20 வருடங்களுக்கு பிறகு முதலீட்டு பத்திரங்களை வெளியிட்டுள்ள என்டிபிசி!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டின் மிகப்பெரும் மின் உற்பத்தியாளரான என்டிபிசி-இன் 1,750 கோடி ருபாய் மதிப்புள்ள வரியில்லாப் பத்திரங்கள் டிசம்பர் 3 ஆம் தேதி அன்று வெளியிட்டது. இருபது வருடங்களுக்குப் பிறகு இவ்வரசு நிறுவனம் வெளியிடும் முதல் பத்திர வெளியீடு இது என்று கூறப்படுகிறது.

 

இவ்வெளியீடு, டிசம்பர் 3 அன்று துவங்கி, டிசம்பர் 16 ஆம் தேதி முடிவடையும் என்று என்டிபிசி-யின் தலைமை நிர்வாக இயக்குனர் அருப் ராய் சௌதுரி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இந்த வெளியீட்டின் கீழ் வரியில்லாத, திரும்பப்பெறக்கூடிய மாற்றிக்கொள்ள இயலாத பத்திரங்களை அந்நிறுவனம் வெளியிடும்.

"அடிப்படை வெளியீடு 1,000 கோடி ருபாய் பெறுமானமுள்ளது, மேலும் தேவை அதிகரித்தால் 750 கோடி ருபாய் வரை பத்திரங்கள் வெளியீட்டை அனுமதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆக இப்பத்திர வெளியிட்டின் மொத்தம் ரூ.1,750 கோடி மதிப்புள்ளது" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் பெறப்படும் நிதி, தலைமை செலவிங்களுக்கும், நடப்பிலுள்ள திட்டங்களுக்கான மறுகடன் பெறவும் பயன்படுத்தப்படும்.

20 வருடங்களுக்கு பிறகு முதலீட்டு பத்திரங்களை வெளியிட்டுள்ள என்டிபிசி!!!

இவ்வெளியீடு குறித்து அந்நிறுவனம் கடந்த மாதம் டெல்லி மற்றும் ஹரியானா மாநில பதிவாளர்களிடம் நிறுவன விவரக் கையேட்டினை அளித்திருப்பதாகவும், மேலும் மும்பை பங்குச்சந்தை (BSE), தேசிய பங்குச்சந்தை (NSE) மற்றும் செபியிடமும் விவரக் கையேட்டினை அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தது.

ஐசிஐசிஐ செச்யுரிடீஸ், ஏ கே கேப்பிடல் சர்விசஸ், ஆக்சிஸ் கேப்பிடல், எஸ்பிஐ கேப்பிடல் மற்றும் கோடக் மஹிந்திரா கேப்பிடல் ஆகியவவை இவ்வெளியீட்டின் மேலாண்மை பிரதிநிதிகளாக உள்ளன.

தற்போது, என்டிபிசி ஏறக்குறைய 42,000 மெகாவாட் உற்பத்தித்திறனை கொண்டு, மேலும் 14,000 மெகாவாட் அளவிற்கு உற்பத்தித் திறனை 2016-17 ஆண்டு இறுதிக்குள் அதிகரிக்கவும் திட்டம் கொண்டுள்ளது.

என்டிபிசி-யின் பங்குகள் மும்பை பங்குசந்தையில் ரூபாய் 144.60 என்ற விலையில் விற்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

NTPC's tax-free bond issue to open Dec 3

Country's largest power producer NTPC open its bond issue to raise up to Rs 1,750 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X