சிறு முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் வாய்ப்புகள்.. லாபத்தினை அள்ள சரியான நேரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொது பங்கு வெளியீடு என்பது சிறு முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய நல்ல வாய்ப்பு எனலாம். இதற்கிடையில் தற்போதைய காலகட்டத்தில் பொது பங்கு வெளியீட்டின் மூலமாக முதலீடுகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அதோடு தற்போது பெண்களும் கூட தற்போது பொது பங்கு வெளியீட்டில், மிகுந்த ஆர்வம் காட்டி வருவது இன்னும் ஹைலைட்டாக பார்க்கப்படுகின்றது.

டெஸ்லா-வுக்கு அடித்த ஜாக்பாட்.. இறங்கி வரும் மத்திய அரசு..! டெஸ்லா-வுக்கு அடித்த ஜாக்பாட்.. இறங்கி வரும் மத்திய அரசு..!

அதேசமயம் நாளுக்கு நாள் பங்கு சந்தையில் நுழையும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு

சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு

ஒரு நிறுவனம் பங்கு சந்தையில் நுழையும்போது குறைந்த விலையில் இருக்கும்போது வாங்கி வைத்தால், அது எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கை. அதிலும் சில நிறுவனங்களின் பொது பங்கு விலையானது ஆரம்பத்தில் வெளியிடும்போது விலை ஒன்றாக இருந்தாலும், பங்கு சந்தையில் பட்டியலிடப்படும்போதே இருமடங்காக அதிகரிக்கிறது. குறுகிய காலத்திலேயே நல்ல லாபம் கொடுக்கிறது.

கூடுதல் லாபம்

கூடுதல் லாபம்

இதனால் முதலீட்டாளர்களுக்கு இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கிறது. இதன் மூலம் லாபம் இன்னும் கூடுதலாக கிடைக்கும். இதற்கிடையில் செப்டம்பர் மாதத்தில் பல பங்குகள் வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டினை விட, நடப்பு ஆண்டில் பல நிறுவனங்கள் பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளன.

விஜயா டயக்னாஸ்டிக்ஸ் ஐபிஓ

விஜயா டயக்னாஸ்டிக்ஸ் ஐபிஓ

விஜயா டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனம் நாளை (செப்டம்பர் 1, 2021) தனது பங்கு விற்பனையை தொடங்கவுள்ளது.

கடைசி தேதி - செப்டம்பர் 3, 2021

விலை விகிதம் - ரூ.522 - 531
பங்கு வெளியீட்டின் மதிப்பு - ரூ.1862 - 1894 கோடி
முகமதிப்பு - ரூ.1
லாட் சைஸ் - 28 பங்குகள்
பங்கு அலாட் மெண்ட் - செப்டம்பர் 8, 2021
பங்கு கிடைக்காதவர்களுக்கு ரீபண்ட் - செப்டம்பர் 9, 2021
டீமெட் கணக்குக்கு பங்கு மாற்றப்படுதல் - செப்டம்பர் 13, 2021
பங்கு பட்டியலிடல் - செப்டம்பர் 14, 2021
போட்டி நிறுவனங்கள் - டாக்டர் லால் பாத்லாப்ஸ் லிமிடெட்(Dr. Lal PathLabs Ltd ), ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் லிமிடெட்(Aster DM Healthcare Ltd), நாரயண ஹிருதயாலா லிமிடெட் (Narayana Hrudaayalaya Ltd), என்ஜி இண்டஸ்ட்ரீஸ் (NG Industries Ltd), கிருஷ்ணா டயக்னாஸ்டிக்ஸ் (Krsnaa Diagnostics Ltd)

அமி ஆர்கானிஸ் ஐபிஓ

அமி ஆர்கானிஸ் ஐபிஓ

பங்கு விற்பனை தொடக்கம் - செப்டம்பர் 1, 2021

கடைசி தேதி - செப்டம்பர் 3, 2021
விலை விகிதம் - ரூ.603 - 610
பங்கு வெளியீட்டின் மதிப்பு - ரூ.565 - 570 கோடி
முகமதிப்பு - ரூ.10
லாட் சைஸ் - 24 பங்குகள்
பங்கு அலாட் மெண்ட் - செப்டம்பர் 8, 2021
பங்கு கிடைக்காதவர்களுக்கு ரீபண்ட் - செப்டம்பர் 9, 2021
டீமெட் கணக்குக்கு பங்கு மாற்றப்படுதல் - செப்டம்பர் 13, 2021
பங்கு பட்டியலிடல் - செப்டம்பர் 14, 2021
போட்டி நிறுவனங்கள் - ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்(Aarti industries Ltd), ஹிக்கல் லிமிடெட் (Hikal Ltd), வேலியன்ட் ஆர்கானிக்ஸ் லிமிடெட் (Valiant Organics Ltd), வினாதி ஆர்கானிக்ஸ் லிமிடெட் (Vinati organics Ltd), நியூலண்ட் லேபாரட்டீஸ் லிமிடெட்(Neuland Laboratoris Ltd), அதுல் லிமிடெட்(Atul Ltd)

அரோஹன் ஃபைனான்ஷியல் ஐபிஓ

அரோஹன் ஃபைனான்ஷியல் ஐபிஓ

வங்கி சாரா நிதி நிறுவனமான அரோஹன் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு, அண்மையில் தான் செபி அனுமதி கொடுத்தது.

இந்த பங்கு வெளீயீட்டின் மூலம் இந்த நிறுவனம் 1750 - 1800 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது.
இந்த நிறுவனம் பங்கு வெளியீட்டின் போது 850 கோடி ரூபாய்க்கு புதிய பங்கினையும், பங்குதாரர்களின் 2.71 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

ருச்சி சோயா நிறுவனம்

ருச்சி சோயா நிறுவனம்

ருச்சி சோயா நிறுவனமும் 4,300 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, இரண்டாவது முறையாக தொடர் பங்கு (FPO) வெளியிட திட்டமிட்டுள்ளது. எனினும் இது குறித்து விரிவான அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.

சமீபத்தில் தான் பதஞ்சலி ஆயுர்வேதாவுக்கு சொந்தமான சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான ருச்சி சோயா, இந்த தொடர் பங்கு வெளியீட்டுக்காக அனுமதி கோரி செபிக்கு விண்ணப்பித்திருந்தது. இதற்காக அனுமதியும் தற்போது அனுமதி கிடைத்துள்ள நிலையில் விரைவில் வெளியீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடர் பங்கு வெளியீட்டில், நிறுவனத்தின் புரமோட்டர்கள் குறைந்தபட்சம் 9% அளவுக்கு பங்குகளை விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இவர்கள் வசம் 98.90% பங்குகள் உள்ளன. செபி விதிப்படி, மூன்று ஆண்டுகளுக்குள்ளாக, புரமோட்டர்கள் தங்கள் பங்கின் அளவை 75% குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்

பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்

வங்கி சாரா நிதி நிறுவனமான பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், 1,330 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீட்டினை திட்டமிட்டுள்ளது.

இந்த பங்கு வெளியீடும் செப்டம்பரில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் தான் செபி இதற்காக அனுமதி கொடுத்த நிலையில், விரைவில் ஐபிஓ தேதி, விலை விகிதம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பென்னா சிமெண்ட் ஐபிஓ

பென்னா சிமெண்ட் ஐபிஓ

பென்னா சிமெண்ட் நிறுவனம் 1550 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இதில் 1300 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்கு வெளியீட்டினையும், 250 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை புரமோட்டர்கள் விற்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் கடந்த 1991ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் பங்கு விற்பனையில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு 35%மும், தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு 50%மும், அன்னிய நிறுவனங்களுக்கு 15% விற்பனை செய்யபப்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன்செரா இன்ஜினியரிங் ஐபிஓ

சன்செரா இன்ஜினியரிங் ஐபிஓ

வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியாளரான சன்செரா இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனம், 1400 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.

இதன் மூலம் 17,244,328 பங்குகள் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பங்குவெளியீடும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் ஐபிஓ

உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் ஐபிஓ

உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் நிறுவனம் பங்கு வெளியீடு மூலம் 1350 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது.

இதில் புதிய பங்கு வெளியீடு மூலம் 750 கோடி ரூபாயும், பங்கு விற்பனை மூலம் 600 கோடி ரூபாயும் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது.

ஸ்ரீ பஜ்ரங் பவர் ஐபிஓ

ஸ்ரீ பஜ்ரங் பவர் ஐபிஓ

ஸ்ரீ பஜ்ரங் பவர் நிறுவனமும் செப்டம்பர் மாதத்தில் தனது பங்கு வெளியீட்டினை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இந்த நிறுவனம் 700 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது.
எனினும் இந்த நிறுவனம் எப்போது பங்கு வெளியீடு செய்ய போகிறது. தேதி என்ன உள்ளிட்ட விவரங்களை அறிவிக்கவில்லை.

பராஸ் டிபென்ஸ் அன்ட் ஸ்பேஷ் டெக்னாலஜி

பராஸ் டிபென்ஸ் அன்ட் ஸ்பேஷ் டெக்னாலஜி

பராஸ் டிபென்ஸ் அன்ட் ஸ்பேஷ் டெக்னாலஜி நிறுவனம் பங்கு வெளியீடு மூலம் 200 கோடி ரூபாய் நிதியினை திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடும் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் செப்டம்பர் மாதத்தில் சிறு முதலீட்டாளர்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளன எனலாம். ரெடியாகீங்கோங்க...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

vijaya diagnostic, Ami organics and some other companies are plans to launch IPO in September

IPO latest updates.. September month IPO list.. vijaya diagnostic, Ami organics and some other companies are plans to launch IPO in September
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X