முதல் முறையாக '1 பில்லியன் டாலர்' வர்த்தகம்.. விற்பனையில் தெறிக்க விடும் 'ஆப்பிள்'..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழும் ஆப்பிள், இந்திய சந்தையில் முதல் முறையாக 1 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

 

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் முதல் முறையாக 1 பில்லியன் டாலர் விற்பனை வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாகப் புதன்கிழமை ஆப்பிள் நிறுவனம், நிறுவன பதிவகத்திற்கு (RoC) சமர்ப்பித்த அறிக்கையில் அறிவித்திருந்தது.

விற்பனை 44% உயர்வு

விற்பனை 44% உயர்வு

ஐபோன் மற்றும் ஐபேட் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், இந்திய சந்தையில் பல வருடங்களாக இயங்கி வந்தாலும், கடந்த சில வருடங்களாக மட்டுமே இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரித்து வருகிறது.

இதன் படி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை அளவுகள் சுமார் 44 சதவீதம் அதிகரித்து 6,472.89 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனையைப் பெற்றுள்ளது.

கடந்த வருடம் இதன் அளவு 4,500.35 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

லாபம்

லாபம்

இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த லாப அளவு 242.85 கோடி ரூபாயாக உயர்ந்து இரட்டிப்பாகியுள்ளது.

அதிரடி ஆஃபர்
 

அதிரடி ஆஃபர்

நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனத்தின் புதிய வெளியீடான ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் போன்களின் விற்பனையை அதிகரிக்கப் புதிய விற்பனை கிளைகள், புதிய மார்கெட்டிங் யுத்திகள், அதிரடியான விளம்பரங்கள் என அசத்தியுள்ளது.

அதுமட்டும் அல்லாமல் பைபேக் திட்டம், ஈஎம்ஐ மற்றும் தள்ளுபடி திட்டங்கள் மூலம் இதன் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது.

தேவைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

தேவைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

மேலும் இந்திய சந்தையில் ஒவ்வொரு காலாண்டிலும் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் தேவை சுமார் 35 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது.

ஆப்பிள் இந்தியா

ஆப்பிள் இந்தியா

ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய கிளையில் 99 சதவீத பங்குகள் மற்றும் கட்டுப்பாடு உரிமைகள் என அனைத்தும் ஆப்பிள் ஆப்ரேஷன்ஸ் இண்டர்நேஷ்ன்ஸ் நிறுவனத்திடமும், 1% மட்டும் ஆப்பிள் ஆப்ரேஷன்ஸ் ஐரோப்பாவிடம் உள்ளது.

2011ஆம் ஆண்டு முதல்..

2011ஆம் ஆண்டு முதல்..

இந்திய சந்தையில் அதன் வர்த்தகம் மற்றும் விற்பனைக்கான திட்ட வடிவங்களை ஆப்பிள் நிறுவனம் 2011ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் மாற்றியமைத்தது.

இந்திய சந்தை

இந்திய சந்தை

சுமார் 9 சதவீத சந்தை வர்த்தகத்துடன் இந்திய மொபைல் விற்பனை சந்தையில் ஆப்பிள் நிறுவனம் 3வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் சாம்சங் மற்றும் மைக்ரோமாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple crosses $1-billion sales mark in India

Apple crossed the $1-billion sales mark in Indian operations for the first time in the year ended March, according to results filed with the Registrar of Companies (RoC) on Wednesday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X