40 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக இந்தியாவில் யுரேனியம் இறக்குமதி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகில் வேகமாக வளர்ந்தும் நாடுகளில் ஒன்றாக உயர்ந்துள்ள இந்தியா, தனது அணு உலை எண்ணிக்கை மற்றும் அதன் செயல்பாட்டை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

 

இதற்கான பிரதமர் மோடியின் கனடா பயணத்தில் cameco corp நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாகக் கனடாவில் இருந்து யுரேனியத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

டிசம்பர் மாதம்

டிசம்பர் மாதம்

கனடாவில் சாஸ்கடூன் பகுதியைச் சேர்ந்த cameco corp நிறுவனத்தின் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள யுரேனியம், வருகிற டிசம்பர் மாதத்தில் இந்தியா வந்தடையும் எனத் தெரிகிறது.

20 கண்டைனர்கள்

20 கண்டைனர்கள்

தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள யுரேனியம் 20 கண்டைனர்களில் இந்தியாவிற்கு வருகிறது. மேலும் அடுத்தச் சில வருடங்களில் இதன் அளவு குறிப்பித்தக்க அளவுகளில் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு போக்குவரத்து மற்றும் நிர்வாகம்

சரக்கு போக்குவரத்து மற்றும் நிர்வாகம்

இந்த ஏற்றுமதி குறித்துக் கேமிகோ கார்ப் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், யுரேனியத்தின் ஏற்றுமதிக்கு ஏதுவான வழிமுறை மற்றும் நிர்வாகத் திட்ட முறைகள் வடிவமைக்கும் விதமாகவே மிகவும் குறைவான அளவிலான யுரேனியத்தை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு
 

2020ஆம் ஆண்டு

2020ஆம் ஆண்டுக்குள் இந்த ஏற்றுமதி அளவுகள் அதிகளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கேமிகோ கார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

7.1 மில்லியன் பவுன்ட்

7.1 மில்லியன் பவுன்ட்

கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடியின் கனடா பயணத்தில் கேமிகோ கார்ப் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்குச் சுமார் 7.1 மில்லியன் பவுன்ட் யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.

74 சதவீத விரிவாக்கம்

74 சதவீத விரிவாக்கம்

இதன் மூலம் இந்தியாவில் 2019ஆம் ஆண்டுக்குள் அணு உலை செயல்பாட்டைச் சுமார் 74 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India said to import first Canadian uranium in 40 years

India is poised to receive its first uranium from Canada in about four decades as Asia’s third-biggest economy seeks to expand its fleet of atomic reactors, according to people with knowledge of the shipment.
Story first published: Tuesday, October 20, 2015, 17:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X