MSME.. பல சவால்களுக்கு மத்தியில் அரசின் சலுகை கைகொடுக்குமா.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கொரோனா வைரஸ் பெரும் தொற்று நோயின் காரணமாக பல எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதன் காரணமாக நாட்டின் ஜிடிபியிலும் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக எம்எஸ்எம்இ சற்று ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்தின் கொள்கை தலையீடுகள் சிறிய நம்பிக்கையை அளிதத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் அவர்களால் தேவையை புதுபிக்க முடியாது. இது சிறு வணிகங்களுக்கு முக்கியமானது என்று அறிக்கை ஒன்று கூறியது.

MSME..  பல சவால்களுக்கு மத்தியில் அரசின் சலுகை கைகொடுக்குமா.. !

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா காரணமாக ஏற்கனவே கிட்டதட்ட மூன்று மாதங்கள் லாக்டவுன் செய்யப்பட்டது. இதன் காரணமாக நாட்டில் தேவையானது பெரும் அளவில் வீழ்ச்சி கண்டது. இதனால் சிறு குறு நிறுவனங்களும் பெரும் வீழ்ச்சி கண்டன. எனினும் தற்போது சிறிது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக, இத்துறைக்கு பிணை இல்லா கடனாக, 3 டிரில்லியன் ரூபாய் வரை அரசாங்கம் அறிவித்துள்ளது.

வங்கிகள் தற்போது இந்த பிணை இல்லா கடனை வழங்க ஆரம்பித்துள்ளது. எனினும் தற்போதும் கூட அங்கு பல சவால்கள் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக புதியதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஏனெனில் ஏற்கனவே கடன் வாங்கியிருந்தவர்கள், தங்களது சொத்துக்களை அடகு வைத்து கடன் வாங்கியிருப்பவர்கள் பலர். ஆக அவர்களுக்கு தொடர்ந்து பிரச்சனை அப்படியே தான் நீளும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்ட சாத்தியமான நிதி நிறுவனங்கள் மட்டுமே கடன் வாங்க முடியும். இதே நேரம் எம்எஸ்எம்இக்கள் இரட்டை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். ஒன்று தேவை குறைவு மற்றும் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்.

இதற்கிடையில் ஜூன் 18 நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகள் 40,416 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 21,028.55 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், இந்த கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதமானது சந்தை விகிதங்களுடன் ஒப்பிடும்போது, கிட்டதட்ட சமமாக உள்ளது. ஆக இது பெரும் சலுகையை வழங்காது. மேலும் கடந்த மாதம் ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தினை 40 அடிப்படை புள்ளிகளை குறைத்து, 4 சதவீதமாக குறைத்தது. ஆனால் இந்த விகிதமானது கடன் வாங்குபவர்களுக்கு எந்த நிவாரணத்தினையும் வழங்கவில்லை என்றும் நிபுணர் கூறுகின்றனர்.

இந்த எம்எஸ்எம்இக்களுக்கு வழங்கப்படும் கடன் களுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வட்டி விகிதம் 9.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆண்டுக்கு அதிகபட்சம் 14 சதவீதமாக கடன் வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் அரசுக்கு சொந்தமான வங்கிகள் கடன் வாங்குபவரின் கடன் தகுதியை பொறுத்து சுமார் 8 சதவீதத்தில் கடன் வழங்குகின்றன. ஆக அரசு எம்எஸ்எம்இ-களுக்கு கடன் சலுகையை அளித்தாலும், அதனை அனைத்து எம்எஸ்எம்இ-களும் பெற முடியுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஆனாலும் நிச்சயம் அரசின் இந்த அறிவிப்பு மிக நல்ல விஷயமே..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

MSMEs relief package facing some issues when it’s come to lending

Banks started disbursing funds to MSMEs under the 100 percent emergency credit line guarantee scheme announced by FM nimala sitharaman last month.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X