மதுரை ரயில் நிலையத்தில் பாராமரிப்பு பணி: ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மதுரை ரயில் நிலையத்தில் பாராமரிப்பு பணி: ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
விருதுநகர்: மதுரை ரயில் நிலையத்தில் பாராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அங்கிருந்து இயக்கப்படும் ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மதுரை ரயில் நிலையத்தில் சிக்னல், பாயிண்ட் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் மதுரையில் இருந்து இயக்கப்படும் பல ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், கூடல்நகர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல செங்கோடடை-மதுரை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் நேற்று முதல் வரும் 20ம் தேதி வரை இரு மார்க்கங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை அதிகளவில் பயணிகள் பயன்படுத்தி வருவதால், பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு, மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதுரை ரயில் நிலையத்தின் பராமரிப்பு பணிகள் முடியும் வரை விருதுநகரில் இருந்து அந்த ரயில் இயக்கப்படும் என்று மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 

ஆனால் விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் வெகு தொலைவில் உள்ளது. இதனால் ரயிலில் வந்திறங்கும் பயணிகளுக்கு தகுந்த பஸ் வசதி இல்லை. இதையடுத்து ரயில்கள் வந்து சேரும் நேரங்களில், ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: madurai மதுரை
English summary

Trains cancelled due to works in Madurai railway station | மதுரை ரயில் நிலையத்தில் பாராமரிப்பு பணி: ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

Trains schedule were cancelled due to signal, point works in Madurai railway station. So Sengottai-Madurai train will start from Virudhu Nagar, railway officals said.
Story first published: Thursday, October 11, 2012, 14:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X