இந்தியா வேண்டாம்.. நாட்டை விட்டு வெளியேறிய 1.83 லட்சம் பேர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா வேகமாகவும், அமெரிக்காவுக்கு இணையாக வளர்ச்சி அடைந்து வருவதாகப் பல தரவுகள் கூறினாலும், இந்தியாவைவிட அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், வாழ்க்கை தரம் மேம்படும் என்ற நம்பிக்கையில் இந்தியக் குடியுரிமையை விடுத்து வெளிநாட்டில் குடியுரிமை பெற்று வருகின்றார்கள்.

 

சில வருடங்களுக்கு முன்பு ஆயிரங்களில் இருந்த எண்ணிக்கை தற்போது 2 லட்சங்களைத் தொட்டு உள்ளது. இது இந்தியாவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் மிகையில்லை.

இந்த நிலையில் மத்திய வெளியுறவு துறை வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

இந்திய குடியுரிமை

இந்திய குடியுரிமை

கடந்த சில வருடத்தில் இந்திய குடியுரிமை விடுத்து வெளிநாடுகளில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 2017ல் இந்திய குடியுரிமையை விடுத்த மக்களின் எண்ணிக்கை 1,33,049 ஆக இருந்தது.

5 வருடத்திற்குப் பின்பு 2022 ஆம் ஆண்டில் அக்டோபர் 31 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 1,83,741 பேர் தங்களது குடியுரிமையை விடுத்து உள்ளனர்.

வி.முரளீதரன்

வி.முரளீதரன்

வெள்ளிக்கிழமை லோக் சபாவில் எழுத்துப் பூர்வமாக மத்திய வெளியுறவு துறையின் மாநில அமைச்சரான வி.முரளீதரன் அளித்த பதிலில் 2015ல் 1,31,489 பேர்; 2016ல் 1,41,603 பேர்; 2017ல் 1,33,049 பேர்; 2018 இல் 1,34,561 பேர்; 2019 இல் 1,44,017 பேர்; 2020 இல் 85,256 பேர் மற்றும் 2021 இல் 1,63,370 பேர் இந்திய குடியுரிமை விடுத்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதேபோல் 2022 ஆம் ஆண்டில் அக்டோபர் வரையில் சுமார் 1,83,741 பேர் இந்திய குடியுரிமையை விடுத்து உள்ளனர்.

 வெளிநாட்டினர்
 

வெளிநாட்டினர்

இதேவேளையில் மத்திய அமைச்சகத்தின் தகவல்களின்படி, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தவிர இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் கணிசமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

60 பேர்

60 பேர்

இதன் படி 2015 இல் 93 பேர், 2016 இல் 153 பேர் , 2017 இல் 175 பேர், 2018 இல் 129 பேர், 2019 இல் 113 பேர், 2020 இல் 27 பேர், 2021 இல் 42 பேர் மற்றும் 2022 இல் 60 பேர் வெளிநாட்டு குடியுரிமையை விடுத்து இந்தியாவில் குடியேறியுள்ளனர். ஆனால் 1,83,741 பேர் இந்தியாவை விட்டு வெளியேறிய நிலையில் 60 வெளிநாட்டினர் மட்டுமே இந்தியாவுக்கு வந்துள்ளது.

ரெமிட்டன்ஸ் தொகை

ரெமிட்டன்ஸ் தொகை

உலகம் முழுவதும் இருக்கும் இந்தியர்கள் தாய் நாட்டிற்கு அனுப்பும் தொகையான ரெமிட்டன்ஸ் தொகை கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டில் சுமார் 12 சதவீதம் அதிகரித்து 100 பில்லியன் டாலர் அளவீட்டை எட்ட உள்ளது என உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா முதலிடம்

இந்தியா முதலிடம்

இதன் மூலம் ரெமிட்டன்ஸ் அதிகம் பெரும் நாடுகள் பட்டியலில் மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை விடவும் உச்சத்தை அடைந்து உலகில் அதிகம் ரெமிட்டன்ஸ் பெறும் நாடாக இந்தியா உயர உள்ளது.

EB-5 விசா

EB-5 விசா

அமெரிக்க டெக் நிறுவனத்தில் அதிகப்படியான ஊழியர்கள் செய்யப்படும் நிலையில் வெளிநாட்டு ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் 60 நாள் கெடு பிரச்சனையைச் சமாளிக்கவும் அமெரிக்காவில் தொடர்ந்து இருக்கப் புதிய ஐடியாவை பயன்படுத்தி வருகின்றனர்.

ஹெச்1பி விசா ஊழியர்கள்

ஹெச்1பி விசா ஊழியர்கள்

அமெரிக்காவில் புதிய வேலை அல்லது முயற்சிகளைத் தொடர வேண்டும் என்பதற்காக முதலீட்டு மூலம் கிடைக்கும் EB-5 விசா மூலம் முதலீட்டின் வாயிலாகக் கிடைக்கும் குடியுரிமை பெறும் திட்டத்தை இந்திய ஹெச்1பி விசா ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் வாயிலாகவும் இந்திய குடியுரிமை இழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

1.83 lakh Indians renounced their Indian citizenship in 2022

1.83 lakh Indians renounced their Indian citizenship in 2022
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X