இந்தியாவில் ஏகே-47 ரகத் துப்பாக்கியை தயாரிக்க ரஷ்ய நிறுவனம் ஆர்வம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரஷ்யா நாட்டின் முன்னணி துப்பாக்கி தயாரிப்பு நிறுவனமான Kalashnikov, இந்திய நிறுவன கூட்டணியுடன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஏகே-47 ரகத் துப்பாக்கியை தயாரிக்கவும், தனது தொழில்நுட்பத்தைப் பகிரவும் தயாராகியுள்ளது.

 

இதற்கான பேச்சுவார்த்தை இரு நிறுவனங்களும் மிகவும் ரகசிய முறையில் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏகே-47 துப்பாக்கி

ஏகே-47 துப்பாக்கி

20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பாக்கிகளில் ஏகே-47 ரகத் துப்பாக்கிகளில் முதன்மையானவை. பல ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா இந்தச் சிறந்த துப்பாக்கிகளின் ஏற்றுமதியை சில முக்கியக் காரணங்களுக்காக அதிகாரப்பூர்வமாக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

2008ஆம் ஆண்டு முதலே பல இந்திய நிறுவனங்கள் Kalashnikov துப்பாக்கிகளைத் தயாரிக்க ஆர்வம்காட்டியது.

இந்நிலையில் 2015ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் இந்தியாவில் இதன் தயாரிப்பை துவங்கத் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது என இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி Alexey Krivoruchko செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

 

தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்
 

தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்

இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தில் எங்கள் நிறுவனம் பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் எந்த ஒரு நிறுவனத்தின் பெயரையும் வெளியிட நாங்கள் விரும்பவில்லை என Kalashnikov நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய பாதுகாப்புத் துறை

இந்திய பாதுகாப்புத் துறை

இதுவரை இந்திய பாதுகாப்புத் துறையிடம் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை, அப்படி ஏதேனும் தேவைப்பட்டால் எங்களுடைய இந்திய கூட்டணி நிறுவனங்கள் அதற்கான பணிகளை மேற்கொள்ளும் எனவும் இந்த ரஷ்ய நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலீடு

முதலீடு

இப்பேச்சுவார்த்தை முழுமையாக வெற்றியடைந்தால், இரு நிறுவனங்களும் இணைந்து சுமார் 100 மில்லியன் டாலர் அதாவது 650 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம் என Alexey Krivoruchko தெரிவித்தார்.

உற்பத்தி அளவுகள்

உற்பத்தி அளவுகள்

ஆரம்பகட்டமாக இக்கூட்டணி முயற்சியில் ஒரு வருடத்திற்குச் சுமார் 50,000 துப்பாக்கிகளை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம். மேலும் அடுத்தடுத்த வருடங்களில் இதன் உற்பத்தி அளவுகளைத் தொடர்ந்து அதிகரிக்க முடிவு செய்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia's AK-47 maker in talks for JV in India to manufacture weapons

Russia's Kalashnikov Concern, makers of AK-47 assault rifles, is in advanced discussions with Indian companies to manufacture certain weapons here and is open to sharing technology with local partners.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X