இறுதிக்கட்டத்தில் தடையற்ற வர்த்தகம்..இந்தியாவின் வருகையை எதிர்ப்பார்க்கும் உலக நாடுகள்.. நடக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகிலேயே மாபெரும் தடையற்ற வர்த்தக பகுதியை உருவாக்க, சீனா மற்றும் மற்ற 14 நாடுகள் உலகின் மிகப்பெரிய வர்த்தக முகாமை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளன.

இது கிட்டதட்ட அனைத்து பொருளாதார நடவடிக்கைகளிலும் மூன்றில் ஒரு பகுதியினை உள்ளடக்கியது.

கொரோனாவால் வாடி வதங்கியுள்ள தொழில்களை மீட்டெடுக்க இது உதவும் என்று ஆசியாவில் பலரும் நம்புகிறார்கள். சரி அப்படி என்ன தான் உடன்பாடு இது? எந்தெந்த நாடுகள் இணைந்துள்ளன. இந்தியாவும் இணைந்துள்ளதா? விவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

எட்டு ஆண்டு போராட்டம்

எட்டு ஆண்டு போராட்டம்

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் 10 நாடுகளின் ஆண்டு உச்சி மாநாடு நடந்தது. அந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு அல்லது RCEP ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இது ரத்தம் கண்ணீர் மற்றும் வியர்வை என எட்டு ஆண்டு போராட்ட காலத்திற்கு பின்பு, இறுதியாக நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது என்று மலேசியாவின் வர்த்தக அமைச்சர் முகமது அஸ்மின் அலி கூறியுள்ளார்.

வர்த்தக கட்டணங்கள் குறையும்

வர்த்தக கட்டணங்கள் குறையும்

உலகளவில் நிலவி வரும் கடினமான இந்த நேரத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக, சந்தைகளை திறக்க RCEP நாடுகள் தேர்தெடுத்துள்ளன என்பதை இந்த ஒப்பந்தம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று முகமது கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் ஏற்கனவே உறுப்பு நாடுகளுக்குகிடையேயான குறைவான வர்த்தக கட்டணங்களை இன்னும் குறைவாக குறைக்கும். இது காலப்போக்கில் இன்னும் குறையும்.

பட்டியலில் எந்தெந்த நாடுகள்

பட்டியலில் எந்தெந்த நாடுகள்

மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பதவியேற்ற சிறிது காலத்திலேயே 11 நாடுகளின் டிரான்ஸ் - பசிபிக் வர்த்தக (trans-Pacific trade deal) ஒப்பந்தத்தினை விட இது விரிவானது. இதில் தென்கிழக்கு நாடுகள் சங்கம் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 நாடுகள் இதில் அடங்கும். ஆனால் இந்த லிஸ்டில் அமெரிக்கா இல்லை.

இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு

இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு

அதோடு இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு கதவை திறந்து விடுகிறது. இது கடுமையான உள்நாட்டு எதிர்ப்பால் முன்னர் கைவிடப்பட்டது. ஆனால் மீண்டும் இணைய இந்த கூட்டணில் சேர இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர். ஏனெனில் இந்த ஒப்பந்தம் தடையற்ற வர்த்தகத்திற்கு வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

எதிர்கால வளர்ச்சிகான ஒரு சூத்திரம்

எதிர்கால வளர்ச்சிகான ஒரு சூத்திரம்

இந்த ஒப்பந்தம் டிரம்பின் அமெரிக்கா முதல், தனிப்பட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த கொள்கையை உருவாக்கிய நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இது வந்துள்ளது. இது ஆசியா சுதந்திர வர்த்தகத்தினை நோக்கிய பல நாடுகளின் முயற்சிகளில் உறுதியாக உள்ளது. இது எதிர்கால வளர்ச்சிக்கான ஒரு சூத்திரமாகவும் கருதப்படுகிறது.

இந்தியாவின் ஆதரவு வேண்டும்

இந்தியாவின் ஆதரவு வேண்டும்

இந்த உச்சி மாநாட்டிற்கு முன்னதாகவே, ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா, சுதந்திரமான மற்றும் நியாயமான பொருளாதார மண்டலத்தினை விரிவுபடுத்துவதற்கான தனது அரசாங்கத்தின் ஆதரவை உறுதியாக தெரிவிப்பதாகவும், இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் ஆதரவையும் பெற விரும்புவதாகவும், மற்ற நாடுகளின் ஆதரவையும் பெற விரும்புவதாக கூறியுள்ளார்.

உலக நாடுகளின் சாம்பியனா?

உலக நாடுகளின் சாம்பியனா?

ஆனால் இந்த ஒப்பந்தம் மூலம் மற்ற நாடுகளை விட, சீனா தன்னை ஒரு சாம்பியனாக காட்ட விரும்புகிறது. தற்போது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பிடன் தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும்? வர்த்தக ஒப்பந்தம் என்னவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா மீதான குற்றச்சாட்டுகள்

சீனா மீதான குற்றச்சாட்டுகள்

ஏனெனில் டிரம்ப் கொடுத்த வர்த்தக கட்டணங்கள், உளவு மற்றும் தொழில்நுட்ப திருட்டு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் குறித்து பரவலான விரக்தியை கொடுத்த டிரம்ப் நிர்வாகத்தால், சீனா மீது சுமத்தப்பட்ட பல அமெரிக்கா வர்த்தகத் தடைகளை திரும்ப பெறுவதற்கு பிடன் மேலும் கடுமையான அழுத்தம் கொடுப்பார் என்றும் ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

பிடன் என்ன செய்யப்போகிறார்?

பிடன் என்ன செய்யப்போகிறார்?

ஏனெனில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு குறித்த கவலை காரணமாக பிடன் அமெரிக்கா நலன்களைப் பாதுகாக்க தென்கிழக்கு ஆசியாவுடன் அதிக ஈடுபாட்டை காணக்கூடும் என்றும் Center for Strategic and International Studiesஸின் மைக்கேல் ஜெனாதன் கிரீன் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு இந்த ஒப்பந்தம் வேண்டாம்

இந்தியாவுக்கு இந்த ஒப்பந்தம் வேண்டாம்

இந்த ஆர்சிஇபி ஒப்பந்தத்துக்கு பிறகு இந்திய சந்தையில் சீன வேளாண் மற்றும் தொழில்துறை பொருள்கள் குவியக்கூடும் என்ற அச்சம் நிலவியது. இதனால் இந்திய உள்நாட்டு சந்தையை பாதுகாப்பது உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு, தீர்வு காணவும் இந்தியா வலியுறுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அனைத்து நாடுகளும் நியாயமான பலனை பெற வேண்டும், அனைத்து நாடுகளின் நலனும் உறுதி செய்யப்பட வேண்டும் முன்னர் கூறியிருந்தது நினைவு கூறத் தக்கது.

இந்திய வணிகர்கள் அச்சம்

இந்திய வணிகர்கள் அச்சம்

ஏனெனில் இந்திய பால் விவசாயிகள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா பால், சீஸ் உற்பத்தியாளர்களின் போட்டிகளை பற்றி கவலைபடுகின்றனர், மற்ற பிராந்தியங்களில் இருந்து வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதை நினைத்து அஞ்சுகின்றனர். ஒட்டுமொத்தத்தில் சீனாவில் இருந்து தயாரிக்கப்பட்டு, செய்யப்படும் இறக்குமதி குறித்து பெரும் அச்சம் உள்ளது. இதனால் இந்திய உற்பத்தி துறை பெரிதும் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

உண்மையில் இதன் ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்து கொண்டால், நிச்சயம் இறக்குமதிகள் அதிகரிக்கும். இதன் மூலம் உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

15 countries to sign world’s biggest trade pact today, india in this list?

China and 14 countries to sign world’s biggest trade pact today, India pulled out of RCEP talks in November last year
Story first published: Sunday, November 15, 2020, 16:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X