பங்கு சந்தை முதலீட்டில் அதிகம் ஆர்வம் காட்டும் அமிதாப் பச்சன்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பங்கு முதலீட்டு நிறுவனமான ஸ்டாம்பீட் கேபிடல் நிறுவனத்திடமிருந்து ரூ. 1.21 கோடி மதிப்புடைய 1.1 இலட்சம் பங்குகளை கைபற்றியுள்ளார்.

 

பங்கு சந்தை அறிக்கையில் கிடைத்த தகவல்களின் படி, பிக் பி (Big B) என்று பரவலாக அழைக்கப்பட்டு வரும் அமிதாப் பச்சன் - திறந்தவெளி சந்தை வழியாக நேற்று ஸ்டாம்பீட் கேபிடல் நிறுவனத்திடம் இருந்து சுமார் 1.1 இலட்ச பங்குகளை கைபற்றியுள்ளதாக தெரிகிறது. ஒரு பங்கின் விலை ரூ.109.92 என்ற வீதத்தில் வாங்கப்பட்ட பங்குகளின் மதிப்பு ரூ.1.21 கோடி.

ஸ்டாம்பீட் கேபிடல்

ஸ்டாம்பீட் கேபிடல்

ஸ்டாம்பீட் கேபிடல் நிறுவனம் பெருநிறுவனங்களுக்கு நிதியியல் மற்றும் மூதலீட்டு ஆலோசனை வழங்கி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்நிறுவனத்தின் பங்குகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

பங்கு விலை மதிப்பு

பங்கு விலை மதிப்பு

மும்பை பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனம் தற்போது ஒரு பங்கின் விலை ரூ.123.40 என்ற விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. 2014ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இப்பங்கின் விலை 37 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த இந்த பங்குகள் 5 மாத காலகட்டத்தில் தற்போது 124 வரை உயர்ந்துள்ளது.

அமிதாப் பச்சன்
 

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன் கடந்த 2 வருட காலமாக பங்கு சந்தையில் அதிகம் நாட்டும் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. இவர் ஸ்டாம்பீட் கேபிடல் மட்டுமல்லாமல், ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளையும் வைத்துள்ளார். இவர் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 0.09 சதவீதம் அல்லது 62,794 பங்குகளை வைத்துள்ளார்.

ஜஸ்ட் டயல்

ஜஸ்ட் டயல்

ஜஸ்ட் டயல் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட IPO தகவலில், 2011-ம் ஆண்டு ரூ.10 விலையில் 67,794 பங்குகள் பச்சனுக்கு வழங்கப்பட்டிருந்தன, இதன் உண்மையான மூலதன மதிப்பு ரூ.6.27 இலட்சம் மட்டுமே. அவருடைய ஜஸ்ட் டயல் பங்குகளின் இன்றைய விலையில் ரூ.9 கோடியாக வளர்ந்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amitabh Bachchan buys 1.1 lakh shares in Stampede Capital

Bollywood superstar Amitabh Bachchan has picked up 1.1 lakh shares of brokerage house Stampede Capital Ltd for an estimated ₹1.21 crore. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X