4 மாத சரிவில் ரூபாய் மதிப்பு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கடந்த இருவார காலமாக இறக்குமதியாளர்களின் அதிகப்படியான டாலர் தேவை மற்றும் பங்குச்சந்தையில் டாலர் முதலீடு குறைந்து வருவதால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ருபாயின் மதிப்பு 4 மாத சரிவை எட்டியுள்ளது.

பங்குச்சந்தையில் டாலர் முதலீடு குறைந்ததற்கு முக்கிய காரணம், இந்தியாவில் கார்பரேட் நிறுவனங்களின் வருவாய் அதிகளவில் குறைந்ததால் முதலீடு அளவு குறைந்து வருகிறது. இதன் படி டாலர் முதலீடு சுமார் 7 சதவீதம் குறைந்துள்ளது.

4 மாத சரிவில் ரூபாய் மதிப்பு..

இந்நிலையில் பத்திர முதலீட்டு லாப அளவு 7.86 சதவீதம் உயர்ந்து இரு மாத உயர்வை சந்தித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பை குறைக்க ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுக்க தவறுகிறது. தற்போதைய நிலையில் இதன் டாலர் மதிப்பில் உள்ள ஏற்ற இறக்கங்களை மட்டுமே ரிசர்வ் வங்கி சமாளித்து வருகிறது.

இன்றைய நாணய சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 42 பைசா சரிந்து 63.72 ரூபாயாக குறைந்துள்ளது.

மேலும் இதே நிலை அடுத்த சில வாரங்களுக்கு தொடர்ந்தால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 65 ரூபாயை எட்டும் என சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rupee at four-month low, RBI may step in near 65/$ band

The partially convertible rupee is at 63.72, down 42 paise, against its previous close of 63.30. It bounced back after hitting an intraday low of 63.71, its lowest level since December 2014.
Story first published: Thursday, April 30, 2015, 18:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X