நொடியில் 5 லட்சம் கோடி நட்டம்.. பங்குச்சந்தையில் ஏன் இந்த கொலைவெறி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிவிடெண்ட் மீதான புதிய வரி விதிப்பிற்குப் பிறகு சரிந்து வந்த சந்தை செவ்வாய்க்கிழமை காலை நிலையாக இருக்கும் என்று எண்ணிய போது 5.4 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டாளர்களின் செல்வத்தினை நொடியில் வாரிக்கொண்டு போனது என்று கூறலாம்.

இன்று காலை அதிகபட்சமாக 1,274 புள்ளிகள் என 33,482 வரை சர்ந்து முன்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 12:45 மணியளவில் மீண்டு 882.55 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

ஏன் இந்த அளவிற்குப் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்று வருகின்றனர் என்று விளக்கமாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

அமெரிக்கப் பங்கு சந்தையில் ஏன் இந்த விற்பனை முகம்?
 

அமெரிக்கப் பங்கு சந்தையில் ஏன் இந்த விற்பனை முகம்?

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துப் பத்திர முதலீடுகள் மூலமாக வருகின்ற வருவாய் அதிகரிக்கும் என்ற காரணத்தினால் அரை மணி நேரத்தில் பங்கு சந்தை மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. அமெரிக்கப் பங்கு சந்தையில் இந்தத் தாக்கமானது நேற்று மாலை 3 மணி முதலே தெரியவந்துள்ளது.

வேலைவாய்ப்பு உருவாக்கம்

வேலைவாய்ப்பு உருவாக்கம்

விவசாயம் இல்லாத வேலை வாய்ப்புகள் ஜனவரி மாதம் 4.1 சதவீதம் சரிந்து 2,00,000 ஆக உள்ளது. அமெரிக்க அரசு எதிர்பார்த்ததினை விடக் கூஉதலாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

பத்திர முதலீடுகள் வருவாய்

பத்திர முதலீடுகள் வருவாய்

சர்வதேச அளவில் பத்திர முதலீடு திட்டங்கள் அதிக லாபத்தினை அளித்துள்ளன. சவரன் தங்கப்பத்திர திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு ரிஸ்க் இல்லாத அதிக லாபம் கிடைக்கும். இந்தியாவில் 10 ஆண்டுப் பத்திர திட்டங்களில் சென்ற ஆண்டு ஜூலை மாதம் 6.3 சதவீதமாக இருந்து லாபமானது நடப்பு ஆண்டில் 7.6 சதவீதமாகத் தற்போது அதிகரித்துள்ளது.

ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம்
 

ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம்

இரண்டு நாட்களில் ஆர்பிஐ வங்கி நாணய கொள்கையினை அறிவிக்க உள்ள நிலையில் பணவீக்கமும் 17 மாத உயர்வினை சந்தித்துள்ளது. எனவே வட்டி விகிதம் குறைக்கப்படுமா என்ற ஆவலும் எழுந்துள்ளது.

 நீண்ட கால மூலதன ஆதாயம்

நீண்ட கால மூலதன ஆதாயம்

நீண்ட கால மூலதன ஆதாயம் மீது வரி விதிக்கப்பட்டுள்ளதால் பட்ஜெட்டிற்குப் பிறகு இந்திய பங்கு சந்தை 2000 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. இதில் இருந்து இந்திய பங்கு சந்தை மீண்டு எழ இன்னும் நீண்ட காலம் எடுக்கும்.

பங்குச் சந்தை நிலவரம்

பங்குச் சந்தை நிலவரம்

பிற்பகல் 1:00 மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 865.31 புள்ளிகள் என 2.49 சரிந்து 33,891 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 261.25 புள்ளிகள் என 2.43 சதவீதம் சரிந்து 10,407.45 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

காலைச் சந்தை நிலவரத்துடன் ஒப்பிடும் போது ஓர் அளவிற்குப் பங்கு சந்தை மீண்டு உள்ள நிலையில் நாளையும் இதே நிலை தொடருமா என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs 5 LAKH CR GONE IN SECONDS: What’s driving this mad selloff in equities

Rs 5 LAKH CR GONE IN SECONDS: What’s driving this mad selloff in equities
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X