபடி கிடைக்காது. எனினும் சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் 45 ரூபாய் சலுகையினை பெற்றுக் கொள்ளலாம். ஒரு லாட்டுக்கு 15 பங்குகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் சலுகை

யாருக்கெல்லாம் சலுகை

எல்ஐசி பாலிசிகள் முதிர்வு, சரண்டர் செய்தல் உள்ளிட்ட சில காரணிகளுக்கு மத்தியில், பாலிசியில் இருந்து வெளியேறாவிட்டாலும், அவர்களும் ஒதுக்கீட்டில் தகுதி உடையவர்கள் தான் என பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் எல்ஐசி தெரிவித்துள்ளது. ஆக ஒரு உங்களது பாலிசி காலாவதி ஆகியிருந்தாலும் ஐபிஓ -வுக்கு விண்ணப்பிக்கலாம்.

எந்த பாலிசிகள் எல்லாம் பொருந்தும்

எந்த பாலிசிகள் எல்லாம் பொருந்தும்

பாலிசிஹோல்டர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தாலும், என்ஆர்ஐ(NRI)-களுக்கு இந்த சலுகை கிடையாது. இந்தியாவில் இருக்கும் பாலிசி ஹோல்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழும பாலிசிகளை தவிர மற்ற அனைத்து பாலிசிகளும், இந்த ஐபிஓ சலுகையினை பெற தகுதியானவை தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்யலாமா?

ரூ.2 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்யலாமா?

பாலிசிதாரர்கள் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில்லறை ,முதலீட்டாளர்கள் பிரிவில் பாலிசிதாரர்கள் அதிகம் வேண்டுமெனில் முதலீடு செய்து கொள்ளலாம். அங்கும் 45 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். ஆக இதன் மூலம் 4 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC IPO: india's largest IPO opens tomorrow : here are key things you should know

LIC IPO: india's largest IPO opens tomorrow : here are key things you should know/நாளை தொடங்கவுள்ள எல்ஐசி ஐபிஓ..கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X