வரி சலுகை அதிகம் தரும் சூப்பரான முதலீட்டு திட்டங்கள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் வங்கிச் சேவையை அளிக்க நீண்ட நாள் காத்து கொண்டு இருந்த இந்திய தபால் துறைக்கு ஒரு விடிவுகாலம் இன்று பிறந்தது. "வரும்.. ஆனா வராது..."என்ற பானியில் முழுமையான வங்கிச் சேவை அளிக்க முடியாவிட்டாலும் சிறப்பான சேவையை அளிக்க இந்திய தபால் துறை ஆயத்தமாகியுள்ளது. நிதியமைச்சகத்தின் கடும் எதிர்ப்புகளையும் மீறி இந்திய தபால் துறைக்கு லிமிடெட் பாக்கிங் லைசன்ஸ் வழங்கியுள்ளது ரிசர்வ் வங்கி.

 

இந்நிலையில் இந்திய மக்கள் அனைவரும் உபயோகப்படுத்தும் தபால் நிலையத்தில் சூப்பரான முதலீட்டு திட்டங்கள் உள்ளது. அதில் டாப் டக்கர், தூள் டக்கர் என வர்ணிக்கப்படும் சில திட்டங்களை இப்போது பார்போம். லாபம் அதிகம் இல்லை என்றாலும் ("ப்ரீத்திக்கு நான் கேரண்டி") உங்கள் பணத்திற்கு கேரண்டியாக உங்களுக்கு லாபத்துடன் கிடைக்கும்.

பொது பிராவிடண்ட் பண்ட்

பொது பிராவிடண்ட் பண்ட்

தபால் துறையில் மிகவும் பிரபலமான திட்டம் பொது பிராவிடண்ட் பண்ட். இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு 8.7 சதவீதம் வட்டியும், 15 ஆண்டு முதிர்வு காலம் கொண்டது. மேலும் முதலீட்டின் வட்டி ஒவ்வொரு வருடத்தின் முடிவில் உங்கள் முதலீட்டு தொகையுடன் சேர்க்கப்படும். இதுமட்டும் அல்லாமல் இந்த முதலீட்டு திட்டத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு 80சி வரி சட்டத்தின் கீழ் வரிச் சலுகை கிடைக்கும்.

நேஷ்னல் சேவிங் சர்டிபிகேட்

நேஷ்னல் சேவிங் சர்டிபிகேட்

இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 8.5 சதவீத வட்டியும், 80ம வரி சட்டத்தின் கீழ் வரிச் சலுகையும் கிடைக்கிறது. மேலும் உங்கள் முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முதலீட்டில் சேர்க்கப்படும். முதிர்வு காலம் 5 வருடம்.

ரேக்கரிங் டெப்பாசிட் அக்கவுன்ட்
 

ரேக்கரிங் டெப்பாசிட் அக்கவுன்ட்

ரேக்கரிங் டெப்பாசிட் திட்டத்திற்கும் முதிர்வு காலம் 5 வருடம் தான். இத்திட்டத்தின் முதலீட்டுக்கு 8.4 வட்டி கிடைக்கும் அதை ஆறு மாதத்திற்கு ஒரு முறை முதலீட்டுடன் சேர்க்கப்படும். மேலும் இத்திட்டத்தை எந்த ஒரு தபால் நிலைத்திற்கும் மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.

டைம் டெப்பாசிட் அக்கவுன்ட்

டைம் டெப்பாசிட் அக்கவுன்ட்

இத்திட்டம் மிகவும் தளர்வானது, 1, 2, 3 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட முதலீட்டிற்கு 8.40 சதவீத வட்டியம், 5 வருட முதிர்வு காலம் கொண்ட திட்டத்திற்கு 8.5 சதவீத வட்டியும் அளிக்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தை நம் விருப்பத்திற்கு ஏற்ப முரித்துக்கொள்ளும் வசதியும் உண்டு.

மாத வருமான திட்டம்

மாத வருமான திட்டம்

இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் முதலீட்டிற்கு 8.4 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் உரிமையாளருக்கோ அல்லது நாமினிக்கோ முதலீட்டின் ஒரு பகுதியை மாதந்தொரும் வழங்கப்படும்.

முத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்

முத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்

இத்திட்டம் முத்த குடிமக்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. இத்திட்ட முதலீட்டிற்கு 9.20 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A quick look at interest rates on 6 post office savings schemes

Post office savings schemes are preferred among millions of household for the safety they offer. However, interest rates on post office savings schemes is not always the very best, when compared to banks and company fixed deposits, but some of them are attractive because they offer tax breaks.
Story first published: Friday, May 23, 2014, 17:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X