பங்குச் சந்தையில் நீண்ட கால முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்வது எப்படி?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்குச் சந்தையில் நீண்ட கால முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்வது எப்படி?
செல்வத்தை சேர்ப்பதைவிட அதைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். சிறிது முயற்சி செய்தால் அதிக பணத்தை உருவாக்கலாம். பணத்தை உருவாக்கும் கலை ஒன்றும் ரகசியமானது அல்ல. நமக்கு இருக்கும் வாய்ப்புகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்தாலே போதும். ஆனால், இருக்கும் வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் தான் இருக்கின்றது சூட்சமம்.

தற்போதைய சூழ்நிலையில், வங்கி சேமிப்புக் கணக்கில் உங்களுடைய பணத்தை வைத்து பாதுகாப்பது ஒன்றும் சிறந்த முடிவாக தெரியவில்லை. ஏனெனில் இருப்பதிலேயே வங்கியின் சேமிப்புக் கணக்கிற்குதான் குறைந்த வட்டி கிடைக்கின்றது. ஆனாலும் நம்மில் பலர் வங்கி சேமிப்பை தவிர்த்து பிற வாய்ப்புகளை பார்ப்பதில்லை. அவர்களுக்கு வருவாயை விட பாதுகாப்பு மிகவும் முக்கியம். வங்கி கணக்குகளைத் தவிர்த்து பாதுகாப்பான பிற முதலீட்டு வாய்புகள் சந்தையில் கொட்டிக்கிடக்கின்றன.

 

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. எனினும் பெரும்பாலான மக்கள் பங்குச் சந்தையை சார்ந்துள்ள அபாயங்கள் காரணமாக அத்தகைய முதலீடுகளை விரும்புவதில்லை. நீண்ட கால நோக்கத்தில் பங்குச் சந்தை முதலீடு என்பது மிகவும் பாதுகாப்பானது, மேலும் பங்குச் சந்தைகளில் கிடைக்கும் வருவாயானது வங்கி முதலீட்டில் கிடைக்கும் வருவாயை விட அதிகமாகும். எனினும் பங்குச் சந்தையில் நீண்ட கால முதலீட்டாளராக இருப்பது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. நீண்ட கால நோக்கத்தில் சில விஷயங்கள் உங்களுடயை எதிர்பார்ப்புகளுக்கு எதிராக திரும்பலாம்.

 

உதாரணமாக பெரும்பாலான மக்கள் பங்குகளின் விலை உச்சத்தில் இருக்கும் பொழுது அதை வாங்கி, அவை குறைந்த விலையில் விற்பனையாகும் பொழுது விற்பது போன்ற தவறான செய்கையினால் தங்களூடைய வருவாய் மற்றும் முதலீட்டை இழக்கின்றனர்.

நிதி ஆலோசகர்கள் உங்களுடைய பங்குச் சந்தை முதலீடு சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கலாம். எனினும், அவர்களால் உங்களுடைய பங்குகள் மிகக் குறைந்த விலையில் விற்பனையாகும் பொழுது சரியாக வழி காட்ட முடியாது. உங்களுடைய பங்குகள் மிகக் குறைந்த விலையில் விற்பனையாகும் பொழுது நிதி ஆலோசகர்கள் தரும் ஒரே ஆலோசனை, பங்குகளை அப்படியே வைத்திருங்கள் என்பதாகும்.

நீங்கள் அவர்களுடைய ஆலோசனையை பின்பற்ற தயாராக இருந்தாலும் அந்த முடிவை எடுக்கத் தூண்டிய காரணங்களை அலசி ஆராய்வது மிகவும் முக்கியம். அதன் பின்னர் நீங்கள் மாற்று நடவடிக்கைகளை பற்றி யோசிக்கலாம். இங்கே நீங்கள் நீண்ட கால நோக்கில் பங்குச் சந்தையில் முதலீடு செய்து ஒரு மிகப் பெரிய ஃபோர்ட்போலியோவை உருவாக்க உதவும் சில விதிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

பரவலான முதலீடு

முதலீடு செய்யும் பொழுது, பல்வேறு பங்குகள், கடன் பத்திரங்கள், பரஸ்பர நிதிகள் மற்றும் பிற முதலீடு வாய்ப்புகளில் பரவலாக முதலீடு செய்து உங்களுடைய முதலீட்டிற்கான அபாயத்தை கணிசமாக குறைத்திடுங்கள். உங்களுடைய மொத்த முதலீட்டு அளவில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக எந்த ஒரு பங்கு அல்லது பிற முதலீடு வாய்ப்புகளில் முதலீடு செய்யாதீர்கள்.

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா, ஆசியா மற்றும் பிற நம்பிக்கைக்குரிய சந்தைகளில் முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் உங்களுடைய பணத்தை கமாடட்டி நிதிகள், ஹெட்ஜ் நிதிகள் மற்றும் சொத்து நிதிகளில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுடைய முதலீட்டை பரவலாக்க முடியும். இந்த அணூகுமுறை மூலம் ஒரு சில குறிப்பிட்ட துறைகள் மோசமாக பாதிக்கப்படும் சூழ்நிலை வந்தாலும் உங்களுடைய முதலீட்டை பாதுகாக்க முடியும்.

ஆராய்ச்சிக்கு பின் முதலீடு

முதலீடு செய்வதற்கு முன்னர் பல்வேறு இடங்களில் இருந்து ஆலோசனைகளைப் பெற தவறாதீர்கள். பொதுவாக உங்களுக்கு யாருடைய உத்திகள் மற்றும் பொருட்கள் பிடிக்குமோ, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள்.

இப்போதெல்லாம், இணையத்தில் உள்ள பல்வேறு வலைத்தளங்கள் முதலீட்டு நிறுவனங்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை தருகின்றன. அந்த தகவல்களை பயன்படுத்தி நீங்கள் முதலீடு செய்யப்போகும் நிறுவனம் மற்றும் திட்டத்தை நன்றாக பகுப்பாய்ந்து அதை புரிந்து கொள்ளுங்கள். கடந்த கால செயல்திறன் என்பது ஒரு நிறுவனம் மற்றும் நிதி திட்டத்தின் எதிர்கால செயல்திறனுக்கான உத்தரவாதம் ஆகாது. எனினும் கடந்த சில ஆண்டு செயல்பாடுகள் மற்றும் அவர்கள் வசூலிக்கும் மேலாண்மை கட்டணம் போன்றவற்றை பயன்படுத்தி நாம் ஒரு முடிவு எடுக்கலாம்.

தேவையற்ற முதலீடுகளை கழித்து கட்டுவது

எப்பொழுதுமே உங்களுடைய முதலீடுகளை கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும், மேலும் உங்களுடைய முதலீடுகளை சந்தை குறியீடு எண்களுடன் ஒப்பிடுங்கள். உங்களுடைய பங்குகளில் சில நன்றாக செயல்படுகின்றது எனில் அதை விற்று லாபத்தை பெற்றிடுங்கள். நீங்கள் நீண்ட கால நோக்கத்தில் முதலீட்டை தொடர விரும்பினால் உங்களூக்கு பலமடங்கு லாபம் தரும் பங்குகளை மட்டும் தனியாக பாதுகாத்திடுங்கள். உங்களூடைய பங்குகளில் வெற்றியாளரை பொக்கிஷமாகக் கருதி அதை தனியே பாதுகாத்திடுங்கள். மறுபுறம், உங்களுடைய் ஃபோர்ட்போலியோவில் உள்ள செயல்படாத பங்குகளை தள்ளி விட தயங்காதீர்கள். மோசமாக செயல்படும் பங்குகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வரும் என்கிற சலனமே உங்களுக்கு வேண்டாம், ஏனெனில் அது ஒரு மோசமான உக்தி ஆகும். சில ஆரம்ப கால இழப்பு என்பது பிந்தய கால கட்டத்தில் கிடைக்கும் மிகப் பெரிய நஷ்டத்தை விட மேலானது. உணர்ச்சி மிகுதியால் சில பங்குகளை எப்பொழுதுமே வைத்திருக்காதீர்கள்.

லாப மறு முதலீடு

அதிசயமாக, பெரும்பாலான ஃபோர்ட்போலியோக்களின் வளர்ச்சி என்பது அவற்றில் கிடைக்கும் லாபத்தை மறு முதலீடு செய்வதன் மூலமே சாத்தியப்பட்டிருக்கின்றது. ஃபோர்ட்போலியோ வளர்ச்சியில் பங்குகளின் வளர்ச்சி என்பது ஒரு சிறிய காரணி மட்டுமே. 3 சதவீத வருவாய் என்பது மிகச் சிறிதாக தோன்றினாலும் இது நீண்ட கால நோக்கத்தில் மிகப் பெரிய மாற்றத்தை தருகின்றது. டிவிடெண்ட்டை கொடுக்கும் சில பங்குகளை தனியாக தேர்ந்தெடுத்து அவற்றில் முதலீடு செய்யவும்.

நீண்ட கால நோக்கம்

நீங்கள் உங்களுடைய செயல்படாத பங்குகளை சந்தை உச்சத்தில் இருக்கும் பொழுது விற்று விடுங்கள். சந்தை மேலே எழும்பும் பொழுது பிற பங்குகளை வாங்கி உங்களுடைய ஃபோர்ட்போலியோவை பலப் படுத்தவும். நீண்ட காலமாக சந்தையில் இருக்கும் உங்களுக்கான ஒரு அறிவுரை. அடிக்கடி பங்குகளை வாங்கி விற்காதீர்கள். அவ்வாறு நீங்கள் செய்யும் பொழுது உங்களுடைய முதலீட்டின் பெரும் பகுதி கமிஷனாக கரைந்து விடும். ஃபேஷன் மற்றும் விளம்பரங்களின் பின் செல்லாமல் உங்களுடைய போர்ட்ஃபோலியோவை புத்திசாலித்தனமாக மாற்றி அமைக்க வேண்டும். சந்தை சரிவடைவதைக் கண்டு பயப்பட வேண்டாம். ஏனெனில் சரிவடையும் சந்தை என்பது தைரியமான முதலீட்டாளருக்கு வாங்கும் சந்தர்பத்தை அளிக்கின்றது.

இது நீண்ட கால நோக்கத்தில் முதலீட்டை எதிர்நோக்கும் முதலீட்டாளர்களுக்கான சில படிகள் ஆகும். மேலும், உங்களுக்கு தேவைப்படும் பொழுது உங்களுடைய முதலீட்டை விற்க தயங்காதீர்கள். ஏனெனில் உங்கள் குடும்பத்தின் நிதி பாதுகாப்பிற்காகத்தான் நீங்கள் சம்பாதிக்கின்றீர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to choose best long term investment options in India?

In the current scenario, keeping your savings in bank account doesn't seem a sound decision as they offer measly interest rates. It could be safe to keep all your savings in your bank account, but amount won't grow adequately over there.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X