மஹிந்திரா இன்ஜினியரிங் டெக் மஹிந்திராவுடன் இணைய உறுதி ஒப்புதல் பெற்றுள்ளது!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: டெக் மஹிந்திரா- மஹிந்திரா இன்ஜினியரிங் சர்வீசஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணைந்தது. இதில் பல விதிமீறல்கள் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இப்புகாரை ஏற்று விசாரனை நடத்திய பங்கு சந்தை அமைப்புகள், விசாரனைக்கு முடிவுக்கு வந்தது.

 

டெக் மஹிந்திராவுடன், மஹிந்திரா இன்ஜினியரிங் சர்வீசஸ் நிறுவனத்தின் இணைப்பில் எவ்வித பாதுகாப்பு விதிமீறல்களும் நடைபெறவில்லை என்று கூறி, முன்னணி பங்கு மாற்றகங்களான பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகியவை இந்த இணைப்புக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளன.

 

டெக் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிட்டெட் (எம்இஎஸ்) குழுமங்கள் கடந்த நவம்பரில் இந்த திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளன.

மஹிந்திரா இன்ஜினியரிங் டெக் மஹிந்திராவுடன் இணைய உறுதி ஒப்புதல் பெற்றுள்ளது!

பங்கு மாற்றங்கள்

கடந்த வெள்ளிக்கிழமையன்று டெக் மஹிந்திராவுடன் தொடர்பு கொண்ட பங்கு மாற்றகங்கள், முன்வைக்கப்பட்டுள்ள இத்தீர்மானத்திற்கு "ஆட்சேபணையற்ற ஒப்புதலை" அளிப்பதாகத் தெரிவித்துள்ளன.

இத்திட்டத்தைப் பற்றி சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி கூறுகையில், பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் வெப்சைட்டில் சமர்ப்பித்துள்ள ‘ஃபேர்னெஸ் ஒப்பீனியனை' டிஸ்ப்ளே செய்வது அவசியம் என்றும் இந்த பங்கு மாற்றகங்கள் குறித்து தெரிவித்துள்ளன.

இந்நிறுவனத்தின் சார்பில், "இத்திட்டம் பாதுகாப்பு சட்டங்களையோ அல்லது பங்குச் சந்தை விதிமுறைகளையோ எவ்வகையிலும் மீறவோ, புறக்கணிக்கவோ, கட்டுப்படுத்தவோ முனையவில்லை". என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

"ஆதலால், நாங்கள் லிஸ்டிங் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒதுக்கீடுகளுக்கு உட்பட்ட லிஸ்டிங்/ டீலிஸ்டிங்/ தொடர் லிஸ்டிங் ஒழுங்குவிதிகள் தொடர்பான விஷயங்களை ஓரளவுக்கு பார்வையிட்டு விட்டு "ஆட்சபணை இல்லை" என்ற எங்கள் முடிவை தெரிவித்து, அதன் மூலம் இந்நிறுவனம் இத்திட்ட அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வழிவகை செய்துள்ளோம்." என்று இந்த பங்கு மாற்றகங்கள் ஒத்த குரலில் தங்களின் ஒருமித்த கருத்தை பதிவு செய்துள்ளன.

இது தவிர, மஹிந்திரா காம்போஸிட்களை மஹிந்திரா ஃபோர்ஜிங்களுடன் இணைப்பதற்கும் இந்த பங்கு மாற்றகங்கள் பச்சைக் கொடி காட்டியுள்ளன.

விதிமுறைகளின் படி, இணைப்பு அல்லது முறிவு யுத்திகளை செயலாக்க முற்படும் நிறுவனங்கள் ‘ஆட்சபணை இல்லை சான்றிதழை' பங்கு மாற்றகங்களிடமிருந்து பெற வேண்டியது அவசியமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tech Mahindra gets nod to merge Mahindra Engineering

Leading bourses BSE and NSE have given approval for the merger of Mahindra Engineering Services with Tech Mahindra saying that the amalgamation does not violate securities laws norm.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X