போன்சி திட்டங்களை கண்டு ஏமாற வேண்டாம்!!! உஷார்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பெருமளவில் பண புழக்கங்கள் நடக்கும் இடத்தில் மோசடியை உண்டாக்கும் முதலீட்டு திட்டங்கள் பெருமளவில் வளர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. இத்தாலிய நாட்டை சேர்ந்த சார்லஸ் போன்சி என்பவர், அமெரிக்கா நாட்டிற்கு செல்ல முற்பட்ட போது அவரது நாட்டின் பண மதிப்பு அமெரிக்காவை விட குறைவாக இருப்பதை உணர்ந்து அவரது நாட்டிலிருந்து குறைந்த விலைக்கு தபால் தலைகள் வாங்கிச் சென்று அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்று விட்டார். ஆனால் இத்தகைய விதத்தில் பணம் சம்பாதிக்க நினைத்த பலர் இந்த வித்தையை அறியாமல் பல நஷ்டங்களை சந்தித்துள்ளனர். எனவே இத்தகைய மோசடிகளுக்கு இவரின் பெயரையே வைக்கப்பட்டது.

 

சரி போன்சி திட்டம் எப்படி வேலை செய்கின்றது?

பொதுவாக போன்சி திட்டம் என்பது பலதரப்படட் மக்களிடமிருந்து பணத்தை சேர்த்து அந்த பணத்தின் வருமானம் மூலம் கிடைக்கும் லாபத்தை அவர்களிடம் கொடுக்காமல் அந்த நிறுவனம் அதை எடுத்துக் கொள்வதையே (திருட்டு) போன்சி திட்டத்தை குறிக்கிறது.

போன்சி திட்டங்களை கண்டு ஏமாற வேண்டாம்!!! உஷார்...

அந்த பணத்தை செலுத்தியவருக்கு புதிதாக சேர்க்கப்படும் நபர்களிடம் கிடைக்கும் முதலீட்டை வைத்து அவர்களது பங்கு என்று கொடுக்கின்றனர். அல்லது அந்நிறுவனத்தின் முதலீட்டைக் கொண்டு அவர்களின் லாபம் என்று ஒரு சில மாதங்கள் கொடுக்கின்றனர். இவ்வாறு முதலில் நிறைய பணத்தை திரட்டி ஒருவரின் வருவாயை மற்றொருவரின் முதலீட்டை எடுத்து கொடுத்து பின்பு தேவையான அளவு பணம் வந்ததும், தேவையான அளவு வாடிக்கையாளர்களை சேர்த்ததும் முதல் சில வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுத்து விட்டு மிதமுள்ள பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடுவார்கள்.

இத்தகைய நிறுவனங்கள் தங்களுக்கு புது வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்கள் செலுத்தும் பணம் ஆகியவை வந்து கொண்டிருக்கும் வரை இந்த திட்டத்தை நடத்துவார்கள். புதிதாக யாரும் வராத போது, அவர்களது திட்டம் தடைபடும் போதும் மற்றும் பெருமளவு பணம் செலுத்தப் படாத போதும் அதன் உரிமையாளர் வாடிக்கையாளர்களுக்கு சேர வேண்டிய பணத்தை செலுத்த முடியாமல் போய்விடுகிறது.

 

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டும், இத்தகைய கவர்ச்சிகர திட்டங்களை நம்பியும், பணத்தை செலுத்தும் நிறுவனம் பற்றி சரி வர தகவல் அறியாமலும் அதிக லாபத்தை நம்பி கடினமாக உழைத்த பணத்தை கொடுத்து மக்கள் ஏமாந்து போகின்றனர்.

போன்ஸிக்கு பூட்டு போடும் 'செபி'

இந்த நிலை மாறுவதற்காக மற்றும் இத்தகைய நிறுவனங்கள் செயல் படாமல் நிறுத்தப்படவும் மற்றும் இத்திட்டங்களை கைவிடவும் நடவடிக்கை எடுக்க செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ் போர்ட் ஆஃப் இந்தியா (செபி) கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 100 கோடிக்கு மேல் மக்களிடமிருந்து பணத்தை வாங்கும் அமைப்புகள் இந்த நிறுவனம் கண்காணித்து வருகிறது. இது போன்ற திட்டத்தை கூட்டு முதலீட்டுத் திட்ட பிரிவில் இணைக்க கோரிக்கை வைத்துள்ளது.

ஊடகங்களின் அறிக்கைகளின் படி இத்தகைய திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் ஏமாற்றும் போது அவர்கள் திரட்டிய பணத்தை விட மூன்று மடங்கு பணத்தை செலுத்த வேண்டியதாக தன்டணை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are Ponzi Schemes?

Ponzi schemes are fradulent investment schemes that operate in the large financial world.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X