பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், அயர்லாந்து நாட்டின் ஒரு துவக்க நிறுவனத்தில் சுமார் 10 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.
இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தில் இறங்கவும், இதன் மூலம் நிறுவனத்தின் செயல்பாட்டைப் புதிய துறைக்கு ஈட்டுச்செல்லவும் இன்போசிஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.

இதற்காக உலகநாடுகளில் (இந்தியா நிறுவனங்கள் உட்பட) உள்ள துவக்க மென்பொருள் நிறுவனங்களில் சுமார் 500 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய நிதியை ஒதுக்கியது.
மேலும் அயர்லாந்து நாட்டின் அலைட் ஐரிஷ் பாங்க்ஸ் வங்கியின் மூலோபாயக் கூட்டாளியாக இன்போசிஸ் நிறுவனம் இணைந்துள்ளதாக இந்நிறுவனம் தெரவித்துள்ளது. அலைட் ஐரிஷ் பாங்க் நிறுவனம் அயர்லாந்து மற்றும் பிரட்டனில் நிதிச் சேவை அளித்து வருகிறது.
இப்புதிய கூட்டணியின் மூலம் புதிய சந்தையில் நிறுவனம் இறங்க உள்ளதாக இன்போசிஸ் நிறுவனத்தின் நிதி சேவைத் துறையின் நிர்வாகத் துணை தலைவர் மோஹித் ஜோஷி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications