சீனாவின் சதித்திட்டம்.. பிளிப்கார்ட் முதல் சோமேட்டோ வரை 1400 நிறுவனங்கள் கண்கானிப்பு.. எதற்காக..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிளிப்கார்ட் முதல் சோமேட்டோ, பேடிஎம், பிக்பாஸ்கெட் என 1400 நிறுவனங்களை, சீனா கண்கானித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்தியா சீனா இடையேயான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் வந்துள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை கூறியுள்ளது.

அதோடு பல முக்கிய தலைவர்கள், நிறுவன அதிகாரிகளையும் கண்கானித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாருங்கள் முழு விவரங்களையும் பார்க்கலாம்.

கண்கானிப்பில் 10,000 மேற்பட்டோர் கண்கானிப்பு

கண்கானிப்பில் 10,000 மேற்பட்டோர் கண்கானிப்பு

இந்தியா சீனா எல்லை பதற்றங்களுக்கு மத்தியில், சீனா இந்தியாவுக்கு எதிராக உளவு சதித்திட்டத்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சதித்திட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உட்பட 10,000 க்கும் மேற்பட்ட முக்கியமான தலைவர்கள், நிறுவனங்களையும் சீனா உளவு பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

யார் கண்கானிப்பு?

யார் கண்கானிப்பு?

அதோடு முன்னணி நிறுவனங்களில் CEO, CFOs. CTOs, COOs உள்ளிட்ட தலைவர்களும் இந்த பட்டியலில் அடங்கும். மேலும் 1400 இந்திய நிறுவனங்கள் ஜென்ஹூவா தரவு தளத்தில் (Zhenhua Data Information Technology Co. Limited) உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் நைகா, உபர் இந்தியா, பேயு, பிளிப்கார்ட், ஜொமாடோ, ஸ்விக்கி போன்ற இந்திய நிறுவனங்களின் முக்கிய நிறுவனங்களும், அதன் தலைவர்களும் கண்காணிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

பிரதமர் ஜனாதிபதி உள்பட கண்கானிப்பு
 

பிரதமர் ஜனாதிபதி உள்பட கண்கானிப்பு


சீன கம்யூனிஸ்ட் கட்சிக்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட, 10,000 க்கும் மேற்பட்ட முக்கிய குடிமக்களை கண்காணிக்கும் பணியை சீனாவினை சேர்ந்த Zhenhua Data Information Technology Co. Limited என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்டார்டப் நிறுவனங்கள் கண்கானிப்பு

ஸ்டார்டப் நிறுவனங்கள் கண்கானிப்பு

சீனாவின் இலக்கு, இந்தியாவில் துணிச்சலாக முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள், நிறுவனர்கள் மற்றும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கும் ஸ்டார்டப் நிறுவனங்கள், இ-காமர்ஸ் தளங்களின் தலைமை தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் இந்தியாவை தளமாகக் கொண்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆகியோரும் அடங்குவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அறிக்கை கூறியுள்ளது.

பேமென்ட் ஆஃப்கள்

பேமென்ட் ஆஃப்கள்

பல்வேறு பேமென்ட் ஆப்கள், கல்வி மற்றும் டெலிவரி ஆப்கள், சீனா தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. நகர்ப்புற போக்குவரத்து பிரிவில் தொழில்நுட்ப ஸ்டார்டப் நிறுவனங்கள் உட்பட பல நம்பிக்கைக்குரிய ஸ்டார்டப்கள் மற்றும் இ-காமர்ஸ் தளங்களும் சீனாவின் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்னென்ன பேமென்ட் ஆஃப்கள்

என்னென்ன பேமென்ட் ஆஃப்கள்

பண பரிவர்த்தனைக்கு பயன்படும் பேடிஎம், ரோசார்பே (Razorpay), போன்பே (PhonePe), பைன் லேப்ஸ் (Pine Labs), Aways Payments, மற்றும் IRCTCயுடன் கூட்டு சேர்ந்துள்ள FSS payment gateway உள்ளிட்ட ஆஃப்களும் சீனாவின் கண்கானிப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே டெலிவரி நிறுவனமான பிக்பாஸ்கெட், டெய்லி பஜார், சோமேட்டோ, ஸ்விக்கி, ஃபுட் பாண்டா, Zappfresh, Fresh Meat Market உள்ளிட்ட நிறுவனங்களும் சீனாவில் கண்கானிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

இறைச்சி விநியோக தளங்கள்

இறைச்சி விநியோக தளங்கள்

இதே ஆன்லைனில் இறைச்சி விநியோக தளங்களான பைக் (bike), B2B delivery platform ஆகியவையும் சீனாவின் கண்காணிப்பில் உள்ளன. அதுமட்டும் அல்ல கான்பூரின் ஐஐடி இயக்குநர் பேராசிரியர் அபய் கரண்டிகர், பேராசிரியர் தீபக் பி பாதக் என பலரையும் சீனா இந்த லிஸ்டில் வைக்கவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

1,400 companies including Flipkart, zomato, paytm, bigbasket monitored by china

Flipkart, zomato, paytm, bigbasket, swiggy including 1,400 companies monitored by china
Story first published: Friday, September 18, 2020, 20:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X