3 ஈரான் வங்கிகளுக்கு கதவை இழுத்து மூடிய உள்துறை அமைச்சகம்!

ஈரானைச் சேர்ந்த பெர்சியன் வங்கி, பாங்க் பசர்காட், எக்திசாட் இ நொவீன் வங்கி ஆகியவை இந்தியாவில் கிளைகள் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.
ஆனால் இந்த வங்கிகள் மூலம் இந்தியாவில் பண மோசடி, தீவிரவாத நிதியுதவிப் பரிமாற்றம் ஆகியவை நடந்து விடலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் சந்தேகம் கொண்டது. இதையடுத்து இந்த வங்கிகளால் இந்தியாவுக்குப் பாதுகாப்பில்லை என்று தெரிவித்து விட்டது.
இதையடுத்து இந்த வங்கிகள் தங்களது கிளைகளை இந்தியாவில் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வங்கிகள் மூலம் இந்திய நிறுவனங்கள் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளத் தயங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
பாரீஸில் அமைந்துள்ள சர்வதேச நிதிக் கையாளுகை டாஸ்க் போர்ஸின் வழிகாட்டு நெறிமுறைகளை இந்தியா ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications