தங்க இறக்குமதி தளர்வின் எதிரொலியாக தங்கம் விலை ரூ.800 சரிவு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தங்க இறக்குமதியில் ரிசர்வ் வங்கி சில சலுகைகளை அறிவித்தை தொடர்ந்து இன்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இன்றைய வர்த்தக நிலவரப்படி 10 கிராம் தங்கம் 800 ரூபாய் குறைந்து 27,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் அடுத்த சில நாட்களில் தங்கம் விலை மேலும் குறையும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

 

தங்க இறக்குமதி தளர்வின் எதிரொலியாக தங்கம் விலை ரூ.800 சரிவு!!

2013ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தை அடுத்து, இன்று தான் தங்கத்தின் விலை அதிகளவில் குறைந்துள்ளது.

இன்று காலை ரிசர்வ் வங்கி தங்க இறக்குமதில் 80:20 சட்டத்தில் சில முக்கிய தளர்வுகளை அறிவித்த உடன் தங்கத்தின் விலையில் இத்தகைய பெரும் விலை சரிவை யாரும் எதிர்பார்க்க இல்லை. இதனால் தங்கம் விலை அடுத்த சில மாதங்களில் கணிசமாக குறைய அதிக வாய்ப்புள்ளது. எனவே தங்கத்தின் விலை சாமானிய மக்களும் வாங்கு நிலைக்கு குறைந்தால் மிகவும் மகிழ்ச்சி.

இறக்குமதி தளர்வை பற்றி, வோல்டு கோல்டு கவுன்சிலின் நிர்வாக இயக்குனர் பி.ஆர். சோமசுந்தரம் தெரிவிக்கையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு மிகவும் சரியான தருனத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சந்தையில் நிலவும் தங்கம் விநியோகம் மற்றும் பற்றாக்குறை பிரச்சனை கண்டிப்பாக குறையும். மேலும் இதனால் தங்கத்தின் விலை குறையவும் அதிகளவு வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall sharply as RBI allows seven more agencies to import

Gold prices fell sharply by Rs 800 to Rs 27,800 per 10 gm in the spot market on Thursday, a day after the Reserve Bank of India eased import rules and allowed seven more agencies to import the precious metal.
Story first published: Thursday, May 22, 2014, 18:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X