36 % சரிவில் ரஷ்யா & பிரேசில்! அதிகம் அடி வாங்காத இந்தியா! சொல்வது SEBI டேட்டா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே கொரோனா வைரஸ் சீனாவில் பெரிய சிக்கலை உண்டாக்கத் தொடங்கியது. இப்போது மெல்ல எல்லா நாடுகளையும் பதம் பார்க்கத் தொடங்கி இருக்கிறது.

கொரோனாவால் சுமாராக 1.34 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 4,950 பேருக்கு மேல் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

இந்த கொரோனா பயம் மெல்ல பொருளாதார மந்த நிலைக்கு இட்டுச் செல்லுமோ..? என்கிற பயத்தில் பங்குச் சந்தைகளையும் பிடித்து உலுக்கத் தொடங்கி இருக்கிறது.

விளைவுகள்

விளைவுகள்

கொரோனா பயம் + சவுதி அரேபியா - ரஷ்யா பிரச்சனையால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக சரிந்தது. தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. உலகில் பல நாட்டு பங்குச் சந்தைகள் பயங்கரமாகச் சரியத் தொடங்கின. இருப்பினும் இந்திய சந்தைகள் அதிகம் சரியவில்லை எனச் சொல்கிறது செபி அமைப்பு.

செபி அமைப்பு

செபி அமைப்பு

இந்தியாவில் பங்குச் சந்தை உட்பட, பல்வேறு நிதி சார்ந்த விஷயங்கள் மற்றும் முதலீடுகளை நெறிமுறைப்படுத்தும் ஒரு அமைப்பு தான் இந்த செபி அமைப்பு. இந்த செபி அமைப்பு வெளியிட்டதாகச் சொல்லி, மனி கண்ட்ரோல் என்கிற நிறுவனத்தின் அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு அட்டவணையை வெளியிட்டு இருக்கிறார்கள்.

எந்த நாட்டு சந்தை எவ்வளவு சரிவு

எந்த நாட்டு சந்தை எவ்வளவு சரிவு

அந்த அட்டவணையில், கடந்த ஜனவரி 31, 2020 உடன் மார்ச் 12, 2020-ஐ ஒப்பிட்டால், எந்த நாட்டின் பங்குச் சந்தை, எவ்வளவு சரிந்து இருக்கிறது என்கிற விவரங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் 36.3 % சரிந்து ரஷ்யாவின் ஆர் டி எஸ் பங்குச் சந்தை முதலிடத்தில் இருக்கிறது. 31-01-2020-ல் 1,517 புள்ளியாக இருந்த சந்தை 12-03-2020 அன்று 966 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது.

2-வது & 3-வது இடங்கள்

2-வது & 3-வது இடங்கள்

இரண்டாமிடத்தில் பிரேசிலின் BOVESPA பங்குச் சந்தை 36.2 % சரிந்து இருக்கிறது. 31-01-2020-ல் 1,13,760 புள்ளியாக இருந்த சந்தை 12-03-2020 அன்று 72,583 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது.
அடுத்த மூன்றாவது இடத்தில் பிரான்சின் சி ஏ சி சந்தை 30.3 % சரிந்து இடம் பிடித்து இருக்கிறது. 31-01-2020-ல் 5,806 புள்ளியாக இருந்த சந்தை 12-03-2020 அன்று 4,044 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது.

அடுத்தடுத்த இடங்கள்

அடுத்தடுத்த இடங்கள்

4-வது இடத்தில் ஜெர்மனி 29.43 % சரிந்து இருக்கிறது.
5-வது இடத்தில் அர்ஜெண்டினா 29.31 % சரிந்து இருக்கிறது.
6-வது இடத்தில் இங்கிலாந்து 28.12 % சரிந்து இருக்கிறது.
7-வது இடத்தில் அமெரிக்கா (டவ் ஜோன்ஸ்) 24.97 % சரிந்து இருக்கிறது.
8-வது இடத்தில் அமெரிக்கா (நாஸ்டாக்) 21.30 % சரிந்து இருக்கிறது.
9-வது இடத்தில் ஜப்பானின் நிக்கி 20.02 % சரிந்து இருக்கிறது.

இந்தியா

இந்தியா

இந்தியாவின் நிஃப்டி 50 இண்டெக்ஸ் 19.83 % சரிந்து 10-வது இடம் பிடித்து இருக்கிறது. 31-01-2020-ல் 11,962 புள்ளியாக இருந்த சந்தை 12-03-2020 அன்று 9,590 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. இந்தியாவின் சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் 19.51 % சரிந்து 11-வது இடம் பிடித்து இருக்கிறது. 31-01-2020-ல் 40,723 புள்ளியாக இருந்த சந்தை 12-03-2020 அன்று 32,778 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது.

என்ன செய்ய

என்ன செய்ய

உலக சந்தைகளுடன் ஒப்பிடும் போது இந்திய சந்தைகள் குறைவாகத் தான் சரிந்து இருக்கிறது என நிம்மதி அடைவதா அல்லது சுமார் 19 சதவிகிதம் இந்திய சந்தைகள் சரிந்துவிட்டதே என வருத்தப்படுவதா எனத் தெரியவில்லை. இதில் இந்திய அரசு மட்டும் தனித்து எதையும் செய்ய முடியாத இக்கட்டான சூழலில் தான் தவித்துக் கொண்டு இருக்கிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

russia and brazil fall around 26 percent in last 6 weeks

The russia's RTS and Brazil's BOVESPA market fall around 36 percent in the last 6 weeks period.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X