சட்டைகளில் மட்டும் பிராண்ட் இல்லை.. நாடுகளுக்கும் பிராண்ட் உண்டு.. இந்தியாவிற்கு 7வது இடம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்றைய உலகில் சட்டை, செருப்பு, கார் போன்றவற்றைப் பிராண்ட் பெயரைப் பார்த்து வாங்கும் நமக்கும், கூடுதல் வசதியாக நாம் வாழும் நாட்டிற்கும் பிராண்ட் மதிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிராண்ட் பைனான்ஸ் என்னும் ஒரு நிதி ஆய்வு நிறுவனம் உலக நாடுகளுக்குப் பொருட்களின் விற்பனை அடிப்படையில், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தை வைத்துப் பிராண்ட் மதிப்பை அளித்துள்ளது.

இதன் படி நேஷனல் பிராண்ட் என்ற பெயரில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள நாடுகளில் நிலவரத்தைப் பார்ப்போம் வாங்க..

இந்தியா

இந்தியா

உலக நாட்டுகளைச் சில திட்டமுறைகள் மற்றும் கணக்கீட்டுடன் பிராண்ட் பைனான்ஸ் வெளியிட்டள்ள இப்பட்டியலில், இந்தியா 7-வது இடம் பிடித்துள்ளது. கடந்த வருடம் 8வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் இந்தியாவின் பிராண்ட் மதிப்பு 2.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

 

வளர்ச்சியில் முதல் இடம்

வளர்ச்சியில் முதல் இடம்

அதேபோல் டாப் 20 நாடுகளின் பட்டியலில் இந்தியா, 32 சதவீத வளர்ச்சியுடன் அதிக வளர்ச்சி பெற்ர நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

வழக்கம் போல் நேஷனல் பிராண்ட் பட்டியலில் அமெரிக்கா 19.7 பில்லியன் டாலர் மதிப்புடன் முதல் இடத்தைப் படித்துள்ளது.

அதைத் தொடர்ந்து சீனா (6.3 பில்லியன் டாலர்), ஜெர்மனி ஆகியவை முதல் 3 இடங்களைப் படித்துள்ளது.

 

இந்தியா.. பிரான்ஸ்..

இந்தியா.. பிரான்ஸ்..

இப்பட்டியில் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் மட்டுமே ஒரு இடம் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டுக்கான நேஷனல் பிராண்ட் பட்டியலில் பிரட்டன் 4வது இடமும், ஜப்பான் 5வது இடமும், பிரான்ஸ் 6வது இடமும், இந்தியா 7வது இடத்தைப் பிடித்துள்ளது.

 

ஜெர்மனிக்கு ஃபோக்ஸ்வேகன் பிரச்சனை..

ஜெர்மனிக்கு ஃபோக்ஸ்வேகன் பிரச்சனை..

ஃபோக்ஸ்வேகன் பிரச்சினையால் ஜெர்மனி சரிவு கண்டிருக்கிறது. அந்த நாடு தொடர்ந்து மூன்றாம் இடத்தில் இருந்தாலும் பிராண்ட்களின் மதிப்பு 4 சதவீதம் சரிந்திருக்கிறது.

சீனாவால் அமெரிக்க முதல் இடம்

சீனாவால் அமெரிக்க முதல் இடம்

சீனாவின் பங்குச்சந்தை சரிவு மற்றும் மந்த நிலையும் அமெரிக்கா முதல் இடத்தில் இருப்பதற்குக் காரணம் என்றும் ‘பிராண்ட் பைனான்ஸ்' தெரிவித்திருக்கிறது.

பிரிக்ஸ் நாடுகள்

பிரிக்ஸ் நாடுகள்


பிரிக்ஸ் நாடுகளில் இந்தியாவைத் தவிரப் பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் மதிப்பு குறைந்துள்ளது.

பிராண்ட் மதிப்பீடுகள்

பிராண்ட் மதிப்பீடுகள்

ஒரு நாட்டில் புதிதாக வர்த்தகத்தைத் துவங்க எண்ணம் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு இத்தகையை மதிப்பீடுகள் மிகப்பெரிய உதவியாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் பிராண்ட் மதிப்பீடுகள் மூலம் ஆடம்பர சந்தையை விரிவாக்கம் செய்ய நிறுவனங்களுக்குப் புதிய யோசனைகளை அளிக்கும்.

இத்தகைய மதிப்பீடுகளால் பட்டியலில் கீழ் தளத்தில் உள்ள நாட்டுகளுக்குப் புதிய வர்த்தகம் கிடைக்காமல் கூடப் போக வாய்ப்புகள் உண்டு.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இது பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் ரேங் கார்டு போலத்தான்.

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India becomes world's 7th most valued 'nation brand' US on top

India has moved up one position to become the world's seventh most valued 'nation brand', with an increase of 32 per cent in its brand value to $2.1 billion.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X