டெல்லி: உலகின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டோயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கிளை நிறுவனமான டோயோட்டா கிரிலோஸ்கார் நிறுவனத்தின் மூலம் 1000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
டோயோட்டா நிறுவனம் இந்தியாவில் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையும், புதிய திட்டங்களையும் நிறுவ திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு வருடத்தில் இந்நிறுவனம் 1000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
புதிய பிராண்ட்
இந்த 1000 கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்தின் டோயோட்டா நிறுவனத்தின் Daihatsu என்னும் புதிய பிராண்ட் வாகனங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்நிறுவநம் போராடி வருவதாக இந்நிறுவன தலைவர் டகிஷி உச்சியமாடா தெரிவித்தார்.
Daihatsu நிறுவனம்
ஜாப்பான் நாட்டை தலைமையாக கொண்டு இயங்கும் டோயோட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனங்களின் Daihatsu நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் சிறிய வகை கார்களை தயாரிப்பதில் பிரபலமானவை.
இந்திய சந்தை
மேலும் டகிஷி உச்சியமாடா கூறுகையில், இந்திய சந்தை எப்போதும் எங்களுக்கு மகிழ்ச்சியான கண்ணோட்டத்தையே காட்டுகிறது. இதனால் இந்தியாவில் எங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் உற்பத்தி அதிகரிக்கவும் 1,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
500 கோடி லாபம்..
இந்திய சந்தை வர்த்தகத்தில் மட்டும் டோயோட்டா கிரிலோஸ்கார் நிறுவனம் 15ஆம் நிதியாண்டில் சுமார் 500 கோடி ரூபாய் லாபத்தை பார்த்துள்ளது.
புதிய திட்டம்
நடப்பு நிதியானண்டில் இந்நிறுவனம் புதிய கார்களை வரிசையாக அறிமுகப்படுத்துவதை விடுத்து இந்தியாவின் முக்கிய பகுதிகளில் தனது விற்பனை கிளைகளை திறக்கும் பணியில் முழுமையாக இறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications