மாம்பழம் உற்பத்தியை அதிகரிக்க ரூ. 50 கோடி முதலீடு: கோகோ கோலா இந்தியா

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கோகோ கோலா நிறுவனம் இந்தியாவின் ஜெயின் நீர் பாசன நிறுவனத்துடன் இணைந்து 25,000 விவசாயிகளின் உதவியுடன் இந்தியாவில் மாம்பழம் உற்பத்தியை அதிகரிக்க உள்ளது.

மாம்பழம் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் ஜெயின் நீர் பாசன நிறுவனம் மற்றும் கோகோ கோலா நிறுவனம் இணைந்து 2011ஆம் ஆண்டு "உன்னதி" என்ற அமைப்பை துவங்கியது. இம்முயற்சி வெற்றியடைந்ததை அடுத்து இந்த அமைப்பை பெரிதாக்கும் முயற்சியில் இரு நிறுவனங்களும் இறங்கியுள்ளது.

50 கோடி முதலீடு

50 கோடி முதலீடு

இரு நிறுவனங்களும் இணைந்து அடுத்து வரும் 10 வருடங்களில் அல்ட்ரா ஹெய் டென்சிட்டி பிளன்டேஷன் டெக்னாலஜியை பயன்படுத்தி மாம்பழம் உற்பத்தியை அதிகரிக்க 50 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த உற்பத்தி திட்டத்தில் 25,000 விவசாயிகள் 50,000 ஏக்கர் பரப்பளவில் மாம்பழத்தை சாகுபடி செய்து வருகின்றனர்.

இணைப்பு

இணைப்பு

இத்தகைய திட்டங்களின் மூலம் விவசாயிகள் மற்றும் பன்நாட்டு நிறுவனங்களுக்கும் இடையே நல்ல ஒரு நட்புறவு வளர ஏதுவாக உள்ளது என கோகோ கோலா நிறுவனத்தின் இந்தியா பிரிவான HCCBPL தலைவர் டி.கிருஷ்னகுமார் தெரிவித்தார்.

என்ன லாபம்??

என்ன லாபம்??

இத்தகைய திட்டங்களின் மூலம் தரமான மாம்பழங்களை உற்பத்தி செய்து கோகோ கோலா நிறுவனத்தின் தயாரிப்புகளான மாசா மற்றும் மினிட் மெய்டு மேங்கோ ஆகியவற்றை தயாரிக்க உதவும். மேலும் இதன் மூலம் விவசாயிகளுக்கு உறுதி மற்றும் அதிகப்படியான லாபம் கிடைக்கும்.

HCCBPL நிறுவனம்

HCCBPL நிறுவனம்

கோகோ கோலா நிறுவனத்தின் பாட்டலிங் நிறுவனத்தில் ஒன்றான HCCBPL நிறுவனம் இந்தியாவில் தனது தேவைகளை பூர்த்தி செய்கிறது. இந்நிறுவனம் அட்லான்டாவில் செயல்படும் பாட்டலிங் இண்வஸ்மென்ட் நிறுவனத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coca-Cola to step up mango juice business

In collaboration with Jain Irrigation, beverage maker to rope in 25,000 farmers to boost mango production.
Story first published: Tuesday, May 27, 2014, 17:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X